ஆய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்களின் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

அறிவிப்பு


ஆய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்களின் வெளியீட்டு விழா

21.07.2007 மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரி சொக்கநாதன்பேட்டையில் அமைந்துள்ள தமிழ் திருமண மண்டபத்தில் ஆய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்களின் வெளியீட்டு விழா
மிகச்சிறப்புடன் நடைபெற உள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தா.பெ.அ.தேன்மொழி பாடவும்,வரவேற்புரையைக் கோ.மணிமாறன் ஆற்றவும்,தலைமையுரையைக் கோ.தாமரைக்கோ நிகழ்த்தவும் உள்ளனர்.

தென்மொழி,தமிழ்ச்சிட்டு இதழ்களின் ஆசிரியர் தாமரைப்பெருஞ்சித்திரனார் தொடக்க வாழ்த்துரை வழங்குகிறார். அறிஞர் செழியன்,அறிஞர் தமிழநம்பி ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

தென்மார்க்கைச் சேர்ந்த அன்றன் அவர்கள் நூல்களை வெளியிடவும்
தஞ்சை மருத்துவக்கல்லூரிப் பேராசிரியர் மு.குலாம் முகைதீன் நூல்களைப்பெறவும் உள்ளனர்.

தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியன் சிறப்புப் பேருரையாற்ற உள்ளார்.

ஆய்வறிஞர் ப.அருளி அவர்கள் ஏற்புரையாற்றவும்,சீனு.தமிழ்மணி அவர்கள் நன்றியுரையாற்றவுமுள்ளனர்.

வேரியம் பதிப்பகம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச்செய்துள்ளது.

செய்தி:
முனைவர் மு.இளங்கோவன்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி
புதுச்சேரி,இந்தியா


+ 9442029053
muelangovan@gmail.com
muelangovan.blogspot.com

Series Navigation