இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 2

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

நேசகுமார்


எழுத இன்னும் நிறைய இருக்கிறது என்றாலும், நேரம் மற்றும் படிப்பவர்களின் பொறுமை ஆகியவை கருதி அப்துல் கையூமின் சில கருத்துக்களுக்கு மட்டும் பதிலளித்திட விழைகின்றேன். மற்றவை குறித்து (குறிப்பாக திரு. ஹமீது ஜாஃபர் அவர்களுக்கு) முடிந்தால் தனியே எழுதுகிறேன்.

அப்துல் கையூமின் கடித வரிகள்:

1. //‘கஃபா’ ங்குறது வெறும் கல்மண்டபம். அதப்போயி எந்த முஸ்லீமும் வணங்குறதில்லே. இறைவழிபாட்டுக்காக உலகத்துலே நிறுவப்பட்ட முதல் ஆலயம் அது. இன்னும் சொல்லப்போனா உலகத்துலே இருக்குற எல்லா பள்ளிவாசலும் இறையில்லம்தானுங்க. ஒரு Discipline-க்காக எல்லா முஸ்லீம்களும் கட்டுப்பாடான முறையிலே, ஒழுங்கு முறையைக் கடைப்பிடிச்சு, ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி, ஒரே நேரத்துலே தொழறாங்க அவ்ளோதான். கூட்டுப் பிரார்த்தனையிலே ஒரு ‘பவர்புல் வேவ்ஸ்’ கிளம்புதுன்னு இந்துமத சாஸ்திரங்கள் கூட சொல்லுதுங்களே. //

அப்துல் கையூமிற்கு அடிப்படை தெரியவில்லை. காபாவில் இன்னும் ஆதிகாலத்தில் அரபியர்கள் பெண் தெய்வங்களாக வழிபட்ட கம்பங்கள் இருக்கின்றன. ஹூபலாக வழிபடப்பட்ட ‘ஹஜருல் அஸ்வத்’ – லிங்கம் இன்னும் இருக்கின்றது.

மூன்று கம்பத்தெய்வங்கள்:
http://www.chillnite.com/wp-content/uploads/2007/07/k2.jpg

இவை உள்ளே கபாவை தாங்கும் தூண்கள் அல்ல. இவை உத்திரத்தை தொடவில்லை. இதே கம்பத்தெய்வங்கள் இஸ்லாத்துக்கு முந்தய காலத்தில் மத்திய கிழக்கு முழுவதும் வழிபடப்பட்டன.

ஹஜருல் அஸ்வத் – ஹூபல்:
http://upload.wikimedia.org/wikipedia/commons/1/16/Hajre_Aswad_BlacK_Stone.jpg

(இது சம்பந்தமான விரிவான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறேன், தனியே திண்ணைக்கு அனுப்புகிறேன்.)

முஹம்மது என்ன செய்தார் என்று அப்துல்கையூமுக்கு தெரியவில்லை. யூதர்கள் தன்னை நபியென்று ஏற்க மறுத்தவுடன் முஸ்லீம்களின் வணக்கஸ்தலத்தை ஜெருசலேமிலிருந்து பாகன் அரபிகளின் பிரபல காபா இருந்த (இது போன்று பல காபாக்கள் அந்தக்கால அரேபியாவில் இருந்தன) மெக்காவை நோக்கி வணங்கும்படி தன்னை நம்பியவர்களுக்கு கட்டளையிட்டார்.

மற்ற இறையில்லங்களும் காபாவும் ஒன்றல்ல. அதன் பெயரே மஸ்ஜிதுல் ஹராம். ஆம், அங்கே வேட்டையாடுவது விலக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது, மற்ற ‘இறையில்லங்கள்’ ஒன்று என்றால் (அ.கையூம் சொல்வது போன்று), அங்கேயும் இந்த தடை இருக்க வேண்டும். ஆனால், வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது போல பல விசேஷ அந்தஸ்துகள் காபாவுக்கு இருக்கின்றன. ஏன், பாகன் ஆலயமாக அது திகழ்ந்த காலத்திலேயே, அங்கே சிலைகள் குவிந்திருந்த காலத்திலேயே ‘அல்லாஹ்’ அதை ஆனைப்படையை அனுப்பு காத்தார் என்ற கதை இஸ்லாத்தின் அடிப்படையுடன் சம்பந்தப்பட்டதாயிற்றே.

நாகூரில் மொட்டையடித்தால் அது குஃபார் என்று வாதிடும் வஹ்ஹாபிகள் அங்கே மொட்டையடிப்பதை ஏற்கின்றனர். இங்கே குர்பானி கொடுத்தால் அது குஃபார் என்று கூக்குரலிடுவோர் அங்கே கடவுளுக்கு பலி கொடுக்கின்றனர். கல்லில் கடவுளை காண்போர் காபிர் என்று கூக்குரலிடுவோர் அங்கே ‘கடவுளின் எதிரியை’ கல்லில் கண்டு கல்லை கல்லால் அடிக்கின்றினர், அது ‘பகுத்தறிவாகவும்’ தெரிகிறது. ஒன்றுக்கும் உதவாத கல்லை கும்பிடுபவர்களை சாடுபவர்கள், அங்கே கல்லை தொட்டு அது பாவத்தை எடுத்துக்கொள்ளும், அதன் காரணமாக ஜிப்ரீல் கொண்டுவந்த சுயம்புலிங்கத்தின் வெண்மை நிறம் மாறி கருமை நிறம் கொண்டுவிட்டது என்று நம்புகின்றனர். அரபி பாகன்கள் வணங்குவதற்கு பின்பற்றிய முத்தமிடுதலை அக்கல்லை நோக்கி நிறைவேற்றுகின்றனர். தர்காஹ்க்களை வலம் வருதல் தவறு என்று வாதிடுவோர், அங்கே அப்பிரதட்சனம் செய்கின்றனர். திருவண்ணாமலையை வலம் வருதல் தவறு என்று கேலி செய்வோர், அங்கே சபா மர்வா குன்றுகளுக்கு இடையே நடந்து கடவுளின் நல்லாசியைப் பெற விரும்புகின்றனர்.

அந்த ‘இறையில்லத்தில்’ நிகழ்த்தப்படும் எதையும் மற்ற மசூதிகளில், தர்காஹ்க்களில் செய்வதில்லை. அப்படி செய்ய முயன்ற சூஃபியிஸத்தை தவறென, கடவுளின் கட்டளைகளுக்கு எதிரானதென கோபத்துடன் பார்க்கின்றனர். இபுராகிமின் தர்காஹ்வில் நிறைவேற்றப்படும் இதெல்லாம் மற்ற தர்காஹ்க்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த முரண் யாருக்கும் புரியவே இல்லை.

அப்துல் கையூமுக்கு இதெல்லாம் தெரியாது என்று நினைக்கவில்லை. ஆனால், பிறரை ஏமாற்றுவதற்காக சொல்லும் வாதங்களிலேயே மூழ்கிப்போயிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து வரும் பதில், எதிராளிக்கு யோசிக்கத் தெரியும் என்று யோசித்து வருவதில்லை.

2. //நீங்க சொல்லுற மாதிரி “அல்லாஹ்”ங்குற கடவுள் கஃபாவுக்குள்ளே இருக்குறதா யாரும் சொல்லலீங்க.//

இல்லை. இறைவன், காபாவுக்கு மேலே ஏழு வானங்களுக்கு மேலே தனது இருப்பிடத்தில் இருப்பதாகத்தான் இஸ்லாம் சொல்கிறது – அல்பைதுல் மு’முர் என்ற இறையில்லம் அங்கே இருக்கிறது (அதாவது முஹம்மது தனது புராக் பயணத்தில் சொல்லியது இது. பின்னாளில் வணக்கஸ்தலம் காபாவுக்கு இடம்பெயர்ந்த பின்பு, கடவுளும் இடம் பெயர்ந்தார்).

இது சம்பந்தமான ஹதீஸ் இங்கே இருக்கிறது:
http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/058.sbt.html#005.058.227

3. //நீங்க கொடுத்திருக்கிற நிறைய தகவல் பொய்யும் புரட்டுமா இருக்குதுங்க, உதாரணமா ‘ஷியா’ பிரிவினர் நபிகள் நாயகத்தை நபின்னு ஏற்க மறுத்தாங்கன்னு சொல்றது உண்மையில்லீங்க. //

இந்த அரபி வலைத்தளத்தில் சென்று பாருங்கள். அடுக்கியிருக்கிறார்கள்.

http://www.kr-hcy.com/index2.shtml
http://www.kr-hcy.com/shia/kufr.shtml

முஹமதிற்கு கொடுக்கப் பட்ட உரிமைகள் 12 இமாம்களுக்கும் கொடுக்கப் பட்டிருகின்றன என்று சொல்லும் ஷியாக்கள், முஹம்மதின் இறுதி நபித்துவத்தை, விசேஷ நபித்துவத்தை மறுக்கிறார்களா இல்லையா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று:

//Imamiya- The ‘twelver’ Shi’as. They believe that after the Prophet, twelve Imams have come and they had the same authority of legislation as the Prophet had himself. The majority of the Shi’as we find today are Imamiya. //

http://www.muftisays.com/viewarticle.php?article=ss

இது மட்டுமல்ல. இணையத்தில் இன்று இஸ்லாமியர்களிடையே நடக்கும் விவாதங்களைப் பாருங்கள், தெரியும். இதே திண்ணையில் பேராசிரியர் ரூமி, இந்த இறுதி நபித்துவத்தை நிராகரிப்போர் இஸ்லாமியர்களே இல்லை என்று வாதிட்டிருக்கிறார் என்பதையும் அப்துல் கையூமின் கவனித்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

உடனடியாக அப்துல் கையூம் என்ன சொல்வார் என்று தெரியும், வலைத்தளத்தில் இருப்பதெல்லாம் ஆதாரமில்லை என்பார். உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட self denial mode ல் தான் உள்ளனர். கண்ணை, அறிவை, மனதின் ஈரத்தை மறைக்கும் ஈமான் உலகெங்கும் இருக்கும் இஸ்லாமிஸ்டுகளின் பார்வைக்குறையை ஏற்படுத்திவிடுகிறது. இரட்டை கோபுரங்கள் இடிபட்டால் அது யூதச்சதி என்று நம்புகிறார்கள், அல்லது கோபுரங்களே இடிபடவில்லை என்று சாதிக்கிறார்கள், மும்பை தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானிய முஸ்லீம் அடிப்படைவாதிகள் அல்ல பாஜகவினர் என்று நம்புகின்றனர், தர்காஹ்க்களில் குண்டுவைப்பது சக முஸ்லீம்கள் இல்லை, ஈராக்கில் ஷியாக்களை கொல்வது சுன்னிகள் இல்லை, அமெரிக்கர்கள் என்று நிதர்சனத்தை ஏற்க மறுத்து விதண்டாவாதம் செய்கின்றனர். இது தக்கியாவா அல்லது உண்மையிலேயே கண்களுக்கு உண்மை புலப்படவில்லையா, இந்த மனமயக்கம் எந்த வகையானது என்பதெல்லாம் நீண்ட ஆய்வுக்குரிய விஷயங்கள்.

ஷியாக்களை கொன்று குவிக்கும் சுன்னிக்களின் அறிக்கைகள், ஈராக்கில் வஹ்ஹாபிகளின் ஃபத்வாக்களினால் பெருகும் விவாகரத்துகள்(கணவன் – மனைவி, ஷியா – சுன்னியாக இருப்பதால் இந்த விவாகரத்துகள்), குண்டு வைத்து தகர்க்கப்படும் ஷியா வழிபாட்டுத் தலங்கள், அவற்றை செய்பவர்களை கண்டும் காணாதது போலிருக்கும் மற்ற சுன்னி முஸ்லீம்கள் என்று ஏராளமான ஆதாரங்கள் இருந்தும், இது வெறும் பிரிவுகளுக்கிடையேயான சச்சரவுகள் இல்லை, காபிர்கள் என்று ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு கொன்று குவிக்கும் மதப்போர் என்பது கூட புரியவில்லை, கண்ணுக்குப் புலப்படவில்லை என்றால் என்ன செய்வது? பரிதாபப்பட்டு, என்றாவது ஒரு நாள் இவர்களுக்கு விழி திறக்கும் என்று நம்பி முன்னகர்வதுதான் உலகின் முன் இருக்கும் ஒரே வழி. அதைத்தான் இந்திய சமூகம் கடந்த பதிமூன்று நூற்றாண்டுகளாக செய்து வருகிறது.

4.//அந்த காலத்து அரபிங்களை ‘காட்டரபிகள்’ன்னுதான் வரலாறே குறிப்பிடுது. அரபியிலே ‘ஜாஹிலியத்’, இங்கிலீசுலே ‘Barbaric’ ன்னு வருணிக்குறாங்க. கொஞ்ச நஞ்ச அட்டகாசம் இல்லீங்க.//

இது இஸ்லாம் சொல்வது. அதாவது வெற்றி பெற்ற பின்பு அழிக்கப்பட்ட மக்களை இழித்து வென்றவர்கள் எழுதும் சரித்திரமிது. ஆபிரகாமிய மதங்கள் அனைத்திலும் இந்த demonisation இருப்பதைப் பார்க்கலாம். ஏனெனில் ஏகப்பட்ட கொடூரங்களை தம்மைவிட பெருந்தன்மையாகவும், பண்பட்டவர்களாகவும் இருந்த ஒரு கூட்டத்தின் மீது நிகழ்த்திடும் காட்டுமிராண்டிக்கூட்டம் எப்போதும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. மெல் கிப்சனின் Apocalypto பார்த்தால் இந்த யுக்தி புரியும். தென்னமரிக்க பாகன்களை அழித்த ஆக்கிரமிப்பாளர்களை விடுதலையாளர்களாகவும், மனித நேயப்பண்பாளர்களாகவும், அழிக்கப்பட்ட அந்த தொன்மைக் கலாச்சாரம் அழிக்கப்பட வேண்டியதுதான் என்பதை பார்வையாளர்களின் மனதில் நிலை நிறுத்தும் முயற்சி இது.

இந்த ‘காட்டரபிகள்’ தாம் முஹம்மதின் முதல் மனைவி கதீஜாவை தனக்கு விருப்பப்பட்டவரை மணந்து கொள்ள அனுமதித்தனர் – பின்னாளில் முஹம்மதின் ஷரீயா அதை நிராகரித்து, பெற்றோரின் அனுமதி எனும் கண்டிஷனை இட்டது. அந்த ‘காட்டரபிகள்’ காலத்தில் தான் கதீஜா தனக்கென ஒரு தனியான வியாபாரத்தை நிகழ்த்த முடிந்தது, சுதந்திரமாக செயல்பட முடிந்தது, செல்வம் ஈட்ட முடிந்தது. ஆனால், இதெல்லாம் காட்டுத்தனம் என்றால், இஸ்லாம் நிறுவப்பட்ட பின்பு நிகழ்ந்தவைகளை என்ன சொல்வது? தாலிபான் செய்வதெல்லாம் நாகரிகமான செயல்கள் என்று உலகம் முழுவதையும் ஏமாற்ற முடியுமா என்ன?

5. //அது மட்டுமில்லீங்க. பொம்பளைங்களை ஒரு போகப் பொருளாத்தான் அவுக நெனச்சாங்க. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துலே ஜெயலலிதாவை சாட்டையாலே அடிச்சு அடிச்சு ஏலம் விடுவாங்க. அந்த அம்மாவும் “ஆடாமல் ஆடுகிறேன், பாடாமல் பாடுகிறேன், ஆண்டவனைத் தேடுகிறேன்”னு சொல்லிப்புட்டு மயங்கி மயங்கி ஒரு தினுசா டான்ஸ் ஆடும். இப்படித்தான் அரபிகளும் பொம்பளைங்களை ஒரு வியாபாரப் பொருளா கருதி ஏலம் விட்டாங்க.//

இந்த ஏலம் விடுவது முஹம்மதும் செய்த ஒன்றுதான். அவர் செய்ததாலேயே, அல்லாஹ்வின் சட்டமாகவும் ஆனது. Infact mohammed institutionalised it by granting it legitimacy in the name of Allah. நாகரிக உலகம் விழித்துக்கொள்ளும் வரை இஸ்லாமிய உலகம் முழுவதும் இது சாதாரண வழக்கமாகவும், சமூக வழக்கமாகவும் இருந்தது. யூதர்களை கொன்றபிறகு அவர்களின் பெண்களை பிடித்து ஏலம் விட்டார், தனது நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார், தான் விரும்பிய பெண்களை எடுத்துக்கொண்டார் – இதில் எங்கேயும் அந்த பெண்களின் கருத்துக்களை கேட்டதாக ஹதீஸோ, குரானோ சொல்லவில்லை. மாறாக குரானில், அப்படி பிடிக்கப்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளலாம் என்று கடவுள்(!) சொல்வதாக இருக்கிறது. பார்க்க:

http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/049.sbt.html#003.049.860

http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/050.sbt.html#003.050.885

http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/008.sbt.html#001.008.367

http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/053.sbt.html#004.053.373

குரான் சூரா 23, நம்புபவர்கள் வெற்றியைத் தழுவுவார்கள் என்று சொல்லிவிட்டு (இப்போதும் மசூதியில் இப்படியே அழைப்பு விடுக்கப்படுகிறது – வெற்றியை நோக்கி வாருங்கள் என்று, அந்தக்காலத்தைப் போலவே) நம்புபவர்களே நீங்கள் உங்களது மனைவிகள், உங்களால் போரில் பிடிக்கப்பட்டவர்கள், உங்களது உடமைகள்/அடிமைகள் ஆகியோருடன் உடலுறவில் ஈடுபடுவது அனுமதிக்கப்படுகிறது என்று தெளிவாக அறிவிக்கிறது.

பார்க்க வசனம் 23:06:

YUSUFALI: Except with those joined to them in the marriage bond, or (the captives) whom their right hands possess,- for (in their case) they are free from blame,

http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/023.qmt.html

5. //நான் நாகூர்காரன்தாங்க. அதனாலே What is your Problem? எங்க ஊரு, எத்தனையோ படைப்பாளிகளை தமிழ்மொழிக்கு வேண்டி அர்ப்பணிச்சுருக்கு.//

நான் நாகூரையோ, அந்த ஊர்க்காரர்களையோ தவறாக சொல்லும் தொணி என்னுடைய கட்டுரையில் தெரிந்தால் அதற்கு படிப்பவர்களின் கலர்க்கண்ணாடிதான் காரணமே தவிர, என்னுடைய எழுத்தில் அப்படிப்பட்ட பொதுப்படையான குற்றச்சாட்டு எதுவும் இல்லை. நான் மிகவும் ரசித்து படிக்கும் சாருநிவேதிதாவும் நாகூரிதான். நாகூர் தர்காஹ்வுக்கு நானும் சிறுவயதில் சென்றிருக்கிறேன். கடைசியாக நான்கு வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தொட்டு எழுத ஆரம்பித்த பின்பு, அங்கிருக்கும் சமாதிகள் குறித்த ஆய்வுக்காக நண்பர்களுடன் சென்று வந்தேன். குப்பையும் கூளமுமாக இருக்கும் சென்னையின் மத்திய பகுதியை விட்டுவிட்டு புறநகர்ப்பகுதியிலிருந்து துவங்கினால், கோவளத்திலிருந்து தேங்காப்பட்டினம் வரை தமிழகத்தின் நெய்தல் நிலப்பரப்பு மிகவும் அழகானது, சுகமானது என்பதில் என்ன சந்தேகம்? நல்ல நிலப்பரப்பு நல்ல ஜனங்களையும், நல்ல சிந்தனையையும் தருகிறது. குப்பையும், கூளமுமாக இருக்கும் நிலப்பரப்பு அல்லது தகிப்பும் வெறுமையும் நிறைந்த பாலைவனம் நமது புத்தியை பேதலிக்கச் செய்கிறது. மத்திய காலங்களில் புறப்பட்ட அழிவுக்கோட்பாடுகள் பாலைவனங்களிலிருந்து புறப்பட்டது என்றால், இன்றைய காலகட்டத்தில் குப்பையும் கூளமுமான நகரங்கள் அதையே செய்கின்றன, பெரும் கூட்டத்தின் மனதை ஆக்கிரமிக்கின்றன. சுகமான பிரதேசங்களில் இருக்கும் பன்மைத்தன்மை, எளிமை, அன்பு ஆகியவை இந்த ஆவேசங்களின் முன்பு மண்டியிட்டு திம்மிகளாகின்றன அல்லது எதிர்த்து நின்று அழிவை சந்திக்கின்றன.

அழிவையும் இறைவனாக வணங்கும் ஒரு இந்துவான நான் நடப்பதெல்லாம் இறை சித்தம் என்றே ஏற்கிறேன். இதில் குப்பை கூளத்தையே குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை எனும்போது நாகூரையோ, நாங்கோரிகளையோ இழித்துப் பேசுவதற்கு இடமேது?

***

சுருங்கச் சொல்வதானால், இந்த ஐந்துவருட இணையப் பயணத்தில் நான் கண்ட உண்மை ஒன்றுதான். அது, Empty rhetoric + jingoism + psycho frenzy இந்த மூன்று தான் தமிழ் இஸ்லாமிஸ்டுகளின் மனங்களை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது, உலக இஸ்லாமிஸ்டுகளைப் போலவே. அங்கே சிந்திப்பதற்கோ, சுய விமர்சனங்களுக்கோ இடமே இல்லை. மெல்ல மெல்ல தாமே உருவாக்கும் சுழலில் தம்மை ஆழ்த்திக்கொள்வதோடு பக்கத்தில் இருப்பவர்களையும் பிடித்து உள்ளே இழுக்க முயல்கின்றனர். அந்த பாணியைத்தான் நான் திண்ணையில் விவாதிக்கும் இஸ்லாமிஸ்டுகளிடம் காண்கிறேன். மிகப் பெரும் அழிவு ஒன்றைத்தவிர வேறு எதுவும் மூடிய ஒரு குழுவை சிந்திக்க வைத்துவிட முடியாது. எனவே எனது கருத்துக்களால் ஒரு ரூமியோ, ஹமீதோ, கையூமோ மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையெல்லாம் இல்லை. இந்த விவாதங்கள் எனக்கு நானே செய்து கொள்ளும் உரத்த சிந்தனைதான். இந்த உரத்த சிந்தனையில் யாரும் எனது கருத்தை அப்படியே ஏற்கவேண்டும் என்ற எண்ணம் சிறிதுமில்லை எனக்கு. படிப்பவர்களின் சிந்தனையை தூண்டினால், அது மானுடத்திற்கு பலனளிக்கும் என்ற எண்ணமே என்னை தொடர்ந்து சிந்திக்க, எழுத, செயல்பட வைக்கின்றது. எதோ ஒரு கணத்தில் எனது சிந்தனைகள், இப்படியும் இருக்குமோ என்று என்றாவது ஒரு நாள் சக மானுடர்களின், சக தமிழர்களின் மனதில் குமிழியாக மேலெழுந்தால், அதுவே எமது உழைப்பிற்கு, நாங்கள் செலவிட்ட நேரக்குர்பானிகளுக்கு, தியாகங்களுக்கு கிடைத்த பலனாக ஏற்பேன். இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பலனை எதிர்பார்த்து செய்யப்படும் தியாகங்கள் இக-பர சுகங்களையும், பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படும் தியாகங்கள் பிறவிப்பெருங்கடலைக் கடக்க உதவும் என்ற சிந்தனை திகழும் மண்ணை எனது பாரம்பரிய மண்ணாக ஏற்கும் நான் இந்த இணையப் பயணத்தினால் விளைவு எதுவுமில்லாமல் போனாலும்,நீண்ட இறையுதிர் காலங்களுக்குப் பின்னும் என்னிடம் எனது மூதாதையரின் எச்சங்கள் இருக்கிறது என்ற சிந்தனையுடன் அதையும் இறை செயலாக ஏற்கிறேன்.


http://nesakumar.blogspot.com
http://islaamicinfo.blogspot.com
http://nesamudan.blogspot.com

Series Navigation

author

நேச குமார்

நேச குமார்

Similar Posts