செவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மார்ஸ் ஒடிஸ்ஸி விண்கலத்தின் மானிகள் செவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி உறைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்தவாரம் வெளியிடப்பட இருக்கும் (மே 25 2002) அறிவியல்கட்டுரைகளில் வெளிவர இருக்கும் இந்த விஷயம், செவ்வாய் கிரகத்தை ஆராயும் ஆராய்ச்சியில் பெரிய மைல்கல் எனக்கருதப்படுகிறது. பல வானவியலாய்வாளர்கள் செவ்வாயில் ஏராளமான தண்ணீர் அதன் வெளிப்பரப்பில் ஒருகாலத்தில் இருந்தது எனக்கருதுகிறார்கள். ஆயினும், அந்தத் தண்ணீர் எங்கு சென்று மறைந்தது என்பதை ஒருமித்து கருத்துக் கூறியதில்லை. இந்த வாரம் ஸயன்ஸ் இதழில் வெளியிட இருக்கும் கட்டுரை […]