தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும்
கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி – 2010
————————————————————————————-
கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப்போட்டியைச் சிறப்பாக நடத்திடத் திட்டமிட்டுள்ளது தமுஎகச. 2007ஆம் ஆண்டு; ஜெயகாந்தனும், 2008ஆம் ஆண்டு பிரபஞ்சனும், 2009ஆம் ஆண்டு ‘பூ’திரைப்பட இயக்குநர் ‘சசி’யும் கலந்துகொண்டு பரிசு வழங்கினர். 2010ஆம் ஆண்டும் பரிசளிப்பு விழா புதுக்கோட்டையில் சிறப்பாக நிகழும்.
முதல்பரிசு – ரூ. 5,000
இரண்டாம் பரிசு – ரூ. 3,000
மூன்றாம் பரிசு – ரூ. 2,000
மற்றும் தேர்வுபெறும் கதைகளுக்கு ஆறுதல் பரிசுகளுடன் சான்றிதழும் வழங்கப்படும்.
கதைகள் சிறந்த இலக்கிய இதழ்களில் வெளியிடப்படும்.
விதிமுறைகள் :
@ ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்
@ கதையை எழுதியவர் அது தனது சொந்தக் கற்பனையே எனவும் வெளியிடப்படாதது எனவும் உறுதிதந்து, பெயர் முகவரி மற்றும் தொடர்பு எண்களைத் தனித்தாளில் எழுதி இணைத்து அனுப்ப வேண்டும்.
@ கதைப் பக்கங்களில் எழுதியவர் பெயர் விவரம் இருக்கக் கூடாது
@ வெளிநாடுகளில் இருப்போர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, ஒருங்குறி (யூனிகோடு) எழுத்துருவில் சிறு கதைகளை அனுப்பலாம்.
@ அஞ்சல் உறையிலும், மின்னஞ்சலில் அனுப்புவோர் Subject பகுதியிலும் ‘கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி’ என்று குறிப்பிட வேண்டுகிறோம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
கவிஞர் ரமா.ராமநாதன்,
மாவட்டச் செயலர்-த.மு.எ.க.ச.,
2 ஃ 435 பாரதி நகர்,
ஆலங்குடி – 622 301
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு
அலைபேசித் தொடர்புக்கு : 9865566151, 9443193293
மின்னஞ்சலில் கதைகளை அனுப்ப : muthunilavanpdk@gmail.com
கதைகள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் : 25-09-2010
———————————————————————————————
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)நமது பூமி கவிதை -33 பாகம் -3
- காலம் சிரித்துக்கொண்டே இருந்தது….
- வண்ணங்கள் பேசட்டும்
- ஞாயிறை போல் வாட்டும் ஒரு திங்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! துணைக்கோள் நிலவு குறுகிக் கொண்டு வருகிறது ! (கட்டுரை: 69-1)
- மானுடச் சித்திரங்கள் நீலகண்டனின் “உறங்கா நகரம்”
- காலச்சுவடு… வீழ்தலின் நிழல் .. ரிஷான் ஷெரீஃப் .. எனது பார்வையில்
- அகம் களித்த நாழிகைகள்
- பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்
- மண் சுமந்த மேனியர் – உதவித் திட்டம்
- காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு
- நேர்காணல்- இரண்டாம் இதழ் –
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி – 2010
- செம்மொழி மாநாட்டு – உலகளாவிய கவிதைப் போட்டி கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு பரிசு
- வனாந்திரம்
- இரண்டு கவிதைகள்
- தூங்கும் அழகிகளின் இல்லம்
- சூழ்நிலைக்கைதி
- பரிமளவல்லி – அத்தியாயம் 10. ‘போட்டோ ஷாப்’
- க்ருஷ்ண லீலை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -11
- சிம்ரன், ஜோதிகா, ஸ்னேஹா மற்றும் ஸ்ரீ மகா விஷ்ணு
- தண்ணீர் குளூக்கோஸ் மற்றும் ஜுஸ்
- பார்சலோனா -2
- ‘ஆரிய சமாஜம்’ என்கிற சிறு நூலையும் அதையொட்டிய வெ.சா.வின் கட்டுரையினையும் முன்வைத்து…
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 6
- காலமும் கனவுகளும் சென்னையின் கதை (1921)
- ஒரு திரைப்பட இயக்குனரின் சுயசரிதம்
- நினைவுகளின் சுவட்டில் (இரண்டாம் பாகம்)- (52)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நீராவிப் புகை இழைகள் கவிதை -17 பாகம் -2
- அசையும் கை நிழல்..
- முதுமையெனும் வனம்
- குடியிருப்புக்கள்…
- முள்பாதை 45
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 11