தினக்கப்ஸா

வீரப்பனிடமிருந்து ராஜ்குமார் விடுதலை ராஜ்குமார் சென்ற வாரம் விடுதலை ஆனது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் முன்பைவிட வலிமையாகவும் பலமாகவும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு பதில் சொன்ன ராஜ்குமார் தன்னை வீரப்பன் நன்றாக கவனித்துக்கொண்டான் என்றும், மான் கறி, காட்டுக்காய்கறிகள் என்றும் கொடுத்து நன்றாக உடல் நிலை முன்னேற உதவினான் என்றும் தெரிவித்தார். செருப்பில்லாமல் காட்டில் வெகுதூரம் நடந்து உடல்நிலை நன்றாக ஆகியிருக்கிறது என்றும் தெரிவித்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. […]