தமிழ் ஸ்டுடியோ.காம்
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.
நாள்: சனிக்கிழமை (13-06-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை
10 AM – 2 PM – உலகப் படம் திரையிடல்
இந்த மாதம் உலகப் படம் திரையிடல் பகுதியில் ஐசன்ஸ்டீன் இயக்கத்தில் வெளிவந்த “தி பாட்டில்ஷிப் ஆப் பொடேம்கின்” திரைப்படமும், டெர்ரி க்ரோர்ஜ் இயக்கத்தில் வெளிவந்த “ஹோட்டல் ர்வாண்டா” திரைப்படமும் திரையிடப்படுகிறது.
இத்துடன் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.
3 PM – 7 PM – குறும்பட வட்டம்
முதல் பகுதி: (3 PM-4 PM) – கலைகளை ஆவணமாக்குவோம்.
இந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் வெ. நீலகண்டன் அவர்கள் “கலைகளை ஆவணமாக்குவோம்” என்கிறத் தலைப்பில் தனது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்.
இவரைப் பற்றி:
இவரது கவிதைகள் “நாங்களும் சில பூக்களும்” என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. ‘கூடாரம்’ என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ‘ மரணகானா விஜியின்’ சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து “சாக்கடை சரித்திரம்” என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.
சிறந்த வலைப்பதிவர் விருது:
இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. நர்சிம் அவர்கள். இவரது வலைப்பூ. http://www.narsim.in/
தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இரண்டாம் பகுதி: (4.30 PM – 5.30 PM) – குறும்பட வழிகாட்டல்
இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் திரு. சக்தி சரவணன் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் குறித்து மிக நுணுக்கமான பல தகவல்களை வாசகர்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இவர் பணியாற்றியுள்ள படங்கள்:
திரு. சக்தி சரவணன் அவர்கள் “பூவே உனக்காக”, “சூரிய வம்சம்”, “ஆஹா” “திருப்பாச்சி”, உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், சமீபத்தில் வெளிவந்த “சிலம்பாட்டம்” படத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
மூன்றாம் பகுதி: (5.30 PM – 6.30 PM ) – குறும்படங்கள் திரையிடல்
இந்த மாதம் திரையிடல் பகுதியில் செல்வி. திவ்யா அவர்கள் இயக்கிய “இருண்டவீடு”, திரு. சா.சு. அவர்கள் இயக்கிய “வேண்டுதல்” திரு. எ. என். சரவணன் அவர்கள் இயக்கிய “அறியாமை” ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:
இம்மாதம் புகழ்பெற்ற திரைப்பட கதாசிரியர் திரு. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆச்லோசனைகளும் வழங்க உள்ளார்.
குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.
6.30 PM – 7 PM – வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.
மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
—
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -6
- கவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்
- கவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு ஓர் நினைவஞ்சலி
- நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
- விமர்சனக் கடிதம் – 3 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(3)
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(2)
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(1)
- துரோகம்
- கடல் விழுங்கும் ஆறுகள்….
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! 2012 ஆம் ஆண்டில் பரிதியின் துருவம் திசைமாறும் போது பூமிக்கு என்ன நேரிடும் ?
- ஆன் ஃப்ராங்க் – யூத அழிப்பின் போது ஒளிந்திருந்து டயரிக் குறிப்புகள் எழுதிய சிறுமி
- சங்கச் சுரங்கம் – 18 : பட்டினப்பாலை
- அறிவியல் புனைகதை-: அரசு நின்று சொல்லும்
- இதயத்தை நிறைத்த இரு இலக்கிய நிகழ்வுகள்
- உதிரும் இலைக்கு பதில் பயனளிக்காது
- கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.
- பேருண்மை…
- கே.பாலமுருகன் கவிதைகள்
- எம் மண்
- வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரங்கள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்பது
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஏழாவது அத்தியாயம்
- தேவதைகள் காணாமல் போயின
- துப்பாக்கிகள் குறி பார்கையில் ..
- முஸ்லிம் உலகிற்கு ஒபாமா சொல்ல மறந்தவை
- பெண்ணியக்கத்தின் முன்னோடி: நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார்
- வார்த்தை ஜூன் 2009 இதழில்
- வெ.சாவுக்கு வலக்கர விளக்கம்
- ஆணாதிக்க உலகில் பெண்ணாய் வாழ்தல்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -40 << யுத்த வீரன் காதலி >>
- கோபங்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மனிதனின் கானம் >> கவிதை -11 பாகம் -1
- வேத வனம் விருட்சம் 37
- துரோகத்தின் தருணம்