தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

அறிவிப்பு


தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுகான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல்விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். 2007 ஆம் ஆண்டில் கனடாவின் மாண்ட்ரியாலைச் சேர்ந்த முனைவர் ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு முதல் விருது வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சயைனான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.

2008 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் தரவேண்டிய அவசியம் இல்லையென்றாலும் பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.

பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இறுதிநாள்: 31 மார்ச்சு 2008

பரிந்துரைகளை tcaward {at} gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பரிந்துரைகளை அனுப்பிய இரண்டு நாட்களுக்குள் உங்கள் பரிந்துரை கிடைத்தமை மின்னஞ்சல் மூலம் உறுதி செயப்படும்.

பரிந்துரை படிவங்களை http://tcaward.googlepages.com/ தளத்திலிருந்து பெறமுடியும்.

V. Venkataramanan

Oakville, Ontario. Canada

http://domesticatedonion.net/tamil

http://domesticatedonion.net/eng

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts