அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

திண்ணை வெள்ளி மார்ச் 19 வரை பதிவேறியுள்ள சீதாம்மாவின் குறிப்பேடு ஆறு பகுதிகளையும் தொடர்ந்து ஆழமாகப் படித்து வந்தேன். அதற்கு என் சொந்தக் காரணமும் உண்டு.

1980 – 1986 ஆண்டுக்காலத்தில் பேராசிரியர் முனைவர் தா.வே.வீராசாமி அவர்களின் மேற்பார்வையில் ஜெயகாந்தன் சிறுகதைகளை சமூகப் பார்வையில் ஆய்வு செய்தேன்.

பேராசிரியர் சு.வேங்கடராமன் அவர்கள் பலவகைகளில் அதற்கு பேருதவி செய்தார்.

ஆய்வு இலக்கண வரையறைகளுக்கு உட்பட்டு அதைச்செய்ததில் பல கசப்புகள் எங்களுக்கு வாய்த்தன.

அப்படியெல்லாம் தளைப்படாமல், ‘சீதாம்மாவின் குறிப்பே’ட்டில் சீதாலட்சுமி அவர்களோ விடுதலையாகத் தன கருத்துகளைத் திண்ணையில் பதிவுசெய்திருக்கிறார்.

“என் பணிகளுக்காகப் பல சிறப்புப் பயிற்சிகள் பெற்றவள் நான்” என்றும்; “என்னை ஒரு இடத்தில் பேசக் கூப்பிட்டிருந்தார்கள். நான் பேச்சில் கெட்டிக்காரி. அதுவும் உளவியல் தெரிந்து பேசியதால் என்னை பல தரப்பினரும் பேசக் கூப்பிடுவர்” என்றும் தன்னம்பிக்கையுடன் அவர்கள் திண்ணையில் குறிப்பிட முடிகிறது.

இதுவே இணையதளம் தரும் விடுதலையுணர்வு.

அன்புடன்,
தேவமைந்தன்

Series Navigation

author

தேவமைந்தன்

தேவமைந்தன்

Similar Posts