This entry is in the series 20020728_Issue


தேவையான பொருட்கள்

இத்தாலிக்குச் சென்று 3 முட்டைகள் வாங்கிவரவும். வசதி இல்லை என்றால், சாதாரண முட்டைகளை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்

பட்டன் காளான் 1/2 கோப்பை

வெங்காயம் 1/4 கோப்பை

உப்பு தேவைக்கேற்ப

மஞ்சள் 1/4 தேக்கரண்டி

மிளகு 1 தேக்கரண்டி

பால் 2 மேஜைக்கரண்டி

தக்காளி 1/4 கோப்பை

எண்ணெய் வறுக்க

செய்முறை

காளான்களை 3 நிமிடம் கொதிக்கும் நீரில் வேகவைத்து எடுத்துக்கொண்டு சிறுசிறு சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும். இத்துடன் முட்டை, வெட்டிய வெங்காயம், தக்காளி துண்டுகள் ஆகியவற்றைச் சேர்க்கவும். இத்துடன் உப்பு, மஞ்சள், மிளகு பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும். எண்ணெய் ஊற்றி ஒரு வாணலியில் சுட வைக்கவும். இதில் இந்தக் கலவையை ஊற்றி, நன்றாக பொன்னிறம் வரும் வரை வறுக்கவும்.

Series Navigation