பாராட்டலாம் பரிமாற்றம்தான் சாத்தியமில்லை

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

மலர்மன்னன்


// ஒருவேளை அமீனை இஸ்லாத்தின் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பட்டியலில் உள்ளவர் என்று மலர்மன்னன் நினைத்து அவரின் கடிதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறாரோ என்னவோ. தூய்மையான இஸ்லாத்தில் இந்த மாதிரியான பட்டியல்கள் எல்லாம் கிடையாது.//

மேலே காணப்படுவது பி.ஏ. ஷேக் தாவூத் தேறுக தேறும் பொருள் என்ற தலைப்பில் எழுதிய முந்தைய கட்டுரையில் இடம் பெறும் வாசகங்கள். இதன் தொனியில் அப்பட்டமாக வெளிப்படும் எள்ளலை கவனிக்க வேண்டும். நமது வணக்கத்திற்குரிய ஆழ்வார் நாயன்மார்களை அமீன் என்பவருடன் இணை வைத்து நான் நினைத்துவிட்டதாகப் பரிகசிக்கும் அளவுக்கு நாகரிகம் உள்ளவராகக் காணப்படும் தாவூத் இப்போது கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும் என்று உபதேசம் செய்கிறார்! இப்படிப்பட்டவர்களிடம் கருத்துப் பரிமாற்றம் எந்த அளவுக்குப் பிரயோசனப்படும் என்று யோசிக்க வேண்டும்.

தனக்கு உருது சுட்டுப் போட்டாலும் வராது என்று தாவூத் தெரிவித்திருக்கிறார். ஆக இவரது மூத்த தலைமுறையினர் அல்லது முன்னோர்கள் ஏதோ ஒரு காலத்தில் எந்த நிர்பந்தம் காரணமாகவோ தமது தாய் மதமான ஹிந்து தர்மத்திலிருந்து முகமதியராக மத மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. நிர்பந்தம் ஏதும் இல்லை, அவர்களாகவேதான் மாறினார்கள் என்று உறுதி செய்வதற்கு தாவூதிடம் ஏதேனும் ஆதாரம் இருக்குமானால் நல்லது. இல்லாத பட்சத்தில் நிர்பந்தம் என்றுதான் முடிவாக வேண்டும் என்பது இயற்கை நீதி தெரிந்தவர்களுக்குப் புரியும்!

போகட்டும், இப்போது தாவூதின் முந்தைய தலைமுறையினர் எக்காரணம் கொண்டு மதம் மாறினார்கள், அடி உதைக்கு பயந்தா, ஆசைகள் காட்டப்பட்டதாலா என்பது அல்ல, பிரச்சினை. அதைவிட்டு விடலாம். ஆனால் ஒரு காலத்தில் தமது முன்னோர் கடைப்பிடித்த தாய் மதத்தின் மெய்யடியார்களை எள்ளி நகையாடுகிறோமே என்கிற உறுத்தல் சிறிதளவும் இல்லாமல் எழுதிச் செல்லும் தாவூதிடம் கருத்துப் பரிமாற்றம் எந்த அளவுக்கு சாத்தியம்?

முகமதியராக மாறியதால் பிற மதப் பெரியவர்களை துச்சமாக மதிப்பது எப்படித் தானாக வந்து விடுகிறது பார்த்தீர்களா?

பதில் அளிக்க முடியாதபோது சொல்லப்பட்ட கருத்தை மனம் போன போக்கில் திரித்து அதற்கு பதில் பேசுவது திராவிட இயக்க, முகமதிய எழுத்தாளர்களின் வழமை என்பது தெரிந்த விஷயம்தான். பேச்சை திசை திருப்பி விவாதப் பொருளை வேறு எங்கோ கொண்டு செல்கிற உத்தி இது!

முகமதியம் பற்றி மிகச் சரியாகவே புரிந்துகொண்டுள்ள பலருள் நானும் ஒருவன். தவாறாகப் புரிந்துகொள்கிற அளவுக்கு அதில் சூட்சுமம் எதுவும் இல்லை. எல்லாம் தெளிவாகவே உள்ளன.

பதினான்காம் நூற்றாண்டு காட்டுமிராண்டி அரேபியர்களை இறையுணர்வு பெறச் செய்தவர் தங்களின் இறை தூதர் என்பது அமீனின் விளக்கம். காட்டுமிராண்டி அரேபியர்கள் களுக்கான அந்த சமாசாரத்தை நாகரிகமடைந்த கலாசாரங்கள் மீது திணிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது எனது கேள்வி. தொன்மையான கலாசாரத்தைப் பெற்ற தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாவூதின் நாகரிகம் வாய்ந்த முன்னோர்கள் மீது காட்டு மிராண்டி அரேபியர்களுக்கான சமாசாரம் திணிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? அந்த அளவுக்குத் தமிழரின் நாகரிகம் இறையுணர்வு அற்று மனம் போன போக்கில் நடந்து கொள்வதாக இருந்ததா? ஈ.வே.ரா. சொன்ன மாதிரி தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, ஆகவே தமிழரும் காட்டுமிராண்டிகள்; அவர்களை இறையுணர்வு மிக்க நாகரிக மக்களாக மாற்றுவதற்குத்தான் முகமதியம் இங்கு நுழைந்ததா?

தாவூத் திசை திருப்பாமல் பதில் சொல்ல வேண்டும்.

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கூட முகமதியம் தன் மக்களிடமே வன்முறை யினைப் பிரயோகிக்கையில் கடந்த காலங்களில் அது எப்படியெல்லாம் வன்முறையை அனைவர் மீதும் பிரயோகித்திருக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட யூடியூப் படங்களைக் குறிப்பிட்டால் அதையுமா திசை திருப்புவது? யூடியூப் காட்டுவது அவரவர் எடுத்த படங்களை. சிலர் குழுக்களாகவும் இணைந்து தமது கருத்திற்கிசைந்த விஷயங்கள் தொடர்பானவற்றைப் படமெடுத்துப் போடுகிறார்கள். அதில் சந்தேகப்படுவதற்கு ஏதும் இல்லை. சில குழுகள் அல் ஜஜீராவிலிருந்தேகூட நகல் எடுத்துப் போடுகின்றன. அதில் நடைபெறும் பகிரங்க வன்முறைப் பிரசாரத்தை அம்பலப்படுத்துவதற்காக.

சமீபத்தில் பாகிஸ்தானில் மார்க்க கல்வி அளிக்கும் ஒரு மதரசாவிலேயே குண்டு வெடித்து பல சிறுவர்கள் மாண்டனர். விசாரித்ததில் அங்கு மார்க்க போதனை செய்யும் மவுல்வி குண்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக குண்டு வெடித்துவிட்டது தெரிய வந்தது. அவர் பயண்ங்கர வாதக் குழுக்களுடன் சமபந்தப் பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த மவுல்வி பயண்ங்கர வாதிகளுடன் இநைந்து பணியாற்றுபவர் என்று மக்கள் சர்வ சாதாரணமாகக் கூறினார்கள்! கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி நாளிதழ்களில் இச்செய்தி வந்தது. சம்பவம் எல்லைப்புறப் பகுதியில் அல்ல, உள் மாநிலத்திலேயே நிகழ்ந்தது. முகமதிய பயங்கர வாதக் குழுக்களில் பெரும்பாலும் குருமார்கள்தான் தலைமை வகிக்கிறார்கள். மதத்தின் பேரால்தான், மதத்தைக் காப்பதாகக் கூறித்தான், பயங்கர வாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். உலகி லுள்ள பல்வேறு முகமதிய தலைமை குருமார்களும் ஒன்று சேர்ந்து முகமதிய மதத்தின் பெயரால் பயங்கர வாதத்தில் ஈடுபடுபவர்களைக் கொல்பவர்க்கு வெகுமானம் அளிக்கப்படும் என்று ஒரு ஃபத்வா கொடுக்க வேண்டியதுதானே! முகமதியத்தின் பெயரை அந்த பயங்கரவாதிகளும் மாசு படுத்துகிறார்கள் தானே; அப்படியொரு குற்றம் சுமத்தித்தானே பலரையும் கொல்வதற்கு ஃபத்வா கொடுப்பது வழக்கத்தில் உள்ளது! அப்புறம் ஏன் இதில் தயக்கம்?

அரேபியர்கள் பதினான்காம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தார்களா அல்லவா என்பதைத்தான் தாவூத் விளக்க வேண்டும். இல்லை எனில் அவர்களிடையே முகமது இறை தூதராக வந்து மாற்றங்கள் செய்தாரா இல்லையா, செய்தார் எனில் ஏன், இல்லை எனில் அவர் அப்போதைய அரேபிய வழக்கங்களை அங்கீகரித்தாரா என்றெல்லாம் விளக்கம் அளிப்பதைத் தவிர்த்துவிட்டு திசை திருப்புவதால் என்ன பயன்?

ஆக்கூ, ஜாக்கூ, காய்க்கூ, நக்கோ என்றல்லாம் பேசுகிற முகமதியர்களும் தமிழ்நாட்டில், சென்னையில் நிரம்பி வழிகிறார்கள். எனவேதான் பலருக்கும் புரியும் என்ற நம்பிக்கையில் எனது கட்டுரைக்கு அவ்வாறு தலைப்பிட்டேன். பல ஆண்டுகளுக்கு முன் ஆல்பர்ட் பின்டோக்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை என்றொரு ஹிந்தி திரைப்படம் வந்தது. நல்ல படம்.
நேரடியான பேச்சின்றி, ஒருவர் சொல்வதைத் திரித்து, எகத்தாளமாக வேறு ஏதும் பேசி திசை திருப்பி, வரலாற்றின் பக்கங்களையே கண்களை மூடிக் கொண்டு கூசாமல் கிழித்துப் போட்டுவிட்டு நடந்தவற்றையெல்லாம் நடக்கவேயில்லை என்று சாதிப்பவர்களிடம் கருத்துப் பரிமாற்றம் எவ்வாறு சாத்தியப்படும்? முகமதிய மன்னர்கள் காலத்து உடன் செல்லும் நிகழ்ச்சிப் பதிவாளர்களே பல்லாயிரக் கணக்கான ஹிந்துக்கள் கத்தி முனையில் மதம் மாற்றப்பட்டதை ஆவணப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற பதிவுகள் பாரசீகம், மெசபடொமியா போன்ற பகுதிகளிலும் உள்ளன. இவையெல்லாம் வன்முறைப் பிரயோகத்தின் மூலமாக முகமதியம் பரவிய கதையைப் பேசுகின்றன. என்ன இருந்தாலும் சோற்றில் முழுப் பூசனியை மறைக்கப் பார்க்கும் அசாத்தியத் துணிச்சலைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

சிசுக் கொலை ஒரு சமூகப் பிரச்சினை. மத ஆவணமாகவே ஏற்கப்படுகிற ஹதீஸ்களில் குற்றங்களும் தண்டனைகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுபோல் மத ஆவணமாக ஹிந்து தர்மத்தில் எதுவும் மதத்தின் பெயரால் வலியுறுத்தப்படவில்லை. எனவேதான் உடன் கட்டை ஏறுதல், இருதார மணம் போன்ற சமூக நடைமுறைகளை எளிதாக நிறைவேற்ற முடிந்தது.

முகமதியப் பெண்டிரின் விவாக ரத்து உரிமை குறித்துச் சில ஆண்டுகளுக்கு முன்பே காலச் சுவடு இதழில் எழுதியுள்ளேன். அது காலச் சுவடு வெளியிட்ட இஸ்லாம் தொகுப்பிலும் உள்ளது. விருப்பமிருந்தால் படிக்கலாம். பெண்டிருக்கான மண முறிவு எவ்வளவு பாரபட்சமானது என்பது விளங்கும். உதாரணமாக,

மண முறிவு வேண்டும் பெண் வெகு எளிதாக இடைவெளிவிட்டே கூட தலாக் சொல்வது போலச் சொல்லிவிட முடியுமா? அப்படி மண முறிவு பெற்ற பிறகு, தான் நொந்து பெற்ற குழந்தைகள் மீது சொந்தம் கொண்டாட இயலுமா?

+++

malarmannan79@rediffmail.com

Series Navigation

author

மலர் மன்னன்

மலர் மன்னன்

Similar Posts