அழகான மரம் (இந்திய பாரம்பரியக் கல்வி பற்றி)

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

சுபாஷ் கக்


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறிய நகரங்களில் வளர்க்கப்பட்ட நான் படிப்பறிவு அற்ற மக்களை அடிக்கடி சந்தித்தேன். 100 வருடங்களுக்கு முன்னாலேயே பிரிட்டிஷ் அரசாங்கம் தனது கல்வித்திட்டத்தைத் தொடங்கியும், இந்தியாவின் எழுதப்படிக்கத்தெரிந்தவர்களின் சதவீதம் 30 என்று பள்ளிப்புத்தகங்கள் கூறின. பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னால், இந்தியா ஏறத்தாழ முழுக்க படிப்பறிவு அற்ற தேசமாக இருந்தது என்பதை இந்தப் புத்தகங்கள் உள்ளிடையாகத் தெரிவித்தன. இந்த எண்ணம் மிகவும் மன வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது. 18ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் முழுக்க படிப்பறிவற்ற நிலைமையை உடனே நான் நம்பியிருக்கக்கூடாது. 250 வருடங்களுக்கு முன்னர், பிரிட்டிஷார் இந்தியாவின் கதவை அதன் வியாபாரத்தில் பங்கு வேண்டி தட்டியபோது இந்தியா பணக்கார நாடாகத்தான் இருந்தது. The Rise and Fall of the Great Powers : Economic Change and Military Conflict from 1500 to 2000 என்ற புத்தகத்தில் பால் கென்னடி அவர்கள் 1750இல் இந்தியாவின் பங்கு உலக வர்த்தகத்தில் சுமார் 25 சதவீதமாக இருந்தது என்று கணக்கிடுகிறார்.

25 சதவீதத்தை நாம் புரிந்து கொள்வதற்கு, இது அமெரிக்காவின் இன்றைய உலக பங்கு என்று அறியவேண்டும். இன்று இந்தியாவின் உலக வியாபாரத்தில் பங்கு வெறும் அரை சதவீதமே. இந்தியா உண்மையிலேயே மிகவும் வளமையான நாடாக அன்று இருந்தது. அதன் வளமை அதன் சமூகத்தில் நிச்சயம் எதிரொலித்திருக்கும். மக்களின் படிப்பறிவு விஷயத்திலும் அது நிச்சயம் எதிரொலித்திருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, மத்தியகால இந்தியாவில் கல்வி என்பது அதிகம் ஆராயப்படாத ஒரு துறை. தர்மபால் எழுதிய ‘அழகான மரம் ‘ என்ற புத்தகத்துக்கு நன்றியுடன், நாம் இந்தியாவில் பிரிட்டிஷார் வருவதற்கு முன்னால் எவ்வாறு கல்வித்துறை இருந்தது என்பதை அறியலாம். இந்த புத்தகம் 1800களின் ஆரம்பத்தில் பிரிட்டிஷார் தயாரித்த ஆவணங்களின் துணையோடு இந்தியாவில் கல்வி ஏறத்தாழ அனைவருக்குமானதாக பரவலானதாக இருந்தது என்று அறிய முடிகிறது. எல்லா கிராமங்களிலும் இருக்கும் கோவில்களோடோ, மசூதியோடோ இணைந்து பள்ளிக்கூடம் இருந்தது என்றும் எல்லா வகுப்பு குழந்தைகளும் இந்தப் பள்ளிகளில் படித்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

வங்காளத்தில் சுமார் 100000 பள்ளிகள் இருந்தனவென்றும், ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் 500 குழந்தைகள் படித்துவந்தார்கள் என்றும் டபிள்யூ. ஆடம் அவர்கள் 1835இல் எழுதினார். அம்மைக்கு எதிராக தடுப்பு மருந்து கொடுக்கும் மருத்துவ அமைப்பும் இருப்பதை அவர் விளக்குகிறார். மெட்ராஸில் இருந்த பள்ளிகளைப் பற்றி எழுதிய சர் தாமஸ் மண்ரோ (1826) அதே போன்ற ஒரு புள்ளிவிவரத்தை வழங்குகிறார். பஞ்சாபில் ராஜா ரஞ்சித் சிங் அவர்களின் கீழே இதே போன்றதொரு பரந்த கல்வித்திட்டம் இருந்தது.

இந்த புள்ளிவிவரங்கள், அன்றைய படிப்பறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தைத் தொட்டிருக்கும் என்று கூறுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் எடுக்கப்பட்ட அந்த காலத்திலிருந்து பிரிட்டிஷார் தங்களுடைய ஆட்சியை வலிமையாக நிறுவிய காலம் வரை கல்வியைப் பொறுத்த மட்டில் தொடர்ந்த அழிவே என யூகிக்கலாம்.

தர்மபால் காட்டும் ஆவணங்களில் இருப்பவற்றில் ஒரு முக்கியமான ஆவணம், சர் நாயர் அவர்கள் பிரிட்டிஷ் கல்வித்திட்டம் இந்தியாவை படிப்பறிவற்ற நாடாக ஆக்கிவருகிறது என்று விமர்சித்த ஆவணம். ‘உயர்கல்வியையும் நடுத்தரக் கல்வியையும் சுருக்கவும், உயர்கல்வியை பணக்காரர்களுக்கே உரியதாக ஆக்குவதுமாக அரசாங்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. படிப்பறிவைக் குறைக்க விதிகள் உருவாக்கப்படுகின்றன, அதுவும் முக்கியமாக ஏழைக் குழந்தைகளுக்கு இடையே. பள்ளிக்கூடங்களில் சேர்வதற்கான பணம் வேண்டுமென்றே மிகவும் அதிகமாக ஆக்கப்படுகிறது. மிகவும் குறைந்த பணம் செலுத்துவதே மிகவும் கடினமாக இருக்கும் ஏழைக்குழந்தைகளை இந்த திட்டங்கள் வெகுவாகப் பாதிக்கும். பொதுமக்களுக்கு அடிப்படைக் கல்வியும், பணக்காரர்களுக்கு உயர்கல்வியும் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கப்படுகிறது ‘

லாகூர் ஆங்கில பேராசிரியரான டாக்டர் லைட்னர் அவர்கள், ‘ பிரிட்டிஷாரின் காரியங்களால், பஞ்சாபில் கல்வி முடக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் ஏறத்தாழ அழிக்கப்பட்டுவிட்டது. இதனை மீண்டும் உயிர்ப்பிக்க எந்த முயற்சிகள் எடுத்தாலும் அது உதாசீனப்படுத்தப்படுகிறது அல்லது வக்கிரப்படுத்தப்படுகிறது ‘ என்று கூறினார்.

தர்மபால் அவர்கள் கூறும் ஆவணங்கள் கேள்வி கேட்கமுடியாதவை. இதனிலிருந்து கிடைக்கும் ஒரே விடை, 250 வருடங்களுக்கு முன்னால், இந்தியாவின் அடிப்படைக் கல்வி அமைப்பு வேலை செய்துகொண்டிருந்தது என்பதுதான். அதைவிட முக்கியமான விஷயம், அன்றைய ஐரோப்பாவை விட அன்றைய இந்தியாவில் கல்வி பரந்திருந்தது என்பதே.

பின்னோக்கி பார்க்கும்போது, பாடசாலைகளில் கல்வி திருப்திகரமாக இல்லை எனறு கூறலாம். தர்மபால் அவர்கள் அன்றைய பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்களை பெயர் குறிப்பிட்டிருக்கிறார். இவை கணிதம், இலக்கியம், தத்துவம் ஆகியவற்றில் சிறந்த பயிற்சியையே அளித்துள்ளன. அறிவியல் மற்றும் வரலாறு இந்தப் பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிக்கப்படவில்லை என்பதை குறையாகச் சொல்லலாம். ஆனால் இந்தப் பள்ளிக்கூட கல்வி மோசமானது அல்ல. அன்றைய நிலையை பார்த்தோமானால் இது சிறப்பான வேலையையே செய்துவந்தது என்றே கூறலாம்.

பள்ளிக்கூடம் தாண்டி கல்லூரிகள் அதிகம் இல்லை என்பதை நிச்சயம் ஒரு குறையாகச் சொல்லலாம். தட்சசீலம் மற்றும் நாலந்தா பல்கலைக்கழகங்கள் அழிக்கப்பட்டபின்னால், அவைகளை ஒப்பிடும்வண்ணம் எந்த பல்கலைக்கழகமும் உருவாகவில்லை. இப்படிப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இல்லாமல், இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு வெகுவேகமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் கொடுத்த சவால்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

இந்தியாவின் பாரம்பரிய கல்வித்திட்டத்தை விவரிக்க மகாத்மா காந்தி இங்கிலாந்தில் பேசும்போது உபயோகித்த வார்த்தைதான் ‘அழகான மரம் ‘ என்பது. இந்த மரம் பிரிட்டிஷாரால் அழிக்கப்பட்டது என்று அங்கு கூறினார். காந்தியின் குற்றப்பத்திரிக்கைக்கு உதவியாக தர்மபால் அவர்கள் ஆவணங்களை சேகரித்துக் கொடுத்துள்ளார்.

பிரிட்டிஷ் கொண்டுவந்த மக்காலே திட்டம் இந்தியாவின் பாரம்பரியக் கல்வியை நிர்மூலம் செய்ததும், இந்தியர்களின் பொது ஞாபகத்திலிருந்தே இந்த கல்வி பற்றிய ஞாபகக்கூறுகளை அழிப்பதில் வெற்றிபெற்றார்கள். அத்தோடு கூடவே, அறிவியற்பூர்வமான முற்போக்கு சிந்தனை, தொழிழ்துறை மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றையும் அழித்து விட்டது. Indian Science and Technology in Eighteenth Century: Some Contemporary European Accounts என்ற பெயர்கொண்ட இன்னொரு முக்கியமான புத்தகத்தையும் தர்மபால் எழுதினார். இது இந்திய தொழில்நுட்பம் எவ்வாறு சில முக்கியமான துறைகளில் முன்னோடியாக இருந்தது என்பதை ஆவணப்பூர்வமாக விவரிக்கிறார்.

கலாச்சார வரலாற்றின் அழிவுக்கு காலனியாதிக்க கருத்துருவங்கள் மட்டும் காரணமல்ல. நம் கலாச்சார ஞாபகத்திலிருந்து வேகமாகும் அழிவை இன்றைய information age உம் அளிக்கிறது. சி முஸஸ் என்னும் கனடா கணிதத்துறை நிபுணர் இப்படிப்பட்ட அழிவுக்கு எதிராக தன்னுடைய ஒரு சிறு முயற்சியைச் செய்திருக்கிறார். பானிப்பட்டில் 1821இல் பிறந்த ராமச்சந்திரா Ramchundra (born 1821 in Panipat) என்ற சிறந்த இந்திய கணிதத்துறை ஆய்வாளரைப் பற்றியும், அவரது மேக்ஸிமா மினிமா பற்றிய புத்தகத்தையும் பற்றி எழுதியிருக்கிறார். லண்டனில் அகஸ்டஸ் டி மோர்கன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி 1859இல் எழுதியிருக்கிறார். மூஸஸ் அவர்களது படைப்பு Mathematical Intelligencer in 1998 இல் இது பற்றி வெளிவந்தது. ராம்சந்திரா அவர்களது உழைப்பு மூஸஸ் அவர்களுக்கு ஒரு எதேச்சையாகக் கிடைக்கும் வரைக்கும் அவரைப் பற்றி முழுமையாக மறந்துவிட்டார்கள்.

முஸஸ் என்னை ஒரு வருடத்துக்கு முன்னர் கூப்பிட்டார். தான் எவ்வாறு இந்தியாவைப் பற்றி ஆர்வமுள்ளவனாக ஆனேன் என்று என்னிடம் விளக்கினார். காலனியாதிக்கவாதிகளும் மார்க்ஸியர்களும் வெகுகாலமாகக் குறிப்பிட்டதுபோல ஏன் இந்தியர்கள் அறிவியலை வளர்க்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ததாக கூறினார். ஆனால், உண்மையான ஆவணங்களை ஆராயும்போது எவ்வாறு ஒரு ஆழமான அறிவியல் துறை இந்தியாவில் இருந்து வந்திருக்கிறது என்பதும், அது எவ்வாறு பாரபட்சமான மற்றும் உதவாக்கரை வரலாற்றாளர்களால் திரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டார்.

மூஸஸ் அவர்கள் அப்படி குறிப்பிடவில்லை என்றாலும், டி மோர்கன் அவர்களது அடிப்படை வேலையான ஸிம்பாலிக் லாஜிக் என்பது இந்திய சிந்தனை முறையான நவ்யா நியாயா – விலிருந்து எடுக்கப்பட்டதா என்று ஒருவர் கேட்கலாம். ராம்சந்திராவின் புத்தகத்துக்கு முன்னுரை எழுதும்போது, தனக்கு இந்திய பாரம்பரிய ஏரணம் (லாஜிக்) தெரியும் என்று குறிப்பிடுகிறார். ‘மிகப்பழங்காலத்தியதான தத்துவம் சார்ந்த மொழி உலகத்தின் அதிசயங்களில் ஒன்றாக இங்கு இருக்கிறது. இதனருகே குறிப்பிடவேண்டுமென்றால், கிரேக்கத்தைக் குறிப்பிடலாம். இது ஒருவேளை கிரேக்கத்தின் தந்தையாகவும் இருக்கலாம். கணிதத்தை இவர்களிடமிருந்தே நாம் பெறுகிறோம். ( ‘There exists in India, under circumstances which prove a very high antiquity, a philosophical language (Sanskrit) which is one of the wonders of the world, and which is a near collateral of the Greek, if not its parent form. From those who wrote in this language we derive our system of arithmetic, and the algebra which is the most powerful instrument of modern analysis. In this language we find a system of logic and metaphysics. ‘) என்று குறிப்பிடுகிறார்.

இறுதியாக, நம் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அக்கறையின்மை காரணமாக உருவாகும் ஞாபகமறதியும் இறுதியாக இருக்கிறது. இது முழு மறதியையே உருவாக்குகிறது. ஒரு சில அதிர்ஷ்டகாலங்களில் நமது மறக்கப்பட்ட ஆவணங்கள் சிலவேளைகளில் கிடைக்கின்றன. சீனிவாச ராமானுஜத்தின் காணாமல் போன குறிப்பேடுகள் (1887-1920) இவற்றில் சில. அவரது காலத்திலேயே ராமானுஜன் இரண்டாவது நியூட்டன் என்று அழைக்கப்பட்டார். அவரது முழு வீச்சும், அவரது காணாமல் போன குறிப்பேடுகள் 80களில் கண்டறியப்பட்டு பதிப்பிக்கப்பட்டபின்னரே தெரியவந்தது.

‘முடிவின்மையை அறிந்த மானுடன் ‘ The Man Who Knew Infinity என்ற பெயரில் ராபர்ட் கானிகெல் எழுதிய புத்தகத்தைப் படிக்கலாம். Ramanujan: Letters and Commentary, edited by Bruce Berndt and Robert Rankin. உம் படிக்கலாம்.

***

Series Navigation

சுபாஷ் கக்

சுபாஷ் கக்