சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி.

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue


சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி. மூன்று முதல் பரிசுகள்- சிங்கப்பூருக்கு ஒரு வாரம் சுற்றுலா
-மணற்கேணி 2010 கருத்தாய்வு போட்டி

இணையப் பெருவெளியில், வலைப்பதிவுகளில் எழுத்துலாவரும் தமிழ் வலைப்பதிவர்களுக்கும், எழுத்தார்வமுள்ள தமிழன்பர்களுக்கும் சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி.காம் இணையதளமும் இணைந்து நடத்தும் மணற்கேணி 2010 கருத்தாய்வுப் போட்டிக்கு இந்த ஆண்டுக்கான அழைப்பு வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

சென்ற ஆண்டு நடைபெற்ற மணற்கேணி 2009 போட்டிக்கு சிறப்பான ஆதரவு தந்த பதிவர்களுக்கும், தமிழ் எழுத்தார்வலர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நடுவர்களுக்கும் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இணையத்தை பயன்படுத்துபவர்கள் பொழுதுபோக்குக்காக, வெட்டியாக அரட்டை அடித்து வருகிறார்கள் அல்லது பெரும்பாலானவர்கள் வலைப்பதிவுகளில் குப்பைகளாக எழுதிவைக்கிறார்கள் என்கிற சொலவடையை பொய்யாக்கும் முயற்சி மணற்கேணி. ஒரு கருத்தை அல்லது சொல்லாக்கத்தைப் பற்றி மேலோட்டமாக சிந்திக்காமல் அதை மேலும் ஆராய்ந்து, ஆய்ந்து அதன் ஊற்றுகண்ணைத் தோண்டும் பட்சத்தில் எளிதாகக்கிடைக்கும் தெளிவான ஊற்று நீரைப்போல, முடியும் என்ற நேர்வினைக்கு ஒப்பாக இணைய எழுத்தாளர்களின், எழுத்தார்வலர்களின் பங்களிப்பு இருக்கமுடியும் என்ற தமிழ்வெளி மற்றும் சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள் உள்ளக்கிடங்கையில் தோன்றிய எண்ணத்திற்கு வண்ணம் கொடுத்து வடிவம் கொடுக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட மாபெரும் கருத்தாய்வுப் போட்டி மணற்கேணி.

வலைப்பதிவுகளில் சிறப்பாக பங்களித்து எழுதிவரும் பதிவர்களை ஊடகங்கள் அடையாளம் கண்டு கொண்டு அவர்களுக்கு வாய்ப்பளித்து வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இருப்பினும் சிறந்த படைப்புகளைக் கொடுத்துவரும் பதிவர்கள்/எழுத்தாளர்கள் பலர் இணையத்தில் பங்களித்து வருகிறார்கள். இலைமறைக் காய்களாக இணையப் பெருவெளியில் எங்கிருந்தோ எழுதிக்கொண்டிருக்கும் பதிவரை,எழுத்தார்வலரை,எழுத்தாளரை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முகமாக அவர்களுடைய திறமைக்கு ஒரு சவாலாக நடத்தப்படுகிற நிகழ்வு மணற்கேணி. மணற்கேணி போட்டி என்று சொல்வதை விட ஓர் அழகான நிகழ்வு என்று வருணிப்பது பொருத்தமாக அமையும்.

இந்த ஆண்டு நடைபெரும் மணற்கேணி 2010 கருத்தாய்வுப் போட்டிகளில் மூன்று பிரிவுகளில் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மூன்று பிரிவுகளிலும் தலா ஒரு வெற்றியாளர் தகை சான்ற நடுவர்களால் முதல் பரிசுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட அம்மூவரும் ஒரு வாரகால சிங்கப்பூர் சுற்றுலாவை பரிசிலாகப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு சிங்கப்பூருக்கு அழைக்கப்படுவார்கள்!(இரண்டு வழிகள் மட்டும்: சென்னையிலிருந்து சிங்கப்பூர், கொழும்பிலிருந்து சிங்கப்பூர்) சிங்கப்பூரில் ஒரு வாரகாலம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். பங்கேற்கும் மற்ற சிறந்த கட்டுரைகளுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழை முன்னிறுத்தி நடைபெரும் நிகழ்வு/போட்டியாதலால் ஆக்கங்களில் இயன்றவரை தனித்தமிழ் முயற்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

அரசியல்/குமுகாயம்

1. களப்பிரர் காலம்
2. இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – நன்மை தீமைகள்
3. எல்லா சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன்?
4. இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை
5. தமிழகத்தில் நகரமயமாக்கலும் விளைவுகளும்
6. கருத்துரிமை சுதந்திரம், ஊடகங்களின் வணிக நோக்கம், மாற்று ஊடகங்கள்
7. ஈழத்தமிழர் நிலை நேற்று இன்று நாளை
8. சமச்சீர் கல்வி
9. கூட்டாண்மை(Corporate) அரசியல் – நவீன சுரண்டல்
10.புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தில் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமங்கள் – நேற்று இன்று நாளை

தமிழ்/இலக்கியம்

1.பழந்தமிழ் இலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்கள்
2.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு
3.நாட்டுப்புற இலக்கியங்கள்
4.சேரர்கள்
5.உரையாசிரியர்கள்
6.தமிழ் விக்கிப்பீடியா
7.மெல்லத்தமிழினி வாழும்
8.எழுத்துச் சீர்திருத்தம்

அறிவியல் தமிழ்/தமிழில் தொழில் நுட்பம்

1.மரபுசாரா ஆற்றல் வளம்
2,தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் கட்டுரை
3.தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை
4.அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும்
5. கணிணித்தமிழ்

உங்கள் கட்டுரைகளை மின்னஞ்சலாக அனுப்பி வைக்கவும், போட்டி இறுதி நாள் டிசம்பர் 31, 2010 23:59:59 (தமிழக நேரம்)க்குள் அனுப்ப வேண்டும்

அரசியல் சமூகம் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி politics@sgtamilbloggers.com
தமிழ் இலக்கியம் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி literature@sgtamilbloggers.com
தமிழ் அறிவியல் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி science@sgtamilbloggers.com
போட்டி தொடங்கும் நாளுக்கு முன்னர் அல்லது போட்டிக்கான ஆக்கங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாளுக்கு பின்னர் வரும் ஆக்கங்கள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.

நன்றி!
இங்ஙனம்,
சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம்
www.sgtamilbloggers.com
www.tamilveli.com

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts