கடிதம்

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

உஷாதீபன்


குற்றாலம் பதிவுகள் பற்றி ஜெயமோகன் அவர்களின்; கருத்துரைகளைப் படிக்க நேர்ந்தது. பொதுவாக கவிதைக்கான அமர்வுகள் நிகழ்கையில் குடி அங்கே பிரதான இடம் வகித்து விடுகிறது என்பது குறைபாடாக இருந்தது. இது குறித்து சில கருத்துக்களை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. முதலில் வேண்டாம் என்றுதான் மனதுக்குத் தோன்றியது. ஆனாலும் படைப்பாளிகளின் மீதான, அவர்களின் சில படைப்புக்களின் மீதான ஈர்ப்பின் காரணமாக இதைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
கவிதை அமர்வுகளுக்கு படைப்பாளிகள் மட்டும் வருவதில்லை. படிப்பவர்களும், படைக்க ஆர்வமுள்ளவர்களும், எப்போதேனும் ஒன்றிரண்டு என்று படைப்புக்களைத் தருபவர்களும், இலக்கிய ஆர்வலர்களும் என்று பல்வேறு தரப்பினரும் வருகை தருகிறார்கள். இவர்களின் வருகை அவசியமில்லை என்பதான கருத்து உண்டா? அப்படியானால் அதை வெளிப்படையாகச் சொல்லிவிடலாம். தொந்தரவில்லை.; புத்தகக் கடைகள், அங்கே, இங்கே என்று நோட்டீஸ் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது மட்டும் இதில் முக்கியம்.
இப்படி படைப்பாளிகள் மீது மதிப்பு கொண்டு வருபவர்கள் மீது தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் படைப்பாளிகளுக்குக் கண்டிப்பாக வேண்டும். இம்மாதிரியான எண்ணம் வேண்டுமானால் படைப்பாளிகள் கண்ணியம் மிக்கவர்களாக, பண்பாளர்களாக, நல்ல ஒழுக்க சீலர்களாக இருத்தல் வேண்டும். இந்த குணநலன்களை அடையாளம் காட்டுவது எது? ஒரு படைப்பாளியை அடையாளம் காட்டுவது நிச்சயம் அவனது எழுத்துக்களாகத்தான் இருக்க முடியும.; அப்படித்தான் இருக்க வேண்டும். படைப்பு என்பதே அதற்குத்தானே? எதற்கு? இந்த சமுதாயத்திற்கு. அதன் மேன்மைக்கு. ஒரு நல்ல எழுத்தாளனால் அப்படித்தானே சிந்திக்க முடியும்? ஒரு நல்ல எழுத்தாளன் அப்படித்தானே சிந்திக்க வேண்டும்?
மேற்கண்டவையெல்லாம் இந்தக் கவிதைப்; படைப்பாளிகளுக்கு இல்லை என்று நான் சொல்லவரவில்லை. எல்லாமும் எல்லாரிடமும் இருக்கத்தான் செய்கிறது. அவைகளைக் காலமறிந்து, இடமறிந்து ;காப்பாற்றிக் கொள்வதுதான் இங்கே முக்கியமாகிறது.
இலக்கியம் இலக்கியத்திற்காகத்தான் என்றார் க.நா.சு. ;;;;;அதை முழுமையாக ஒதுக்கிவிடுவதற்கில்லைதான். அதுபோல்தான் மேற்கண்ட படைப்பாளிகளின் அற்புதமான பல கவிதைகளும். முற்போக்குச் சிந்தனையோடு படைப்புக்களைப் பிடிவாதமாக சமுதாயத்திற்கென்று முன்வைப்பது ஒரு வகை. இலக்கியம் இலக்கியத்திற்காகவே என்பது இன்னொரு வகை.
கவியரது கண்ணதாசன் ;அவர்களைப் பற்றி; நாம் அறியாததல்ல. ஆனால் அந்தக் குழந்தை மனசுக் கவிஞனை மனதை விட்டு ஒதுக்கி விடமுடியுமா? அது போல்தான் இன்றைய நவீனக் கவிதைக் கவிஞர்களும்.
ஆனாலும் ஒரு கவிதை அமர்வு என்று வருகையிலும், பொது நிகழ்வுகளிலும், அவர்கள் ;நாகரீகம் காப்பது மனது இதமாக இருக்கும். அவர்கள் படைப்பின் மீதான மதிப்பையும், அவர்கள் மீதான நெருக்கத்தையும் அதிகப்படுத்தும். ஒரு சில கவிதை அமர்வுகளில் கண்ட காட்சிகள் மனதை மிகவும் பாதித்தது. அங்கிருந்து விலகி ;ஓடச் செய்தது. வெறுமே புத்தகங்களைப் படிப்பதோடு நின்றுகொள்வோமே என்று ஒரு விலகலை ஏற்படுத்தியது. அதனால் எழுந்த எண்ணங்கள் இவை. இம்மாதிரியான எண்ணம் கொண்டவர்கள் எங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றினால் தாராளமாகத்; தொடரலாம். யாரும் தடுக்கப் போவதில்லை.
“யார் இவரு? பெரிசா நீட்டி முழக்கி எழுதிட்டிருக்காரு? அட, விடுங்கப்பா எவனோ கிறுக்கன் உளர்;றான்…”
-கடைசியாக இப்படித்தான் மனதில்தோன்றுகிறது….!!!


ushadeepan@rediffmail.com

Series Navigation

author

உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts