நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு – 1

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

கே. ஆர். மணி



( My lord.. change your judgement ! – 1)

மகேசின் கடிதம் பார்த்தேன். சாதாரண வாசக மனசு.

இறந்து போன பின் இதயத்தை கொடுத்துவிட்டு போ, என இழவுப்பரணி பாடிய தமிழ் நாட்டில் பிணத்தை காட்டி, ஓட்டு வாங்கி அரசியல் இறப்புகளை பார்த்த இந்திய மனது. இறந்து போன உடனே, அவர்களை பாராட்டி குளிப்பாட்டி நல்லதாய் நாலு வார்த்தை சொல்ல வேணாமோ ? இப்படியா.. பேசுவா..

இலக் கியவாதிகள் பொதுவாய் அறியப்படுவது அவர்கள் இறந்தவுடனோ, அல்லது விமர்சனத்திற்காய் திட்டப்படும்போதோ. பத்தாம் நாள் காரியத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நாம் மறந்துவிடுவோம். பாவம் அவர்களின் கொள்கையை எடுத்துச்செல்ல
வாரிசுகள் இல்லை. அப்படியிருந்தாலும் வாரிசுகளுக் கும் அவர்கள் இருக்கும்போதே அவர்கள் முதுகை அவர்களே சொறிந்துகொள்ளவேண்டும். அந்த பத்து நாளிலும் நல்ல பஜனையாய் பாடலாமே என்கிற வாசகமனது.

ஆனாலும், இதையெல்லாம் தாண்டி புகழ் ஒளிவட்டங்கள் இன்றி ஒரு இலக்கியவாதியின் பிம்பத்தை காலத்தின் வேதியியல் கூடத்தில் மறுதயாரிப்பு செய்யும்போது, அலசப்படும்போது இத்தகைய இழவுப் பரணியின் – உண்மையான விமர்சனங்களின் நீட்சி, முதுகுச் சொறியல், பொய்க் கோப்பின் விஷத் தெறிப்பு, காக் காய் குரல்கள், உண்மையான அழுகுரல்கள் எல்லாம் முக்கியமான கூட்டுப்பொருளாய், தவிர்க் கமுடியாத இடுபொருளாய் அமையும்.

காலம் பெயர்களை உதறும்.

******************

சயான் தமிழ் சங்கத்தில் லாசராவின் இரங்கல் கூட்டம். புதிதாய் எழுதுவதற்கு பதிலாய் மற்றவர்கள் எழுதியதை ( லாசாராவின் ரீடர், அபியின் எழுத்து கொஞ்சம், சங்கரநாராயண், மலர் மன்னனிடமிருந்து கொஞ்சம் திருட்டு, கொஞ்சம் கேள்வி ஞானம் என கலந்து கட்டினேன்.)

அவியல் புளித்தது.

அதிசியத்தது ஜெயமோகனின் சென்றதும், வென்றதும் தொடரின் லாசராவை பற்றிய சற்று விரிவான கட்டுரை. இருக் கும்போதே எழுதியது. அனுதாப அலைகள், சுயதொடர்பு பற்றிய நினைவுச்சங்கிலிகள் அற்ற தர்க் கரீதியான விமர்சனம்.

[ திருச்சி கல்யாணராமனின் கதாகலாட்சேப நடையுடன் மீபொருண்மை, கடைசி வரை குற்ற உணர்வேயில்லாத அக்கிரகார நடை, அபி-பிரமிளின் பார்வை விலகலின் காரணியங்கள் – இப்படிப்போகிற விவாதங்கள். வறண்ட யதார்த்தவாதிகளின் கைப்பிடி மணலை லாசாராவின் மீபொருண்மை கைப்பிடி மணலோடு சேர்க் கிறபோது உலகின் மொத்த பார்வையும் (Big picture) கிடைப்பதான முடிவுரை.. Final touch..

அதிகமாய், புரியாமல் பேசுவதாய் சீட்டு கொடுத்து நாசுக்காய் உட்காரச் சொன்னார்கள். நல்ல முழு நீள பேச்சாளராவதற்கான அறிகுறியென்றார்கள். நாசமாப்போச்சு, நான் பேச வந்தது இலக்கியவிமர்சனம். So in short, மேடைகளுக்கு தேவை சாதாரண வாசக மனசு.
அதனாலென்ன விரிந்தது என் மனம்.

ஜெயமோகன், ஸ, மலர்மன்னன், அபி, நந்தா – உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்.

***************

எங்கள் வீட்டின் தூரத்து சொந்தத்தில் ஒரு பாட்டி இருக் கிறாள் உயிரோடு. ஆனால் என் மனதில் அவளுக் கான இழவுக் கடிதம் கிட்டத்தட்ட தயார். அந்த பாட்டி ஒரு அழகான ராட்சசி. பிரித்தாளும் சூழ்ச்சியால் உயிர்வாழ்ந்து கொண்டுடிருக் கிற
ஒரு வயதான பிரஜை அவள். பரிதாபப்பட்டிர்கள் தொலைந்தீர்கள்.

ஆனால் அவள் சிந்தும் கண்ணீரும், பாசமும் உண்மைதான். அழுக்கும் அழகும் கலந்த உறவு அது. இப்போது அந்த கடிதம் எழுதினால் உறவுகள் என்னை மொத்திவிடும். அவளது இறப்பிற்கு பின் எனது கடிதமும், அதன் கனமும் அடுத்த தலைமுறைக் கு
அவளின் பயன்பாடு பற்றியும் என்னால் விரிவாய் விவாதிக் க முடியும். அந்த கணத்தின் நிஜத்தில், வெறுமையில் என் உண்மை, கோணம் யாருக் காவது புரியலாம்.

So, இதனால் அறியப்படுவது யாதெனின், ஒரு முயற்சியாய் சாகப்போகிற தலைவருக்கு அடுத்த இலக்கிய மேதைகளுக்கு உருக்கமாய் தொண்டர்கள்/ எழுத்தாளர்கள் இப்போதே இழவுப்பரணி எழுதி பயிற்சிக் கலாம். இறந்த பின் வருகிற அனுதாப அலைகள் இன்றி,
காழ்ப்பின்றி இருக்கும் போதே எழுதினால் தானென்ன.. அவர் இறந்தாலும், அவரின் எழுத்துக்கள் நம்மோடு வாழும் என்ற வரியை பதிவுபோல் எழுதிவிடக்கூடாது. இந்த வாரம் இறப்பவர் என்று திண்ணை ஒவ்வொரு வாரமும் அஞ்சலிக்காய் அழைப்பு விடுக்கலாம்.

(Hi these is too much yaar.. )

****************

கூட்டம் முடிந்து வெளியில் வர,

மகாலட்சுமி
சர்வாலங்கார பூஸினியாக
அமர்ந்திருக்கிறாள், சில சில்லறைகளோடு
பிச்சைக்காரர் தட்டில்.

வடைசுடும் பாட்டி எதுவுமில்லாததால்
வீடி ஸ்டேசனில் கோலிகளின் பைகளிருந்து
மீன் திருடும் மும்பை காக்கைகள்.

அவசரத்திற்கு இலகுவாய்
எட்டு துண்டாய் வெட்டப்பட்ட சாண்ட்விச்
சன்னல்வைத்த (Bar)பார்-பெண்ணின் பிரா
பின் மனசு

சுவைக்க, திறந்து சுவைக்க, திறந்து சுவைத்து மூட
பின் மலர

படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறையயிருப்பதால் அவளைத்தாண்டி வந்தேன்.


mani@techopt.com

Series Navigation

author

கே ஆர் மணி

கே ஆர் மணி

Similar Posts