முறையீடு

This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

ராகவன் தம்பி



ஏறத்தாழ எட்டாவது முறையாக மீண்டும் அந்தக் கேள்வியை சிவராமன் கேட்டபோது சோட்டே லால் என்னும் அந்தக் கான்ஸ்டபிளுக்குக் கோபத்துக்குப் பதில் சிரிப்புத்தான் வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு பதில் அளிப்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

இந்த மதராஸிகளிடம் அதிகம் வேலை காண்பிக்க முடியாது. தில்லியில் மத்திய அமைச்சரவையில் பதினைந்துக்கும் மேற்பட்ட மதராஸிகள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். தில்லியெங்கும் தடுக்கி விழுந்தால் ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மதராஸிகளாக இருக்கிறார்கள். இந்த ஆள் கண்டிப்பாக எங்காவது இந்தப் பலரில் யாராவது ஒருத்தருக்காவது வேண்டிய ஆளாக இருந்து தொலைக்கலாம். எதையாவது தாறுமாறாகப் பேசி வைத்துப் பிறகு எக்கச்சக்கமாக வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டும். இந்த மதராஸிகள் தேவைக்கு அதிகமாகப் படித்து வைத்திருக்கிறவர்கள். எப்போதும் ஒரு சிறிய சட்டப்புத்தகத்தைத் தங்கள் சட்டைப் பைகளில் வைத்துக்கொண்டு இருப்பதைப்போல எடுத்ததற்கெல்லாம் சட்டப்பிரிவுகளை உட்பிரிவு எண்களுடன் தூக்கி எறிபவர்கள். இந்த ளைப் பார்த்தாலும் ஏதோ பெரிய பாபுவாக இருந்து ஓய்வு பெற்ற ஆசாமி மாதிரி தான் இருக்கிறான். எதற்கு வம்பு வைத்துக் கொள்ளவேண்டும் என்று சோட்டே லால் நினைத்திருக்க வேண்டும். அந்த ஆள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு வேலையைக் கவனிக்கலாம் என்று தீர்மானித்துக்கொண்டான்.

கண்களில் பணிவு நிரம்பி வழிய, “கண்டிப்பா வந்துடுவார் சாஹிப். நீங்க அப்படி உக்காருங்க”

”கண்டிப்பா வந்துடுவார் இல்லையா?”

”வரணும்”

கொஞ்சம் தயங்கியபடி, ”எதுக்கும் அவருடைய மொபைலுக்கு ஃபோன் பண்ணிக் கேக்கமுடியுமா?”

”அவர் மொபைல் நம்பர் எங்ககிட்டே தரலை சாஹிப்”

”நிஜமாகவா?”

”நான் பொதுவா உங்க மாதிரி பெரிய ளுங்க கிட்டே அதிகமா பொய் சொல்றதில்லை சாஹிப்”.

”பரவாயில்லை”

யோசித்துக்கொண்டே எங்கோ தூரத்தில் வெறித்துப் பார்த்து நின்று கொண்டிருந்தார். அவனுக்கு வெளியில் போய் சிகரெட் பிடித்துவிட்டு வரவேண்டுமென்று தோன்றியது. இப்போது எழுந்துபோனால் அந்த மனிதர் தவறாக நினைத்துக்கொள்ளக் கூடும். சின்ன போலீஸ் போஸ்ட் இது. வேறு யாரும் இல்லை. சுக்பிந்தரும் கன்னாவும் சப்-இன்ஸ்பெக்டருடன் ரவுண்டுக்குப் போயிருக்கிறார்கள். இவன் இன்று இப்படி வசமாக மாட்டிக்கொண்டான்.

அவன் நண்பன் தவீந்தர் இன்று இரவு டியூட்டிக்குப் போயிருக்கிறான். அவனுடைய மனைவி இருமுறை தொலைபேசியில் கூப்பிட்டு விட்டாள். அவளுக்குத் தொலைபேசியில் கணவன் இல்லாத இரவு வேளைகளில் நீண்ட நேரம் இவனுடன் கிளுகிளுப்பது மிகவும் பிடித்த விஷயம். தவீந்தருக்கும் இவனுக்கும் வேறு வேறு இடங்களில் இரவு டியூட்டி இருந்தால் சோட்டேலால் பாடு கொண்டாட்டம்தான். தவீந்தரின் மனைவி தொலைபேசியில் பேசியே இவனை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடுவாள். அவளுடன் இந்த இரவு நீண்ட நேரம் தொலைபேசியில் சல்லாபித்துக் கொண்டு இரவுப் பொழுதைக் கழிக்கலாம் என்று மனதை உல்லாசமாகத் தயார் செய்து வைத்திருந்தான். இந்தக் கிழவன் இன்று இப்படிப் பழியாய் வந்து சேர்ந்து விட்டான்.

தொலைபேசி மெல்லச் சிணுங்கியது. சிவராமனைப் பார்த்துக் கொண்டே அவசரமாகக் காதில் பொருத்தி மிக மெல்லிய குரலில் “இன்னும் கொஞ்ச நேரத்துலே கூப்பிடுறேன்” என்று சொல்லி தொலைபேசியை வைத்தவன், கொஞ்சம் போலியான பணிவைக் கூட்டிக்கொண்டு,

”அப்படிப் போய் உக்காருங்க சாஹிப். படே சாஹிப் வந்துடுவார். எதுக்கு நீங்க ரொம்ப நேரமா நிக்கணும்?”

”இருக்கட்டும். எங்கே போயிருக்கார் தெரியுமா? கண்டிப்பாக வந்துடுவார் இல்லையா? வயர்லெஸ்லே கேட்டுச் சொல்ல முடியுமா?”

”வயர்லெஸ்லே தொந்தரவு பண்ணா கண்டபடி திட்டுவாரு”

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வயர்லெஸ் சாதனம் அலறியது. சிரித்துக்கொண்டே ”படே சாஹிப்தான் போலிருக்கு”

”நான் ஒரு நிமிஷம் பேசட்டுமா?”

நீங்கல்லாம் பேசமுடியாது சாஹிப். நான் வேணும்னா எப்போ வர்றாருன்னு கேட்டுச்சொல்றேன்”

வாக்கி டாக்கியை வாயருகில் வைத்துக்கொண்டு ஏதோ சரியாகப் புரியாத ஒரு வார்த்தையை திரும்பத்திரும்ப உரக்கக் கத்திக்கொண்டே இருந்தான். அதிலிருந்து ஒன்றும் புரியாத வண்ணம் கரமுரவென்று சத்தம் இரைந்து கொண்டிருந்தது. இடையிடையில் பெருத்த கடல் அலைகள் பொங்குவதைப் போன்ற இரைச்சல் எழுந்து எழுந்து அடங்கியது. தன்னுடைய இருக்கையை சற்றுப் பின் நகர்த்தி உரக்கக் கத்திக்கொண்டே மேஜையை சுற்றி வெளியில் வந்தான். அவனுக்கு இடம் விட்டு அவர் நகர்ந்து கொண்டார். உள்ளிருந்த மற்றொரு அறையை நோக்கி வாக்கி டாக்கியில் கத்திக்கொண்டே சென்றான். அவர் கொஞ்சமாகத் தொடர்ந்து சென்று உள்ளே எட்டிப்பார்த்தார். உள்ளே பரட்டைத் தலையுடன் ஒருவன், குளித்து எத்தனையோ நாட்கள் னதுபோல உடலெங்கும் அழுக்காக, கிழிந்த உடையுடன் அழுகிறவன் போல முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்திருந்தான். அவனுடைய கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. கத்திக்கொண்டே கடந்து செல்லும் கான்ஸ்டபிளின் கால்களைப் பிடிப்பது போல அவனை நெருங்கி ”தாணேதார் ஜி” என்று தீனக்குரல் எழுப்பிக் கை கூப்பினான்.

கான்ஸ்டபிள் அவன் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்காமல் ”சுப் ரே ஹராமீ…….. ” எட்டி ஒரு உதை விட்டு வாக்கி டாக்கியில் கத்திக்கொண்டே அந்த அறையின் மூலையில் சென்று ஜன்னலை ஒட்டி நின்று கொண்டு மீண்டும் இரைந்தான். அவன் இரைந்தது பஞ்சாயிலோ அல்லது ஹரியான்வியிலோ. இவருக்கு ஒரு வார்த்தை கூட சுத்தமாகப் புரியவில்லை.
ஓரிரு சம்பாஷணைகளுக்குப் பிறகு கான்ஸ்டபிள் நீளமாகப் பேசுவதைக் குறைத்துக்கொண்டான். ”ஜீ ஜனாப்… ஜீ ஜனாப்…” என்பதை மட்டும் ஒரு குறிப்பிட்ட கால அளவில் நிறுத்தி நிறுத்தி மீண்டும் மீண்டும் இரைந்து கொண்டிருந்தான். இருபது அல்லது முப்பது நீண்ட ‘ஜீ ஜனாப்’ களுக்குப் பிறகு அமைதியானான்.

இரைச்சலை ஒருவழியாக நிறுத்தி விட்டு விருவிருவென்று வாக்கி டாக்கி சாதனத்தைத் தன் மேஜையின் மீது வைத்து விட்டு அவசரமாக அறையை விட்டு வெளியேறி மரத்தடியில் நின்று ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டான். அவனுக்காகக் காத்திருந்த அவருடைய பதற்றம் இன்னும் அதிகரித்தது. அந்த அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக அலையத் துவங்கினார். தடியன்… சப் இன்ஸ்பெக்டர் வருவானா மாட்டானா என்றுகூட சொல்லாமல் இவன் பாட்டுக்கு சிகரெட் பிடிக்கப் போய்விட்டானே என்று அவருக்குக் கோபமாக வந்தது. இந்த தில்லி போலீசின் அலட்சியப் போக்கினைக் கண்டித்து இந்து நாளேட்டுக்குக் காரசாரமாக ஒரு கடிதம் எழுதி நாளை காலையில் கண்டிப்பாக அனுப்பியாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டார். அந்தக் கடிதத்தில் இடம்பெற வேண்டிய முக்கியமான சட்டத்துக்கு உட்பட்ட வகையில் அமைந்த கடுமையான ங்கில வார்த்தைகள் அவருடைய மனதில் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருந்தன.
அவருடைய மன ஓட்டத்தினைப் புரிந்து கொண்டது போல, சிகரெட்டை அவசர அவசரமாக இழுத்துப் புகைவிட்டு மனதில்லாமல் செய்வது போல எறிந்து விட்டு மேஜையை நோக்கி விரைவாக வந்தான் சோட்டேலால். அவன் உட்கார்ந்ததும் இவர் கொஞ்சம் அதிகாரத்தைக் குரலில் கூட்டிக்கொண்டு ”என்ன சாஹிப் வரப்போகிறாரா இல்லையா?” என்று கேட்டார். அவருடைய குரல் அவருக்கே கொஞ்சம் புதிதாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது.

அதையெல்லாம் கண்டுகொள்ளாதவன் போல, ”படே சாஹிப் வருவது சந்தேகம்தான் சாஹிப். நொய்டா பார்டர்லே தகராறு. கத்திக்குத்து கிவிட்டதாம். ட்களை ஸ்பத்திரிக்கு கொண்டு போய் இருக்காங்களாம். படே சாஹிப் அங்கேதான் இருக்காராம்.

”ஒரு வயசான ளு அவருக்காக ரொம்ப நேரமா இங்கே காத்துக்கிட்டு இருக்காருன்னு சொன்னியா?”

”என்ன சாஹிப் இப்படிக் கேக்கிறீங்க? நான் கண்டிப்பா சொன்னேன். அவர் இப்போதைக்கு வரமுடியாததாலே என்னையே விசாரிச்சி வைக்கச் சொன்னார். ஏதாவது புகார் இருந்தா எழுதி வாங்கிக்கச் சொன்னார். நீங்க அந்த நாற்காலியை எடுத்துக்கங்க. உட்காருங்க. ஏன் நிக்கிறீங்க?” என்றான்.

அவர் நம்பிக்கை இல்லாதது போல எங்கோ தூரத்தில் வெறித்துக்கொண்டிருந்தார்.

”ஏதாவது ரொம்ப அவசரமான புகாரா சாஹிப்? ரொம்பப் பெரிய விஷயம்னா நீங்க பெரிய தாணாவுக்குப்போய் அங்கே எஸ்.எச்.ஒவைப் பாருங்க. னா, இந்நேரத்துக்கு அவரும் அங்கே இருப்பாரான்றது சந்தேகம்தான்”. ஏதாவது புகார்னா என்னை எழுதி வச்சிக்கச் சொன்னார். ரொம்ப அவசரம்னா நீங்க மயூர் விஹார் போகணும். இங்கே ட்களும் இல்லே சாஹிப்.
பெரியவர் ஒன்றும் சொல்லாது காலர் உள்ளில் செருகி வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து உதறிப் பின்னர் லேசாக முகத்தைத் துடைத்துக்கொண்டார்.அவன் கொஞ்சம் தர்மசங்கடத்துடன் உணர்ந்தான். எதையோ நினைத்துக் கொண்டவன் போல் கூலர் வரை சென்று ஒரு தம்ளரில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து அவரிடம் நீட்டினான். வாங்கிக் குடிக்காமல் மேஜை மேல் வைத்துவிட்டு சட்டைப் பையைத் துழாவி ஒரு மாத்திரையை எடுத்து உறையைக் கிழித்து எறிந்து கை நடுக்கத்துடன் மாத்திரையை நாக்கின் நுனியில் வைத்து அதே கைநடுக்கத்துடன் தண்ணீரை அவசரமாக எடுத்துக் குடித்தார்.

மீண்டும் ஒருமுறை தொலைபேசி ஒலித்தது. சோட்டேலால் பாஷையை உடனே மாற்றிக் கொண்டான். புரியாத ஒரு மொழியில் எதையோ மிகவும் கடுப்பாக, ஏறக்குறைய திட்டுவதைப் போன்ற தொனியில் ஏதோ பேசிவிட்டு தொலைபேசியை மிகக்கடுமையாக வீசுவதுபோல அதன் தாங்கியில் எறிந்தான்.

உள்ளே கட்டிப் போடப்பட்டிருந்த போதை சாமி தீனமான குரலில் உரக்கக் கத்தினான். சோட்டேலால் மிகுந்த எரிச்சலுடன் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு விருட்டென்று உள்ளே போனான். உள்ளிருந்த சாமியின் கூச்சல் வலுத்தது. உயிர்நிலையில் அடிபட்ட நாய் கத்துவது போல மிகவும் பரிதாபமாகக் குரல் எழுப்பிக் கத்தினான். இவன் அவனை இன்னும் ஓங்கி மிதித்திருக்க வேண்டும். வெளியில் வந்ததும் அந்த அறையின் கதவை ஓங்கி சாத்தினான்.”ஹராமி மாதர்சோத்… எல்லாம் சரஸ் போதை கேஸ்கள் சாஹிப். நான் படே சாஹிப் கிட்டே எவ்வளவோ சொல்லிட்டேன். இந்தப் பசங்களைப் பிடித்துக்கொண்டு வரவேண்டாம்னு. ராத்திரி எல்லாம் இப்படியே கூச்சல் போட்டு என் உயிரை எடுப்பான். கொஞ்ச நேரம் னதும் ரத்தம் வழிய சுவர்லே தலையை மோதிக்குவான். இவன்களுக்கு அந்த போதை கண்டிப்பா வேணும். இங்கேயே செத்துத் தொலைஞ்சா நாளைக்கு எங்க தலைமேலே விடியும். உயிரோட கோர்ட்டுக்கு அழைச்சிக்கிட்டுப்போனா இவனை அடிச்சீங்களான்னு ஜட்ஜ் எங்களை வாட்டி எடுத்துடுவாரு.

”ஐயோ…”

”சொல்லக்கூடாதுதான். எத்தனையோ தடவை இந்த மாதிரி சாமிகள் போதை மருந்து கிடைக்காத அவஸ்தையிலே எங்க கஸ்டடியிலே செத்துத் தொலையக் கூடாதேன்னு நாங்களே கூட சில சமயம் வெளியிலே போயி இவங்களுக்காக சரஸ் வாங்கி வந்து குடுக்க வேண்டிய நிலைமை வந்திருக்கு சாஹிப்.

”அடக் கர்மமே… அப்புறம்?”

”ஒரு தடவை இந்த மாதிரித்தான் எங்க படே சாஹிப் பிடிச்சிக் கொண்டு வைத்திருந்த ளுக்கு அப்படி யிடிச்சி. நடு ராத்திரி. செவத்துலே முட்டி முட்டி சாகிற மாதிரி யிட்டான். மண்டை உடைஞ்சி உடம்பெல்லாம் ரத்தம் வழியுது. பயங்கரமாக் கத்த ரம்பிச்சிட்டான். கிட்டே போயிருந்தா என்னைக் கையாலேயே கிழிச்சிக் கொன்னிருப்பான். என்ன பண்றது? எப்பவோ ஒரு கேஸ்லே பிடிச்சப்போ வச்சிருந்த கொஞ்சம் சரஸ்ஸை எடுத்து அவனுக்கு படே சாஹிப் குடுத்திருக்கார். எல்லா஡ம் முடிச்சி அவன் ஹாய்யா படுத்துத் தூங்கி எழுந்து காலைலே மறுபடி போதை மருந்து கேட்டு மண்டையை மோதிக்க ரம்பிச்சான். அவன் பெயர் எங்கேயும் என்ட்ரி கலே. அவனோட செலவுக்குக் காசு குடுத்து நான் அனுப்பி வச்சேன் சாஹிப். இந்த ஹராமியோட பேரை வேறே படே சாஹிப் ரிஜிஸ்டர்லே எழுதி வச்சிட்டுப் போயிட்டார். இவனை அவுத்து விடலாம்னா ராத்திரி யாராவது பெரிய அதிகாரி சோதனைக்கு வந்தா வம்பாப் போயிடும்.
மீண்டும் தொலைபேசி ஒலித்தது. எடுத்துக் காதில் வெறுமனே வைத்துக்கொண்டான். ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்து திடீரென மிகப்பெரிய குரலில் சத்தம் போட்டான். ஹரியான்வியிலோ அல்லது பஞ்சாபியிலோ மிகப்பெரிய கெட்ட வார்த்தையாக அது இருந்திருக்க வேண்டும். அவனுடைய முகத்தின் கடுமை அதைச் சொல்லியது. சந்தர்ப்பமில்லாமல் சிவராமன் பரிவுடன் கேட்டார்.”வீட்லே இருந்து பேசறாங்களா?”

அவன் மிகவும் பொறுமையாக இருக்க எக்கச்சக்கமாகப் பிரயாசைப் படுவது அவனுடைய அசைவுகளிலும் முகபாவத்திலும் தெரிந்தது. அவருடைய முகத்தைப் பார்க்காது, “நீங்க அப்படி உக்காருங்க சாஹிப். இல்லேன்னா என்ன புகார்னு ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க. பன்னிரண்டரை கப்போகுது. படே சாகிப் வர்ற மாதிரித் தெரியலை” என்றவாறே உள்ளே சென்றான். உள்ளே போதை சாமி மீண்டும் உயிரே போவது போலக் கத்தியது அறைகுறையாகச் சாத்திய கதவிடுக்கில் வலுவாகக் கேட்டது. ஒரு துண்டால் ஈரக்கையைத் துடைத்துக் கொண்டு மீண்டும் தன் நாற்காலியில் வந்து அமர்ந்தான் சோட்டேலால்.
“எதுக்கும் நீ ஒருமுறை அவர் கிட்டே கேட்டுச் சொல்ல முடியுமா?” என்று கெஞ்சுவது போலக் கேட்டார்.

ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க சாஹிப்? அவசரம் இல்லைன்னா காலைலே வாங்க சாஹிப். கட்டும் ஹவில்தார்ஜி. நான் நாலு ஸ்டேஷன் ஏறி இறங்கித்தான் இங்கே வந்தேன். எல்லோரும் தன்னோட ஸ்டேஷன்லே இந்தக் கேஸ் வராதுன்னு சொல்றாங்க. இங்கேதான் பதிவு செய்யணும்னு சொல்றாங்க. விஷயம் கொஞ்சம் அவசரமானதுதான். கொஞ்சம் பெரிய அதிகாரிகளைக் கூப்பிட்டா விபரமா பதிவு செய்யலாம்னு பாத்தேன். எனக்கு ரொம்ப பெரிய அளவுலே அதிகாரிகளைத் தெரியும். னா ராத்திரிக்கு அவங்களைத் தொந்தரவு செய்யவேணாம்னு பார்த்தேன்”
சிவராமன் பேசிக்கொண்டிருக்கும்போது சோட்டேலாலின் மொபைல் தொலைபேசி ஒலித்தது. கையைச் சற்றுத் தூரமாகக் கொண்டு போய் அழைக்கும் எண்ணைப் பார்த்து விட்டு தொலைபேசியை அணைத்து சட்டைப்பையில் போட்டுக்கொண்டான். மீண்டும் மேஜையில் இருந்த தொலைபேசி ஒலித்தது. கோபமாக எடுத்து,

“நான் ரொம்ப அவசர வேலையா இருக்கேன். கொஞ்சம் இரேன். கட்டாயம் கூப்பிடுறேன்” என்றான். மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல் தெளிவில்லாமல் கேட்டது. அவள் ரொம்பவும் கோபப்பட்டு இரைவது சிவராமன் வரை கேட்டது. அவனும் கோபத்துடன் இரைந்து கத்தி விட்டுப் பேச்சைத் துண்டித்து தொலைபேசியை அறைந்து வீசினான். இவரை நோக்கித் திரும்பி “சாஹிப். நீங்க உங்க புகாரை எழுதி என்கிட்டே குடுக்க முடியும்னா குடுங்க. இல்லேன்னா காலைலே வந்து படே சாஹிப்பை பாருங்க. உங்களுக்குத்தான் பெரிய அதிகாரிகளை எல்லாம் தெரியும்னு சொல்றீங்களே. அவங்களையும் காலைலே பாருங்க. இப்போதைக்குக் கிளம்புங்க. நேரத்தைப் பாருங்க. ராத்திரி ஒரு மணிக்கு மேலே ச்சு. கிளம்புற வழியைப் பாருங்க”.
சிவராமன் ஒன்றும் பேசாமல் மேஜை மேல் வைக்கப்பட்டிருந்த வெள்ளைத் தாளை எடுத்து நிதானமாக எழுதத் தொடங்கினார். கான்ஸ்டபிள் சோட்டேலால் அவரையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளே அறையில் போதை சாமி உயிரே போவது போல அலறுவது கேட்டது. “ஹராமி… மாதர் சோத்… என்று உறுமிக்கொண்டே கதவை உதைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான் சோட்டே லால். அந்த போதை சாமி மிகவும் உரத்த குரலில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் யாரையோ திட்டிக் கொண்டிருந்தான். இடையில் நிறுத்தி நிறுத்தி உயிர்நிலையில் உதைக்கப்பட்ட நாயைப் போல உரத்து ஓலமிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய ஓலம் மெல்ல மெல்லக் குறையத் துவங்கியது. ங்காரத்துடன் தலையைச் சுவற்றில் வலுவாக மோதும் ஒலி கேட்டது. ஓலம் முழுக்க அடங்கியபின் துண்டினால் கையைத் துடைத்துக் கொண்டு வெளியில் வந்து நாற்காலியில் சோர்வுடன் உட்கார்ந்து கொண்டான் சோட்டேலால்.
வெளியில் சிவராமன் உட்கார்ந்திருந்த நாற்காலி காலியாக இருந்தது. ஒரு வெள்ளைத்தாளில் புகாரை எழுதி மின்விசிறிக்காற்றில் காகிதம் பறக்காது இருக்க சற்றுப் பெரிய அளவுள்ள கல்லை வைத்திருந்தார். புகார் கிறுக்கலான இந்தியில் எழுதப்பட்டிருந்தது. அறைக்கு வெளியே வந்து தெருமுனை வரை பார்த்து விட்டு வந்தான் சோட்டேலால். பெரியவர் கண்ணில் படவில்லை.
மீண்டும் நாற்காலியில் சரிந்து அமர்ந்தான். தயக்கத்துடன் பெரியவர் எழுதியிருந்த புகாரை சற்று சிரமத்துடன் படிக்கத் துவங்கினான்.
“காவல் நிலைய பொறுப்பாளருக்குவணக்கம்.நான் மத்திய அரசில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது மயூர் விஹாரில் வசித்து வருகிறேன். எனக்கும் என்னுடைய வயதான மனைவிக்கும் துணையாக எங்கள் வீட்டில் சிவகாமி என்று ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறாள். தமிழ்நாட்டின் கிராமத்திலிருந்து வந்த அப்பெண்மணிக்கு இந்தியோ ங்கிலமோ சுத்தமாகத் தெரியாது. மேலும் அவள் இங்கு வந்து புகார் கொடுக்கும் நிலையில் இல்லை. மதியத்தில் இருந்து மயக்கத்தில் இருக்கிறாள். பக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறாள். எனவே அவள் சார்பாக இந்தப் புகாரை நான் இங்கு சமர்ப்பிக்கிறேன். எங்கள் வீட்டில் பணிபுரிந்து வரும் திருமதி சிவகாமியின் எட்டு வயது மகள் இன்று காலையில் இருந்து திடீரெனக் காணவில்லை. நாங்கள் மாலைவரை எல்லா இடங்களிலும் தேடினோம். இரவு எட்டு மணிக்குப் புகார் அளிக்க பக்கத்தில் இருக்கும் போலீஸ் நிலையத்துக்குச் சென்றேன். அப்படி கிட்டத்தட்ட நான்கு இடங்களுக்கும் மேல் சென்றேன். யாரும் விஷயம் தங்கள் எல்லைக்குள் வரவில்லை என்று மறுத்துவிட்டார்கள். இறுதியாக இந்த இடத்தில் புகாரைப் பதிவு செய்யுமாறு கூறினார்கள். எனவே இந்தப் புகாரை தயவு செய்து ஏற்றுக்கொண்டு குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் வீட்டுக்கு தென்னிந்திய மளிகைப் பொருள்களைக் கொண்டுவந்து போடும் பையன் ஒருவன் இன்று மதியம் அந்தக் குழந்தையை நொய்டா எல்லை அருகே யாருடனோ பார்த்ததாக சொன்னான். இந்தத் தகவலையும் கருத்தில் கொண்டு அந்தக் குழந்தையைத் தேடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்குத் தங்கள் உண்மையுள்ள

சிவராமன்

புகாரை நான்காக மடித்து மேஜை மேல் குவியலாகக் கிடந்த ஒரு கோப்புக்குள் சொருகிவிட்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான் சோட்டேலால். உள்ளிருந்து அந்த போதை சாமி தீனமான குரலில் முனகிக் கொண்டிருந்தான். முனகல்களின் நடுவே சோட்டேலாலின் உறவினர்களை கெட்டகெட்ட வார்த்தைகளால் முறைபோட்டுத் திட்டிக் கொண்டிருந்தான்.
மேஜை மேலிருந்த தொலைபேசி சிணுங்கியது. தொலைபேசியை எடுத்தவன் குரலில் அன்பும் சல்லாபமும் வழிய, “நீ வச்சிடு. நான் கூப்பிடுறேன்” என்று தொலைபேசியைத் துண்டித்துவிட்டு மீண்டும் காதில் பொருத்திக் கொண்டு உடனே எண்களை உற்சாகத்துடன் சுழற்றத் துவங்கினான்.


vadakkuvaasal@gmail.com

blog: http://www.sanimoolai.blogspot.com

Series Navigation

ராகவன் தம்பி

ராகவன் தம்பி