திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060505_Issue

அரசியலும் சமூகமும்

உண்மையைத் தேடியலைந்தபோது

கற்பகவிநாயகம் புதுச்சேரி வேதபுரீஸ்வரரும், இடிக்கப்பட்ட கோவிலும் ***************************************** "புதுச்சேரியில் ஈச்வரன் தர்மராஜா கோவில் இடிக்கப்பட்டு மாதா கோவில் கட்டப்பட்டது" என்றும், "புதுவை ஈச்வரன் தர்மராஜர் கோவில் இடிக்கப்பட்டமைக்கு ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் ஆதாரமுள்ளது.…

பிரமோத் மகாஜனின் மறைவு

புதிய மாதவி மும்பையில் இன்று (4/5/06) பிரமோத்ஜியின் இறுதியாத்திரை. கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் தன் உடன் பிறந்த தம்பி பிரவீன் மகாஜனால் காலை 7.45 மணி அளவில் துப்பாக்கியில் சுடப்பட்ட…

எடின்பரோ குறிப்புகள் – 14

இரா முருகன் போன வார நம்புங்கள் நாராயணன் அல்லது ஆட்டுங்கல் நம்பூத்திரி ராசிபலனின் தனக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பிரிட்டீஷ் பிரதமர் டோனி ப்ளேர் கவனித்திருந்தால், நெருங்கிய நபர்களால் பெருங்கஷ்டம் என்று தெரிந்திருக்கும். போன…

புலம் பெயர் வாழ்வு 8 – எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்

இளைய அப்துல்லாஹ் ஐந்து வருடங்களுக்கு முன்பு. இரண்டாயிரமாம் ஆண்டு ஓக்ஸ்ட்மாதம் ஏழாம் திகதி தீபம் தொலைக்காட்சியில் நேர்முகம் எனக்கு மிகுந்த ஆர்வம், மிகுந்த ஆவல், மிகுந்த மகிழ்ச்சி. ஏற்கனவே லண்டன் போனதில் இருந்து இரண்டு…

தலித்தலைவர்களின் தலித் துரோகங்கள்!

ஜெயக்குமார் நான் பார்த்த பல வலைப்பதிவுகளில் பார்ப்பனர்க்ளுக்கு எதிரான தாக்குதல்களே அதிகம் இடம் பெறுகிறது. அதாவது தலித் மக்களின் முன்னேற்றதிற்கு தடையாகவும், அவர்களைக்கொடுமைப்படுத்துவதாகவும் இருக்கும் ஒரே இனம், பார்ப்பண இனம் என்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால்…

தேர்தலும், அதற்கு அப்பாலும்-1

K.ரவி ஸ்ரீநிவாஸ் 1, மத்தியில் ஆளும் கட்சி அல்லது கூட்டணிதான் மாநிலத்தில் ஆள்வது நல்லது என்ற கருத்தை சிதம்பரம் அடிக்கடி குறிப்பிடுகிறார். இது சரியல்ல.மக்கள் தெரிவின் அடிப்படையில்தான் அரசு அமைய வேண்டும். இன்னும் 3…

தேர்தலும், அதற்கு அப்பாலும்-2

K.ரவி ஸ்ரீநிவாஸ் 9, விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலுக்குப் பின் தலித் அரசியலை பிற தலித் அமைப்புகள், கட்சிகளுடன் சேர்ந்து பலப்படுத்த வேண்டும்.இப்போதுள்ள நிலை நீடித்தால் விடுதலை சிறுத்தைகள் அரசியலில் அதிக தூரம் பயணிக்க முடியாது.…

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து – 1 – யோகத்துக்கு அப்பால்………..

புதுவை ஞானம் சுழலும் இவ்வுலகத்தை நான் சுற்றிச் சுற்றி வரும்போதெல்லாம் தனி நபர்கள்,கட்சிகள்,அரசுகள்,அல்லது; ஜன ரஞ்சகமான கொவில்களால் வசியப்படுத்தப்பட்டும்,பாரம்பரியமான கட்டுக்கதைகளால் மயக்கடிக்கப்பட்டும் இருக்கின்ற மக்கள் திரள் ஆகியவை மட்டும் மனித இனத்தின் துயரநிலக்குக் காரணமல்ல…

தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்

அ.முத்துலிங்கம் [ கம்புயூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனேயே சம்மதித்தேன். காரணம் கம்புயூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்கு சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே.…

அறிவிப்புகள்

மனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை

அறிவிப்புஅறிவிப்பு மனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை 'உயிர்மை இதழ்' ஆசிரியரும்,கவிஞருமான மனுஷ்ய புத்திரன் மலேசியா வருகிறார். 7.5.2006,மாலை மணி 6.00க்கு மலாயா பல்கலைக்கழக 2 ஆம் தங்கும் விடுதியில் இலக்கிய கலந்துரையாடல் நடைபெரும். இதனைத்தொடர்ந்து…

இவர்கள் அழிக்கப்படவேண்டும்

ஹமீது ஜா·பர். 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபியாவின் பாலைப் பிரதேசத்தில் கொள்கை இல்லாமல், நாகரீகமில்லாமல், பண்பாடில்லாமல், கல்வி அறிவு இல்லாமல், ஒற்றுமை இல்லாமல் சிறுச் சிறு குழுக்களாக தான்தோன்றித்தனமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த அறிவீனர்களை முஹம்மது…

கடிதம்

விஸ்வாமித்ரா ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ரா ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற புத்தகம் குறித்து இங்கு பல கட்டுரைகள் எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டுச் சென்று அந்த நூலினைப் பற்றிய…

கற்புக் கனல் அன்னை மர்யம்

மஹ்மூத் அல்ஹஸன்இம்மாதம் 27 ஆம் நாள் திண்ணை இதழில் வஹ்ஹாபிக்கு மறுப்புத் தெரிவிப்பதற்காக ஸூஃபி முஹம்மத் எனும் பெயரில் வெளியான கடிதத்தின் சொற்றொடர்கள் அல்லாஹ்வின் தூய மறையுடன் மோதும் அல்லது அல்லாஹ்வின் மறையை ஐயுறும்…

கவிஞர் மனுஷ்ய புத்திரனின் மலேசியா- சிங்கப்பூர் பயணம்

அறிவிப்பு கவிஞர் மனுஷ்ய புத்திரன் 2006, மே 6 முதல் மே 15 தேதிவரை மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அவரை சந்திக்க விரும்பும் நண்பர்கள், வாசகர்கள், இலக்கிய…

தொடரும் வெளிச்சம் – பளீரென்று

வஹ்ஹாபி"முஸ்லிம்களின் இறைவணக்கத்தில் குர்ஆனுடைய வசனங்கள் ஓதப் படுவதன் காரணம், அரபு வகைப் பட்டுப் போவதோ அல்லாஹ்வுக்கு அரபியைத் தவிர வேறு மொழி தெரியாது என்பதோ உலகில் சிறந்த மொழி அரபிதான் என்பதோவல்ல" என்ற எனது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உடன்பிறப்புக்கு என் நன்றி.

செல்வன் கேன்னிபாலிஸம்(cannibalism) எனப்படும் தம்மினத்தை சாப்பிடும் பழக்கம் பரிணாமவாதத்தில் முக்கிய இடம் பெறுகிறது.அனைத்து வகை உயிரினங்களிலும் காணப்படும் இப்பழக்கம் சில இனங்களில் கருவிலேயே துவங்கி விடுகிறது. சான்ட்டைகர் ஷார்க்(sand tiger shark) எனப்படும் சுறாமீன்…

காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?-2

அரவிந்தன் நீலகண்டன்புலன்களின் உள்ளீடுகள் நம்மை தாக்குகையில் நியூரான்கள் தொடர்ச்சியாக மூலக்கூறுகளை உமிழ்ந்தபடி இருப்பவை. ஆனால் இந்த புலன்களின் தாக்கங்களை நம் நரம்புமண்டல செயலியக்கம் முழுமையாக அனுமதிப்பதில்லை. இல்லையெனில் நம் மூளை தொடர்ந்து அதீத இயக்க…

செயற்கை கருப்பை – ஒரு வரம் தாய்மார்களுக்கு

ஸ்ரீஷிவ்நம் சென்ற கட்டுரையில் சினைமுட்டைப்பை (ovary)மாற்று சிகிச்சை பற்றி பார்த்தோம் அல்லவா? இந்த கட்டுரையில் நாம் காண இருப்பது சினைப்பை(அ) கருப்பை(அ) கர்பப்பை எனப்படும் கருவை சுமக்கும் பையைப்பற்றி.இதுதான் நாம் போன கட்டுரையில் பார்த்த…

சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் 20 ஆண்டுகள் கடந்தும் கதிரியக்கம் -2

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபடிப்பறிவு திட்டமின்றி வெடிப்புச் சோதனை செய்து நிர்வாண மானது, செர்நோபில் அணு உலை! மாய்ந்தனர் மக்கள், மடிகிறார் மேலும் மரிப்பார் மக்கள்! நாடு நகரம் வீடு வயல்…

இலக்கிய கட்டுரைகள்

நாயின் வயிற்றில் மணிக்கயிறு

என் எஸ் நடேசன் பூவ்¢ பூழ்¢ ஞ்அக்றூவ் வேலை சம்பந்தமாக குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குப் போயிருந்தேன். அங்கு நிற்கும் போது மெல்பனிலிருந்து மனைவி தொலைபேசியில் சொன்ன தகவல் 'எங்கள் வீட்டு நாய் மகளின் காலுறையை விழுங்கி…

கடித இலக்கியம் – 3

வே.சபாநாயகம் கடிதம் - 3 திருப்பத்தூர்.வ.ஆ. 18- 3 - 68 பிரிய நண்பருக்கு, நான் எந்தச் சமாதானம் சொல்வதும் நியாயமில்லை. நீண்ட கடிதங்களாக யாருக்குமே எழுத முடியவில்லை. உங்களுக்கென்று எழுதும்போது, சுருக்கமான 'நலம்,…

யாத்ரா பிறந்த கதை

வெங்கட் சாமிநாதன் யாத்ரா பத்திரிகை தோன்றியதன் கதையைச் சொல்வதென்றால் அது, அதற்கும் சில வருடங்களுக்கு முன்னிருந்த ஒரு முனைப்பின் தொடர்ச்சி என்று சொல்லவேண்டும். எழுபத்து நான்கோ ஐந்தோ ஞாபகமில்லை சரியாக. ஒன்றிரண்டு வருடங்களுக்கு ஒரு…

எழுத்தாளர் சோமகாந்தனின் இழப்புத் தமிழ்கூறும் உலகிற்குப் பேரிழப்பு!

த.சிவபாலு எம்.ஏபண்பட்ட எழுத்தாளப் பெருமகனை இழந்து புண்பட்டுக் கண்ணீர்வடிக்கின்றாள் தமிழன்னை செயலாளர் த.சிவபாலு எம்.ஏ. உதயன் விழா 2004க்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்திருந்த திரு,திருமதி சோமகாந்தன் பத்மா தம்பதியினருக்கு கனடிய மண்ணில் பாராட்டுவிழா எடுக்கப்பட்டது…

செந்தமிழ் நாடெனும் போதினிலே

நாகூர் ரூமி நான் சின்னப் பிள்ளையாக இருந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சி தினமும் என் வீட்டில் நடக்கும். இடுப்பில் ஒரு கூடையைத் தூக்கி வைத்துக் கொண்டு காலையில் ஒருத்தி வருவாள். கறுகறுவென இருப்பாள். நீளமான…

கண்டதும் காதல்

செல்வன் ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு மையலில் வீழ்வது வெகு பிரசித்தியானது.ஆனால் கம்ப ராமாயணம் முழுக்க அவர்கள் இருவரையும் முதல் முதல் கண்டவர்கள் காதலில் வீழ்ந்த கதைகளை கம்பன் சுவாரசியமாக சொல்லுகிறான். மிதிலையில்…

கதைகள்

த னி ம ர ம் நாளை தோப்பாகும் – தொடர்கதை -1

எஸ். ஷங்கரநாராயணன் பிறகு சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். மொத்தம் அவர்கள் நாலு பேர். சீனிவாசன், குமாரசாமி, ரத்தினம், அப்புறம் சரவணன். அவர்கள் எல்லாரையும் விட சரவணன் சின்னவன். இருபத்தியாறு. நாலைந்து மாதக் கைக்குழந்தை. து¡ளியில்…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 19

ஜோதிர்லதா கிரிஜா தன் வருங்காலச் சம்பந்தியம்மாள் பார்வதியுடன் பேசிவிட்டு அவர்களது வில்வண்டியிலேயே காவேரி வீடு திரும்பிய போது அப்பளம் இட்டு முடித்திருந்த மாமிகள் காத்துக்கொண்டிருந்தார்கள். வீடு திரும்பி யிருந்த பத்மநாபன் வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தார்.…

குறுநாவல்:சேர்ந்து வாழலாம், வா! – 1

ரெ.கார்த்திகேசு ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில் வாகனங்கள் நகரவில்லை. ஆனந்தன் ஸ்டியரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தான். பினாங்குப் பாலத்தை இணைக்கும் கடற்கரை விரைவுச்சாலை திறந்தவுடன் பினாங்கு வடகிழக்கிலிருந்து நகருக்குள் நுழையும் மற்ற சாலைகளில் நெருக்கடிகள் குறைந்து…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-19)

சி. ஜெயபாரதன், கனடாமான் வேட்டை ஆடு திங்கே! மயில் ஏட்டை மாற்று மிங்கே! தேன்விழி வாள் பாயு மிங்கே! தேடிக் கொண்டாள் பாப மிங்கே! எங்கணும் சோகம் பரவு திங்கே! ஏசு நீராட்டி தலை…

கவிதைகள்

கீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாபாடுபட்டுப் பணி புரிவதற்கு ஈடுபடுத்த வேண்டும் முழுமையாக, என்னை நான் எப்புறத் திசைகளிலும்! அப்பணிகள்தான் உந்தன் ஒளிக்கதிர்கள் சிதறி ஒப்பிலா மாயையாக உருவாக்கும் பன்னிற நிழல்கள்! உன்னிருக்கையைச் சுற்றிலும் வேலி…

விருந்தோம்பின் பாடல்

டீன்கபூர் நெஞ்சுக்குள் வெடித்தது வெடி குண்டு. காலைப் புகைமூட்டம் புரைத்தது. அதிகாரிகளுக்கிடையில் நான்.... மேசையில் விழுந்து சுருண்டது உயிர். உயிருக்குப் பதவி உயர்வு கொடுத்தேன். பதவி நிலை அறிந்து பசுவின் வாலைப்பிடித்து ஓடியது நண்டு.…

பெரியபுராணம் — 87 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2424. சம்பந்தர் மொழிந்து அருள் செய்ததும் பெரிய தவவேந்தரான திருநாவுக்கரசரும் "நல்லது நீவீர் அருள் செய்தபடியே செய்வேன்" என அருள் செய்தார் விரும்பிய அந்நாள் முதற்கொண்டு பிள்ளையாருடன் செல்லும் நாட்களெல்லாம் அதே இயல்பினில்…

கவிதைகள்

ஆ. மணவழகன்வாழ்க்கை வணிகன் பாருங்க சார்! தெய்வப் புலவர் வள்ளுவர் எழுதியது சார்! வாழ்க்கைக்குத் தேவையான வழிகளைச் சொல்வது சார்! மூன்று பெரும்பகுப்புகள் ... நூற்று முப்பது அதிகாரங்கள்... ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களைக்…

அணுயுகப் பிரளய அரங்கேற்றம்

சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமாவின் எழில்மேனி அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு! நாகசாகியும் அணுப் பேரிடியால் நாசமாகி மட்டமாக்கப்…

இயற்கையின் மர்ம முடிச்சு

தேவமைந்தன் நீலப்பச்சை மின்நிறம் கொண்டு உருண்டு திரண்ட சிறுவண்டு, சிவ்வென உயரவும் தாழவும் பறந்து சரக்கறை மேற்சுவர் தொங்கிய விளக்குக் குமிழைச் சுற்றிப் படர்ந்து பின்னிய சிலந்தியின் வலையில் மாட்டிக் கொண்டது. மாட்டிக் கொண்டோம்…

கால மாற்றம்

நவஜோதி ஜோகரட்னம் என்னை வருடுகின்ற மலர்கள் பூக்கிற காலம் இளங்குளிர்க்காலையில் மரங்களின் அடர்த்தியில் இருள் இன்னும் உறங்கிய படி குருவிகளின் கூச்சல்கள் என் தூக்கத்தைப் பறிக்க வெறும் நினைவுகளால் வெப்பமாகிறது என் மூச்சு பூரான்போல்…

தோணி

தமிழாக்கம் : புதுவை ஞானம்.இளமைக்காலம் தொட்டே உன்னதமாய்த் துலங்கியதென் யோக சக்தி. வாழ்க்கைச் சக்கரத்தின் கரும வினைச் சுழற்சியில் சிக்காமல் விலகி நிற்க -என் இயல்பைப் பயிற்றுவித்து கடைப்பிடித்தேன் சத்தியத்தை. மார்க்கத்தைத் தேடினேன் மனத்தை…

கற்பதை விட்டொழி

புதுவை ஞானம்கற்பதை விட்டொழி -உந்தன் தொல்லைகளுக்கு முடிவு கட்டு. ஆம் என்பதற்கும் இல்லை என்பதற்கும் வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ? நல்லது என்பதற்கும் கெட்டது என்பதற்கும் வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ? மற்றவர்கள் அஞ்சுவதைக்…

‘இருதய சூத்திரம்’

தமிழாக்கம் : புதுவை ஞானம். பரமிதப் பிரக்ஞை யோகத்தில் பரவெளியில் ஆழ்ந்திருந்தார் அவலோகதீஸ்வர போதி சத்துவர். ( ரஸம்,ரூபம்,ஸ்பரிசம்,ஸ்கந்தம் ஸ்ப்தம் என வட மொழியில் அறியப்படும்) சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஒசை அனைத்தும்…

நகைச்சுவை

வளர்ந்த குதிரை – 2

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமாKrishnakumar Venkatrama குதிரைகளுக்குப் பதிலாக மனிதர்கள் என்று நீங்களாகக் கற்பனை பண்ணியிருந்தால் நான் பொறுப்பில்லை. நான் குதிரைகளைப் பற்றித் தான் இதுகாறும் கூறி வந்தேன். குதிரைகள் வெறும் குளம்புகளை மண்ணில் நிறுத்தி பரவி…