கே ஆர் மணி
நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு
புகலிடம் தேடி பிழைக்கவந்த தமிழர்களின் வாழ்க்கை முரணும், பண்பாட்டுச் சிக்கலும் அலாதியானது. அது தமிழுக்கு நல்ல வரவா, செலவா என்பதை காலம்தான் கணிக்கவேண்டும். திரை கடலோடியும் காலம் காலமாய் தமிழன் திரவியம் தேடிக்கொண்டே தானிருக்கிறான். புலம்பெயர்தல் மாறாது நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது. பல பத்தாண்டுகளாய் இது ஏறுமுகமாய்த்தானிருக்கிறது. முன்னால் மலேசியா, மும்பாய், அப்புறம் துபாய் இப்போது யூஎஸ் என இடங்கள் மட்டும்தான் மாறிக்கொண்டேயிருக்கிறது. இந்தியாவில் சிலயிடங்களில் படிப்பும், உலகத்தின் ஒரு சிலயிடங்களில் உத்தியோகமுமென [பிறக்க ஓரிடம், வளர ஓரிடம், மேற்படிப்பு படிக்க ஓரிடம், நல்ல வேலைக்கு ஓரிடமென ] – இடம் மாறுவது தமிழனின் தலையெழுத்தாக விட்டது என்று அலுத்துக்கொள்வதைவிட மற்ற கலாச்சராங்களை விழுங்கி புதியன புகுந்து, பழையன கழிக்கும் காலச்சக்கர சுழற்சியாகவே நினைக்கிறேன். ஆகவே புகுந்தயிடத்தில் தமிழன் எப்படிவாழ வேண்டும் – எதை உதிர்க்க, எதை காக்க என்கிற கேள்விக்கு நிரந்தரமான பதிலொன்றும் கிடையாது. இப்படி பல ஊர் தண்ணி குடித்து, தங்களது வளர்ச்சியே உலகின் வளர்ச்சி என ஐ.டி பஜனை செய்யும் இளங்கூட்டங்களில் நானும் ஒருவன் என்பதோடு, மும்பை பற்றிய செய்திகள் வந்ததாலும் கடந்த வார சங்கதிகள் எனக்கு ஆச்சரியமூட்டின. உந்தின. பதிவுகள் பயன்படாலாம். என் முரணும், குழப்பங்களும் அடுத்த தலைமுறையால் கேலியாக்கப்பட்டால், அர்த்தமற்றுப்போனால் அதுவே வளர்ச்சிக்கான அறிகுறியென ஆனந்தப்படலாம்.
சுருக்கமாய்,
வாசந்தியின் கட்டுரைகள் அபாரம். அதுவும் பெங்களூர் கட்டுரை மிக ஆழமான தளத்தில் எழுதப்பட்ட ஒன்று. மும்பை கட்டுரையில் அத்தனை ஆழமில்லைதான். அதைவிட்டு கட்டுரையின் மையத்திற்கு, உண்மைச் சரடை எடுத்து செல்ல முயல்வோம்.
பிழைக்கவந்தயிடத்தில் அரசியல் தேவையா ?
தேவையெனில் நம்மூர் அரசியல் தேவையா. இல்லை இங்கிருக்கிற ஏதாவது தேசிய அல்லது லோக்கல் கட்சிகளோடு இணைந்துகொண்டு அரசியல் மூலம் தமிழர்களுக்கும், அவரது உடமைகளுக்கும், வளர்ச்சிக்கும் உத்திரவாதம் தரமுடியுமா.. நம் மாநிலத்து அரசியலை உள்ளே கொண்டுவருவது தேவையா. நம் மண்ணில் எத்தனை மாற்று மாநில கட்சிகளை வளரவிட்டிருக்கிறோம். [மலையாளத்தான், மார்வாடி என்று ஏசிய நாக்குகள்தானே. இப்போது மட்டும் சால மதராஸி என்றால் ஏன் கோபமுறுவானேன் ]
மும்பை தாரவியில் இல்லாத திராவிட,தேசிய கட்சிகளில்லை. இங்கேயும் ஒவ்வொரு வட்ட, புறநகர அரசியல் கிளைகள் உள்ளன. அரசியல் கட்சிகளின்றி நாம் ஒன்று படமுடியாது என்று நாம் முடிவுசெய்துவிட்டோம் போல. இது எனக்கு தெரிந்து ப்ளுகாலர் உத்தியோககாரர்களிடம் இருப்பதில்லை. எனவே, பெரும்பாலும் அடிமட்டத்தொண்டர்களே, தொழிலாளத்தோழர்களே இந்த வெளிமாநில அரசியல் தூண்டிலுக்கு வீழ்கிறார்கள். இதனால் என்ன லாபம் ? தமிழனின் குறைகள் அரசாங்கத்திடம் எடுத்துச்செல்ல ஒரு platformஆக பயன்படுகிறதா ? அரசியல் கட்சிதவிர வேறுதெவுமிருக்காதா, இருக்கமுடியாதா.. புரியவில்லை. சில பலன்களை யோசிக்க முயற்சிக்கிறேன்.
லோக்கல் அரசியலில் பங்குபெறலாம். தமிழர்களின் ஓட்டுவங்கி ஏதாவது திராவிடகட்சிக்கு கிடைக்கிற பட்சத்தில் கூட்டணித் தலைவர்களிடம் பேரம்பேச உதவுகிறது. உதாரணமாய் அதிமுக, காங்கிரசுடன் கூட்டணி வைத்தால், லோக்கல் அதிமுக தலைகள் மும்பை காங்கிரசுடன் மாதுங்கா, தாரவி போன்றயிடங்களில் ஓட்டுவேட்டைக்காக சென்று வென்றுவரும். இங்கு ஏதாவது பிரச்சனையென்றால் அங்கிருந்து மாநிலத்தலைமை ஓடோடிவந்து உதவுமென உள்ளூர்தலைகள் எண்ணுகிறார்கள். இப்படி கட்சிக்காக சிந்துகிற இரத்தமும், வியர்வையும் ஏதாவது ரூபத்தில் திரும்பிவரலாம் என ஆழமாய் எண்ணுகிறார்கள் சில லோக்கல் தலைகள். அகில இந்திய கட்சி என்றும் போட்டுக்கொள்ளலாம். தேசிய கட்சியாகவும் அர்த்தப்படுத்துக்கொள்ளலாம்.
வாழும் மண்ணொடு சேர்ந்து இயங்குகிற வளர்ச்சி :
தமிழர்கள் தங்களின் வளர்ச்சியை மற்றவர் கண்ணில் உறுத்தாமல் செய்யமுடியுமா..
தங்கள் தங்கும்/பிழைக்கும் இடத்தின் கலாச்சராத்தை மொழியை மதித்து அதனோடு முடிந்தளவு ஒத்திசைய முடியுமா.
[ஹ¤ந்தி தெரியாமல் வருவதே அதன் அடிப்படைபிரச்சனையென நான் எண்ணுகிறேன்.
மற்ற மாநிலத்துகாரர்களுக்கு இந்தளவு பிரச்சனையிருப்பதில்லை. அப்படியெனில், ஹ¤ந்தி திணிப்பே இனிமேல் வாய்ப்பில்லை
என்கிற நிலையில் இனியாவது நமது திராவிட கட்சிகளே முதிர்ந்து ஹிந்தி படிப்பிற்கு வழிசெய்ய முடியுமா..]
சிவசேனையை நான் தமிழனாய் ஆதரிப்பதா ? எதிர்ப்பதா ?
சிவசேனை தமிழர்களின் மீது செய்த காழ்ப்புணர்வு இன்றும் மாறாதது. [அவர்கள் தமிழரை மட்டும் வெறுக்கவில்லை. மற்ற மாநிலத்து மக்கள் அனைவரையும் எதிர்த்தனர் என்பது நமக்கு சின்ன ஆறுதல் ]அவர்களின் தெருத்தெரு நாட்டாமை பலமும், பணம் வசூலித்தலும் எந்த திராவிட கட்சிகளையும் விட அதிகம்தான். வெறுப்புணர்வும், வன்முறையும் அடிப்படையாக கொண்ட எந்த அரசியல் கட்சிகளும் தங்களால் திரும்பிவரமுடியாத ஒரு பாதைக்கு போய்விடுகின்றன என்பதற்கு நமது திராவிட கட்சிகளும், சிவசேனையும் ஒரு நல்ல case study ஆக பயன்படக்கூடும்.
ஒருநாள் எங்கள் அலுவலகத்தில் அந்த செந்நிற மனிதன், புலிமனிதன், சிவசேனை குறியோடு நுழைகிறார். நான் மென்மையாய் சொன்னேன், எங்கள் நிறுவனம் இதுபோன்று லோக்கல் சந்தாக்களுக்கு பணம் கொடுப்பதில்லை என்று. உடனே சொன்னார். ‘சார். லோக்கல் பிரச்சனைவந்தால் பணம் செலவழிப்பார்களாயென்று. என்ன அப்பட்டமான மிரட்டல் பாருங்கள். சில நூறு ரூபாய்க்கு இஸ்லாமிய பெயர்களை வம்பிற்கு இழுத்தார். அவர்களிடமிருந்து எனக்கு சர்வ ரட்சை கொடுப்பதாய் வாக்கு கொடுத்தார். நான் ஏதோ ஆப்கானிஸ்தான மண்ணில் தாலிபான்களுக்கிடையே இருப்பதான ஒரு உலகத்தை சிருஸ்டித்தார். அதற்கு முன் கவனமாய் என் பெயர் இஸ்லாமியர் இல்லையென்று தெரிந்துகொண்டார். நான் நினைத்துகொண்டேன், காப்பாற்றப்படவேண்டியது உங்களிடமிருந்து என்று.
ஆனால் இந்தக்கதையிடன் முடித்தால் அது வெறும் சிவசேனையின் வெறும் ஒரு பக்க அழுக்குபக்கத்தை மட்டும் காட்டுவதாகிவிடும். தொடர் குண்டுவெடிப்பின் போது நடந்த் கலவரங்களில் சிவசேனையின் பங்கை வெறும் வன்முறை என்று மட்டும் சொல்லமாட்டார்கள். அவர்கள் மட்டும் இல்லையென்றால் இழப்புகள் பன்மடங்காகியிருக்கலாம் என்று பொதுமக்கள் கூட நம்பினார்கள். முன்னுரை, பின்னுரைகளை ஆராயாமல், வெறும் அந்தக்கால நிகழ்வுகளை மட்டுமே கருத்தில்கொண்டு சொல்லப்பட்ட பொதுக்கருத்து மேற்சொன்னது. பால் தாக்கரே சாகிப் பதிலடி கிடைக்கும் என்பதை மனத்தில் கொண்டே பலகாரியங்கள் இஸ்லாமிய அடிப்படை குழுக்களால் செயல்பட்டன. அவரது மிரட்டல்களில் இந்துக்களை, இந்து நம்பிக்கைகளை மதிக்கவேண்டிய வசியத்தைதான் மறுபடி மறுபடி சொல்கிறார். இங்கிருந்து கொண்டு பாகிஸ்தான் கொடி நடாதே. என்று சொல்வது மதச்சார்புள்ளது என்றால் என்ன சொல்ல.. இவை தேசிய கட்சிகளாலே கடுமையாக கண்டிக்கப்பட்டு இது போன்ற மாநிலக்குழுக்களுக்கு தேவையில்லாமல் செய்வதுதான்.
பாவம், இந்த தேசத்தில், நாட்டுப்பற்று, கள்ளக்காதலாகத்தான் செய்துகொண்டுருக்கிறது காங்கிரஸ் கட்சி. தெருவில் இறங்கி போராட்டும் நடத்துவதற்கு தேவையான தொண்டர்களை தயாரிக்கும் நிலமாக சிவசேனை அமைவதால் அதற்கும் இந்து அடிப்படை குழுக்களுக்கும் ஏதாவது உறவு ஏற்படுமானால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஒரு குறிப்பிட்ட இந்துத்துவ தேவைக்காக சிவசேனை பயன்படுத்தப்படலாமேயொழிய, தொலைநோக்கில் அதற்கோ அதனது உறவுக்கோ பெரிய அர்த்தமிருப்பதாக எனக்கு புரியவில்லை. ஒரு திராவிடகட்சியின் உண்மையிலே ஊருக்காக உழைக்கும் என் நண்பர் சொன்னார், “ஐயா, அவங்க ஆபிஸ்லே கால் வைக்கும்போதே கூசுதய்யா. ஒரு காலத்திலே நம்மள வாட்டு வாட்டுனு வதக்குனாங்கய்யா. என்ன பண்றது சொல்லுங்க.. அவங்களையும் கூப்பிட்டுத்தானே ஆகணும்.. ” இதெல்லாம் தொண்டர்களுக்குள்ள பிரச்சனைகள். திராவிட கட்சிகள் என்ன செய்கின்றன என்று சின்னபிள்ளைத்தனமாய் கேள்வி கேட்காதிர்கள், அவர்கள் மேலிடம் சொல்வது போல போடுவார்கள் ஒரு கூழைக்கும்பிடு. சிவசேனையும் வளர்ந்து அதிலும் தமிழர்களுக்கென ஒரு பிரிவுயிருப்பதாக சில செய்திகள். இவ்வாறு சிவசேனைக்கு சில நல்ல பக்கங்களும் [ நன்றி:இஸ்லாமிய தீவிரவாதம்] சில நல்லதில்லாத பக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
ஹ¥ம்.. எது என்னவோ, எங்களூரில் இன்னும் வெடித்துக்கொண்டேயிருக்கின்றன குண்டுகள். இந்த முரண்பாட்டுச் சிக்கலோடுதான் தொடர்கிறது எங்கள் மும்பை வாழ்க்கை.
நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு :
வாஸந்தி பேசாப்பொருள். பேசத்துணிந்தீர்கள். தொடருங்கள். வித்தியாசமான கோணம் கண்ணில் தெரியுதோரு தோற்றம். புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கைக்கு [ என்ன புலம், என்ன பெயர்.. விடுங்கள் சார் . சோடோயார்.. உலகத்தமிழர் என்போம்..] உலகத்தமிழர்கள் உன்னிப்பாய் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவையாய் உங்கள் கட்டுரை அமைய வாழ்த்துக்கள். [ஸீரிதேவி எப்படி இருந்தவ, இப்படி ஆயிட்டா பாத்தீங்களா, ஒரு நா லோக்கன்வாலா போயிண்டிருந்தப்ப பார்த்தேன். குழந்தையோட சாப்ட் பால் விளையாடிண்டிருந்தாங்க.. இன்னம் கொஞ்ச நாள்ல அந்த சாப்ட் பாலும் காத்துபோயி மூலையில போயிரும்.. ஹ¥ம்..]
நன்றி மலர் சார் ! கொஞ்சம் மும்பைக்கதையையும் பதிவு பண்ண வழி பண்ணியதற்கு ! கல்கத்தா பற்றிய இட்லி வடை கதையையும், தங்களின் பேரானுபவங்கள் பற்றிய குறிப்பையும் கொஞ்சம் குறைத்திருந்தால் உங்களிடமிருந்து இன்னும் நிறைய செய்திகள் பதிவாயிருக்கலாம். சிவசேனை தமிழ் புலிகளை ஆதரிப்பதால்மட்டும் அவர்களை நாம் ஆதரிக்கலாமா. இஸ்லாமிய எதிர்ப்பு மட்டும் ஒரு இணையும் புள்ளியாயிருந்தால் போதுமா.. அதனது மற்ற மாநிலத்து காழ்ப்புகள், இன்னும் நீறுபூத்த நெருப்பாக
எரிந்துகொண்டிருப்பதை கண்டும் காணாமல் விட்டுவிடலாமா.. இப்படி நீண்டு கொண்டே போகும் கேள்விகள், உலகத் தமிழர்களுக்கு உகந்தது எது ? .. ஆமா.. வாசுதேவகுடும்பகம் possible ஆ என்ன ?
பிகேசிவகுமார் சொன்னதுபோல ஜயராமன் கருத்துகளில் ஆழமில்லை. உணர்ச்சியமில்லை. கோபமான வெறும் bytes. ‘அவளோட ராவுகள் ‘ கொஞ்சம் அதிகம்தான்.. ஒகே சிவா.. cool yaar. leave it.. அப்புறம் சிவா, யூஎஸ்ஸில் குளிர ஆரம்பிச்சிருச்சா ?
mani@techopt.com
- 20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு
- இழுக்காதே எனக்குரியவனை !
- அன்புள்ள திரு சிவகுமார்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சம் எத்தனை பெரியது ? (கட்டுரை: 2)
- இறந்தவன் குறிப்புகள் – 1
- பி.கே.சிவகுமார் கண்ணோட்டம்
- திரு பி.கே.சிவக்குமார் கடிதம் பற்றி
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2
- நான்தான் சட்டுவம் பேசுகிறேன்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்
- படித்ததும் புரிந்ததும்..(9) பாகிஸ்தான் நெருக்கடியும் : இந்தியாவின் செருப்புக்கடியும்;
- பாட்டு வாத்தியார் – ஜெ. ராம்கியின் பாகவதர்
- தீபாவளி பற்றி ஒரு கடிதம்
- தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு!
- இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 1 – அம்பாளின் தொப்புள்கொடி
- சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்
- பெண்ணியத்தின் மூன்றாம இதிகாசத்தின் அமானுஷ்ய பக்கங்கள்
- நினைவுகளின் தடத்தில்
- கடிதங்கள் குறித்த கடிதங்கள் குறித்த ஒரு கடிதம்
- திரு.பிகே.சிவகுமார் கருத்தைப் படிக்கும்போது
- கடிதம்
- இருபது ரூபாய் நோட்டு
- பி.கே. சிவகுமாரின் கடிதம்…
- த.கோவேந்தனின் ‘வானம்பாடி’ இதழ் அறிமுகம்
- உதயகுமரன் கதை
- சிந்தாநதி சகாப்தம்
- இலஞ்சி சொக்கலிங்கனார் கண்ட ‘சமய கிண்டர்கார்டன்(அ) ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்’
- வேரற்றுப் போகிறவர்கள்
- பண்பாட்டிற்கு எதிரானது
- சுநாதர்
- யார் அகதிகள்?
- கிளி ஜோசியம்!
- “பயன்பாடு”
- குறிப்பேட்டுப் பதிவுகள் சில……
- அமெரிக்காவும் விழுமியங்களும்
- நாவடிமை (கண்ணிகள்)
- தாகூரின் கீதங்கள் -2 கண்ணுக்குப் பின்னே அமர்ந்துள்ளாய் !
- இல்லாமல் போனவர்கள்
- தீபாவளித் திருநாளில்
- கல்லறைக் கவிதை
- இலை போட்டாச்சு 37 – ரவா லாடு
- லா.ச.ரா
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 35