அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

மதுமிதா எழுதிய ‘மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது’ கருத்துரையின் பகுதிகள் இரண்டையும் வாசித்தேன்.

மதுமிதா அவர்களின் – மிகவும் வேறுபாடான நேர்காணல்கள் நூலொன்றை ஏற்கெனவே வாசித்திருக்கிறேன்.

இது மேலும் வேறுபட்டு சிறப்பாக வந்துள்ளது.

“உலகளாவிய சகோதரத்துவம் நிலவும் மேசன் ரகசியம் சங்கம் இன்னும் நிகழ்கிறதா. இவ்விஷயத்தில் உங்களின் செலக்டிவ் அம்னீஸியா இன்னும் சரியாகவில்லையா? இச்சங்கத்தின் உதவி கொண்டு வேறு ஏதும் வலிமையான காரியம் சாதித்துக்கொள்ளவியலுமா?” போன்ற கேள்விகளும்; கடிதவழி நேர்காணப்பெற்றவர் பொறுமையாக அவற்றுக்கு மறுமொழி சொன்ன வகையும் இருவர் பக்கமும் எனக்கு உள்ள மரியாதையை மேலும் உயர்த்தி விட்டது.
“களைப்பிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி எழுதுவதுதான்” என்ற வரி, வாழ்க்கையில் மிகவும் களைத்துப்போய்விட்ட எனக்கு ஊக்கம் தந்தது.

இத்தகைய கருத்துரைகளை வெளியிடும் உங்களுக்கு எப்பொழுதும்போல் என் பாராட்டுகள்!

அன்புடன்,

தேவமைந்தன்

(அ. பசுபதி)

Series Navigation

author

தேவமைந்தன்

தேவமைந்தன்

Similar Posts