கடிதம்

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

ஸ்ரீனி


அன்புடன் ஆசிரியருக்கு,

முதலில் திரு.தேவமைந்தனுக்கு என் நன்றி. அன்றைய சூழலில் ஊரோடு ஒத்து,சக மனித உணர்வுகளை மதித்து வாழும் மனநிலை இருந்தது.சாதி,மத சமாச்சாரங்கள் இன்று இருப்பது போல உறுத்தலாக இருந்தது இல்லை. நினைத்ததும் இல்லை.அந்த நாளும் வந்திடாதோ என்கிற ஏக்கம் எழுகிறது,அது வாராது என நன்றாக தெரிந்த போதிலும்.

இன்று சூழ்நிலைகள் மாறி விட்டன.விரிவடைந்து வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும்,அதனால் மாறி விட்ட மக்களின் அபிலாஷைகளும்,மனோபாவமும் சில காரணங்கள் என்றால், மக்கள் நலத்தை கிடப்பில் போட்டு தன் நலத்திற்காக தரம் தாழ்ந்து, வேண்டாத வெட்டி விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்களை உணர்வு பூர்வமாக தூண்டிவிடும் அரசியல் கட்சிகளும்
மெயின் காரண கர்த்தர்கள்.

திரு.மணியின் ஒன்பது கேள்விகளும் இந்த அரசியல் லாப சித்தர்களின் வெட்கக்கேடுகளை புட்டுப் புட்டு வைக்கின்றது.
அதுசரி, பச்சைக் கலரில் ஒரு வகைக்கு ராமர் பச்சை என்று துணிக்கடையில் கூறுவார்கள். அது இனி உபயோகத்தில் இருக்குமா (அ) வேறு பெயர் சூட்டப்படுமா?

அவனை நிறுத்தச் சொல்லு,நான் நிப்பாட்றேன் என்கிற வசனம் அல்டிமேட் கொள்கையாகி கொடி கட்டிப் பறக்கிற போது,உண்மை மையத்திலிருந்து சறுக்கி,ஓரப் புள்ளியாகி விடுகின்றது!

ஸ்ரீனி


kmnsri@rediffmail.com

Series Navigation

author

ஸ்ரீனி

ஸ்ரீனி

Similar Posts