கடிதம்

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

கே.பாலமுருகன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

திண்ணை.காம் மின்னியல் வாரப் பத்திரிக்கையில் என்னுடைய “இதற்கு முன்” என்ற கவிதையை வெளியிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் நம் கையடக்கத்தில் தவழ்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது. அதுவும் பலவகையான எழுத்தாளர்களுடன் இந்த உலகத்தை உள்ளங்கையில் ஏந்திப் பறப்பது போலவே உணர்கிறேன் ஒவ்வொருமுறையும் திண்ணை.காம் முன்பு அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம்.

இந்த வாரக் கவிதை வரிசையில் வெளியாகியுள்ள கார்த்திக் பிரபுவின் “கிணறு” ஒரு வரலாற்றுக் கிணறை வெளியே தோண்டி எடுப்பது போல இருக்கிறது. எத்தனை தலைமுறைகள் கண்ட அந்தக் கிணற்றின் பின்னனியிலும் பழம் பெரும் கதைகள். நிகழ்வை அருமையாக புனைவில் கொண்டு வந்திருக்கிறார். இந்தக் கிணறைப் படிக்கும் பொழுது எங்கள் ஊரிலுள்ள மேட்டுப் பாலத்தையொட்டி ஓடும் ஆறின் ஞாபகம் தானாக மனதில் எழுந்து கொள்கிறது. கார்த்திக் பிரபு அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
திண்ணை.காம் என்ற அகப்பக்கம், உண்மையிலேயே எழுத்தாளர்களின் அகங்களை மின்னியல் பிரதிகளாக உலகம் முழுவதும் நொடிப் பொழுதில் கொண்டு சேர்த்துவிடுவதுகிறது. இந்தத் திண்ணையில் ஓய்வெடுக்க வந்திருக்கும் மேலும் ஒரு பறவை. நன்றி.
கே.பாலமுருகன்
மலேசியா


bala_barathi@hotmail.com

Series Navigation

author

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்

Similar Posts