கடிதம்

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


நண்பர் திரு மகேஷ் லா.ச.ரா பற்றி – நான் மற்றும் மலர்மன்னன் எழுதிய கட்டுரைகளில் அதிர்ச்சி அடைந்தது முதிர்ச்சி இல்லாததால்தான். அவருக்கு பதில் சொல்ல எனக்கு ஆர்வமே எழவில்லை. காரணம் இந்த வரி –

I request thinnai to obtain good articles from really good tamil writers in memory of La.Sa.Ra and readers like me would be grateful

நிசமாவே நல்ல எழுத்தாளர்கள் அல்ல, நானும் மலர்மன்னனும், பாவ்லா எழுத்தாளர்கள், என்கிறார் இவர். என்னாத்த இவருக்கு பதில் எழுத, சொல்லுங்கள்?

சிலாட்களிடம் எதையோ சொல்ல வந்து ஏன்டா ஆரம்பிச்சம்னு ஆயிப்போகும். ஒரு நண்பரோடு ஸ்ரீ அரவிந்த அன்னை பற்றிப் பேசிட்டிருந்தேன். அன்னைன்னதும், தெரியும் மதர் தெரேசாதானே? அவர் எப்ப பாண்டிச்சேரி வந்தார்? – என்று கேட்டார். என் முகம் மாறியதைக் கண்டதும், சார், நீங்க அன்னிபெசன்ட் பத்திச் சொல்ல வந்தீங்க இல்லியா?… என சமாளிக்கிறதா அடுத்து ஆரம்பித்தார். அன்னை இந்திரா முதல், விஜயலெட்சுமி பண்டிட் வரை அவருக்கு பிரபலங்கள் மனசில் ஆடியிருக்கும். அவரது ஐ.க்யூ. தரத்தை அவரே மெச்சிக் கொண்டிருக்கலாம்.

இந்த ஆபத்து நம்ம ஞானக்கூத்தனுக்கு நடந்ததே. கேளுங்கள் அந்தக் கூத்தை! வணக்கம் தமிழகம், என சன் தொலைக்காட்சியில் ஞானக்கூத்தனோடு நேர்முகம். யார்? உமா வரதராஜன், என நினைக்கிறேன். ஞானக்கூத்தன் சொன்னார் – ”பிரசிடென்சி கல்லூரிக்கு மேல்படிப்புக்கு வந்த பிறகுதான் எனக்கு உலகக் கவிஞர்களின் கவிதைகளில் பரிச்சயம் ஏற்பட்டது.” உமா வரதராஜன் உடனே இடைமறித்தார். ”எப்பிடி? அந்தக் கவிஞர்கள்லாம் சென்னை வந்திருந்தாங்களா?”

கடிதம்தானே? இன்னும் கொஞ்சம் நகைச்சுவையை ரசிக்கலாம். நான் கேட்ட ஒரு அகில இந்திய வானொலி பேட்டி – வயலும் வாழ்வும், போல ஒரு நிகழ்ச்சி. ஒரு மாட்டுப்பண்ணைக்காரருடன் பேட்டி.

உங்க கிட்ட எத்தனை மாடுங்க இருக்கு?

நாற்பது.

என்ன ஜாதி?

கோனாருங்க.

நான் மாட்டோட ஜாதியைக் கேட்டேன்!

இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு தெரியும் அல்லவா? கொஞ்சம் திக்குவாய் அவருக்கு. அவர் ஒரு முக்கியமான அரசியல் பிரச்னையை விவாதித்துப் பேட்டி தந்துகொண்டிருந்தார். திடீரென்று எதிர் நிருபர் கேட்டார் –

நீங்க எப்பவுமே திக்குவீங்களா?

இல்லிங்க, பேசும்போது மட்டுந்தான் திக்குவேன்… என்றார் அவர்.

அந்த சமயத்தில் மெளனம் காப்பதே நல்லது. நம்ம மக§ஷ், என்னையும் மலர்மன்னனையும் உப்புப் பேறாத கேஸ்னு சொன்னா, நாம கடல்வாழ் உயிரினம் அல்லன்னு நினைச்சிக்க வேண்டிதான்.

மகேஷ் சிறந்த வாசகர், நான் ஒத்துக்கறேன்யா! வேற வேலை இருக்கு எனக்கு.

விமரிசனம் வேறு, மரியாதை வேறு.

லா.ச.ரா. பற்றி ஒரு நூல் ‘சந்நிதிகள் பிராகாரங்கள் வீதிகள்’ நான் தொகுக்கிறேன். அதில் அசோகமித்திரன், மணா, அபி, மலர்மன்னன், டாக்டர் ருத்ரன், முருகு-சுரேஷ், எஸ். ஷங்கரநாராயணன், ஜெயமோகன் ஆகியோர் கட்டுரை வழங்கி யிருக்கிறார்கள்.

டிசம்பர் 23 ஞாயிறு காலை பத்து பத்தரை மணியளவில், சென்னை நான்கு மயிலாப்பூர் ஆர்.கே.ஸ்வாமி அரங்கத்தில் (லேடி சிவசாமி பள்ளி வளாகம், பழைய ஆர்.ஆர்.சபா எதிரில்) லா.ச.ரா. நினைவரங்கம் ஏற்பாடு செய்திருக்கிறேன்.

ஜெயகாந்தன், கே.எஸ். சுப்ரமணியம், திருப்பூர் கிருஷ்ணன், டாக்டர் ருத்ரன், திலகவதி, முதலானோர் உரைநிகழ்த்துவார்கள். பட்டியல் நீள வாய்ப்பு உள்ளது. மேலும் பலரிடம் தொடர்பு கொண்டு வருகிறேன்.

இந்த விழா ஏற்பாடும், நூல் வெளியீடும் – என் தனி மனித முயற்சி. பெருமைக்காக அல்ல, லா.ச.ரா.வுக்கு செய்தாக வேண்டும் என நான் நினைத்தேன் என்பதுதான் செய்தி. ஒரு எழுத்தாளர் மறையும்போது சமுதாயத்துக்கு அவரது கொடை என்ன, இலக்கியத்தில் அவர் ஸ்தானம் என்ன, என்றெல்லாம் வரையறுக்க ஆர்வப்படுவது தவறா என்ன? மற்றெப்போதையும் விட இப்போது நாம் அதை அலசினால் பரவலாக எல்லாரும் கவனிப்பார்கள் அல்லவா? அது அல்லவா லா.ச.ரா.வுக்கு, மறைந்த நல்லாத்மாவுக்கு முக்கியம்.

தவிரவும், விமரிசனம் இல்லாமல், இலக்கியம் எப்படி வளரும்?

மகேஷ், நீங்க தாராளமா (விமர்)சிக்கலாம்!

லா.ச.ரா. வரிகளில் – என் கட்டுரை, நம்ம மகேஷ¤க்கு, அல்வாத் துண்டில் மயிர்!


storysankar@gmail.com

Series Navigation

author

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

Similar Posts