இது பெரிய எழுத்து மற்றும் மலையாளக் கதைகள்

This entry is part [part not set] of 24 in the series 20100108_Issue

ஹெச்.ஜி.ரசூல்தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரிமாவட்டக் கிளை சார்பில்வெளியீட்டரங்க சிறப்புநிகழ்வு 2 – 1 2010 சனி மாலை நாகர்கோவில் அசிசிவளாக அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் வி.சிவராமன் தலைமை வகித்தார்.தாமரை ஆசிரியர் குழு எச்.ஹாமீம் முஸ்தபா வரவேற்றார்.

ஏ.எம்.சாலனின் தேர்ந்தெடுத்த மலையாளச் சிறுகதைகள் தமிழ் மொழிபெயர்ப்புநூலை புனித சவேரியார் கல்லூரி பேராசிரியர் நா.இராமச்சந்திரன் வெளியிட கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ஆர்.பிரேம்குமார்முதற்பிரதி பெற்றுக் கொண்டார்.நூல்குறித்த உரையை முனைவர் முன்வைத்தார்.தகழி,மாதவிக்குட்டி,எம்.டி.வாசுதேவன்நாயர்,சாராஜோஸப் இ.பி.சிறீகுமார், புனத்தில்குஞ்ஞப்துல்லா உல்ளிட்ட படைப்பாளிகளின் 19 கதைகள் இதில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.ஏ.எம்.சாலன் தனது மொழிபெயர்ப்பு அனுபவங்கள் குறித்து உரையாடினார்.

இந்நிகழ்வில் மற்றொரு அறிமுக அம்சமாக திருநெல்வேலியிலிருந்து புதிதாக வெளிவந்துள்ள இது பெரிய எழுத்து மாத இதழ் அறிமுக மதிப்பீட்டுரை இடம்பெற்றது. மதிப்பீட்டுரையை ஹெச்.ஜி.ரசூல் நிகழ்த்தினார்.

சமகால சிற்றிதழ், இலக்கிய இதழ்களிலிருந்து மாறுபட்டதொரு போக்கை இது பெரிய எழுத்து பெற்றுள்ளது. பின்னைக்காலனிய கோட்பாட்டின்

சாரமிதழ் முழுவதும் நிறைந்துள்ளது. ஐரோப்பிய மையவாதத்திற்கு மாற்றான ஆப்ரோஅமெரிக்க கறுப்பின்குரலைவெளிப்படுத்தும் கார்லெம்125வதுவீதி. மறுகாலனியப் பொருளாதார நசுக்கலுக்கு உள்ளாகும் இந்திய விவசாய நசிவைஅடையாளப்படுத்தும் பிடி- மரபணுகத்தரிக்காய்,அடித்தளமக்களின் வழிபாட்டுரிமைக்கு எதிரான் சாதீய மனோபாவமும், பந்தப்புளி கிராமத்தில் தேவேந்திரர்கள் மாரியம்மன் கோவிலில்வழிபடும் உரிமையைப் பெற்றதற்காக கம்பளத்து நாயக்கர் சமூகம் அந்த அம்மனையேவணங்காமல் விலக்கிவைத்த சம்பவத்தை உள்ளடக்கிய கள ஆய்வு,ஆதிப்பழங்குடிகளின் புனைவுலகத்தைகதையாகச்சொல்லுதல்,பண்பாட்டுமானுடவியல்,மாற்று

மருத்துவம், மாற்று உணவுமுறையை முன்வைக்கும்,காணிகளின் கல்மூடல்,காந்தாலிமிளகு,வயல் அறுவடைமுடிந்தபின் நிகழ்த்தும் வெடித்தேங்காய், சோற்றுக்கத்தாளைமூலம் மாதவிடாய்வலிபோக்க தயாரிக்கும் குமரிப்பக்குவம் என பல மாற்று அடையாளங்களைக் கொண்டுள்ளது இந்த ஆய்வுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது.இதழின் ஆசிரியர் முனைவர் டி.தர்மராஜன் நிகழ்வின் இறுதியில் தமிழ் அடையாளமும் அடித்தளமக்கள் வரலாறும் குறித்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்வுக்கு எம் விஜயகுமார் நன்றி கூறினார்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்