கடிதம்

0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

ஸ்ரீனி


புலம் பெயர் தமிழர்களின் “தமிழ் வளர்ப்பு”&”இந்திய இளப்பம்”குறித்து திரு.ஜடாயு அவர்களின் கடிதம் கண்டேன்,ஒரு மாதத்திற்கு முன்பு.ஒரு விபத்தினால் கால் முறிவு; உடனடியாக எழுத முடியவில்லை.இது பற்றி சில கருத்துக்கள்:

புலம் பெயர்ந்தோர் கொடுக்கும் டாலர் வெள்ளிக்காக,நம்மூர் so called இலக்கிய கர்த்தர்கள் அங்கு மேடையில் வீசும் கொம்பு சீவல் டயலாக்குகளும் காரணிகளில் ஒன்று. இந்த கர்த்தர் சபையில் எல்லா பிரபல மணிகளும் உண்டு.”உங்க ஊரைப் போல மெட்ராஸில் ரசிகர்கள் கிடையாது சார்” என்று பிரபலங்கள் சொல்வதை கேட்கும் போது நொந்து விடும்.எது என் ஊர்?! “உங்கள மாதிரி ஆட்கள் இல்லயென்றால் எங்களுக்கு நம்ப ஊரில் என்ன சார் கிடைக்கும்;மறக்காம அடிக்கடி கூப்பிடுங்க சார்” போன்ற சல்லாப வார்த்தைகளில் நம்மை சடையப்ப வள்ளல் ரேஞ்சுக்கு தட்டேத்தி விடுவார்கள்!

இது போன்ற வசனங்களில் அக மகிழ்ந்து, பிரலபங்களுடன் மேடையில் பேச சான்ஸ் கிடைத்ததையே மிகப் பெரிய வாழ் நாள் சாதனையாக நினைத்து விடும் ஒரு சிலர்,பெரிய மனித தோரணையில் கூத்துக் கட்டுவார்கள்!உணர்வுகளின் வித்தியாசங்கள் எல்லா இடத்திலும் உண்டு.அந்நிய மண்ணும் விலக்கல்ல.திருப்பதியில் காக்கா ‘கோவிந்தா’ என்றா கரைகிறது!!

ஓ.சியில் வந்து தங்கி ஊர் சுற்றுவதற்கும்,மேடையில் வழிந்ததற்கு கிடைக்கும் பச்சையப்ப தட்சிணைக்கும் ஆலாய் பறக்கும் நம்மூர் இ.கர்த்தர் சபையும்,நிதி திரட்டல் என்ற பெயரில் கேனத்தனமாக பேச நடிகர்களும், குத்தாட்டம் போட நடிகைகளும், இவையெல்லாம் தமிழ் இலக்கியம் வளமாக வளர செய்யும் சேவை என்று கட்டியம் கூறுபவர்களும் இருக்கும் வரை இது போன்ற இளப்ப தோரண கூத்துக்களும் நடக்கத்தான் செய்யும்.

ஆனால் நாமும் லேசுப்பட்டவர்கள் இல்லை.சத்யராஜ் ஏதோ ஒரு படத்தில் கூறுவது போல, “வெள்ளைக்காரன் ஜென்டில் மேனுங்க,அவன் கட்டிய தண்டவாளம்,பாலம்,அணை,கட்டிடம் எல்லாத்தையும் போகும் போது விட்டுப்போட்டு போயிட்டான்,மேனர்ஸ் தெரிஞ்சவன்.நம்ம மந்திரிமாரும் அதிகாரிமாரும் போகும் போது அப்படி எதையாவது விட்டுப்போட்டு போவானுங்களா? ஸ்குரூ ஆணியாவது மிஞ்சுமா!”

உண்மைதானே! சர்ச்சில் அன்று கூறியதை மூதரிக்க அறுபது ஆண்டுகளாக நிரம்பவே பாடுபடுகிறோமே!!

நன்றி திரு.ஜடாயு.தங்கள் கடிதம் எனது சில ஆதங்கங்ளையும் பகிர உதவியது.

ஸ்ரீனி


kmnsri@rediffmail.com

Series Navigation

author

ஸ்ரீனி

ஸ்ரீனி

Similar Posts