அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

கார்கில் ஜெய்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
‘இந்தியா விடும் ராக்கெட் நன்னா சந்திரனுக்கு போனுமே’ என்று சந்திரனுக்கே அர்ச்சனை செய்யும் அசட்டு ஹிந்துவான நான், ஸ்ரீ. அப்துல் அஸீஸ் அவர்களின் கட்டுரையை வாசித்தேன். அதனால் ஏற்பட்ட் அஜீரணம் காரணமாக எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்று புதிய மாதவி எழுதிய இலக்கியத் தொன்மை வாய்ந்த கட்டுரையையும் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

காஞ்சிபுரத்தின் புதுமுனிவராக அண்ணாவை பக்த கோடிகள் தேர்ந்தெடுத்த திராவிட உண்மையை புதியமாதவி எழுதியிருந்த்தார். அவருக்கு ஒரு வேண்டுகோள். இந்த திராவிட உண்மைகளுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? (திராவிட எழுத்தாளார்களின் புத்தகங்களில் இல்லாமல் நாளிதழ்களில் இருந்து)

1) எப்போது கிருபானந்தவாரியார் முன்னிலையில் பக்தர்கள் திரு.அண்ணாத்துரையை காஞ்சி முனிவராகத் தேர்ந்த்தெடுத்தனர்? எந்த பத்திரிகையில் இநநிகழ்வு (அசம்பவமாகவாவது) பதிவு செய்யப்பட்டது?

2) எப்போது, என்று திரு. அண்ணாத்துரை “no sentence can end with because, because because is a conjuction” என்று குறிப்பிட்டார்? இது பற்றி திராவிட இயக்க நாளிதழ்களாவது செய்தி வெளியிட்டனவா?

3) எப்போது யேல் பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார்? எந்த பேராசிரியர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு நடந்தது? அதற்கான குறிப்பு ஏதேனும் இந்திய அல்லது அமெரிக்க நாளேடுகளில் வெளியானதா? யேல் பல்கலைக்கழக குறிப்பேடுகளில் இது பதிவாகியுள்ளதா?

அல்லது இதுவும் ‘பெரியார்தான் வைக்கம் வீரர்..அவரேதான் கோவிலில் போராட்டம் நடத்தினார், காங்கிரஸ் அனுப்பிவைத்ததால் ஒன்றும் அவர் நடத்தவில்லை..’ என்பது போன்ற திராவிட உண்மையா?

இதையெல்லாம் தெரிந்துகொண்டால் நல்லது என்பதால்தான் கேட்கிறேன். வேறு எதற்கும் அல்ல.

நன்றி,
கார்கில் ஜெய்

Series Navigation

author

கார்கில் ஜெய்

கார்கில் ஜெய்

Similar Posts