இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

அறிவிப்பு


இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்

இடம் : பல்கலைக்கழகப் பேரரங்கு,பாரதியார் பல்கலைக்கழகம்,கோயம்புத்தூர்

நாள் : 17,18-05-2008(சனி,ஞாயிறு)

ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம் தமிழகத்திலும் இந்தியாவின் பிற இடங்களிலும் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் 39 ஆம் கருத்தரங்கம் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் சார்பில்
கோவை,பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

தமிழகத்திலிருந்தும்,இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் முன்பே பதிவுசெய்துள்ள பேராளர்கள்(பேராசிரியர்கள்,ஆய்வுமாணவர்கள்) வருகை தந்து ஆய்வுக் கட்டுரைகள் படிக்க உள்ளனர்.கருத்தரங்க ஆய்வுக்கோவை கருத்தரங்க நாளில் வெளியிடப்பெறும்.

17.05.2008 காலையில் நடைபெறும் தொடக்கவிழாவில்அமைசர் பொங்கலூர் பழனிச்சாமிஅவர்களும்,நடுவண் அமைச்சர் வேங்கடபதி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.18.05.2008 பிற்பகல் நிறைவுவிழா நடைபெறும் .

தமிழ்ப்பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் சந்திப்பதற்குரிய நல்ல வாய்ப்பாக இக்கருத்தரங்கு அமையும்.
விழாவுக்கான ஏற்பாடுகளைப் பேராசிரியர் தே.ஞானசேகரன் அவர்கள்(செல்பேசி : 94861 28857) செய்துவருகின்றார்.

முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி.

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts