கோவிந்த ராஜன்
பல பெரும் தலைவர்களின் வாழ்ந்து முடிந்த வாழ்விற்கே தான் தான் பிம்பம் காட்டும் கண்ணாடி என்ற அவதாரத்துடன் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும் முதியவர் மலர்மன்னனுக்கு வணக்கம்.
…. காராஜரை சிடு சிடுக்கும் கடுகு வெடி முகக்காரராக காரமான நிமிடங்களில் “ஏண்டா இந்த ஆளைப்பார்க்க வந்தோம் ” என்ற நிந்தனையுடன் விலகி,
… அந்த சிறு சுட்டெரிக்கும் நிமிடங்களுக்காக, அண்ணாவின் தென்றல் உபசரிப்பில் சந்தோஷமடைந்த நீங்கள்…..காமராஜ் இறந்த பின்னர் அல்ல, இருந்த போதே அவரை வாட்டியவர்.
ஆனால், பல நெருக்கடிகளுக்கும், இழப்பதற்கும் பல கோடிகள் இருந்தும், சிவாஜிகணேசன், கருப்பையா மூப்பனார், நெடுமாறன், போன்றவர்கள் காமராஜரின் காலடியில் கடைசிவரை இருந்தவர்கள்.
இந்த கள்ளர், மூப்பனார், பிள்ளை சாதியர்கள் தான் காமராஜரின் சாதிய அடையாளம் தாண்டி கூடவே வந்தவர்கள்.
நெருக்கடிநிலை நிர்பந்தத்திலும் நெருக்கமாக இருந்தவர்கள்.
மூப்பனார் மேல் உங்களுக்கு தனிப்பட்ட விரோதம் என்னவென்று தெரியாது…..ஆனால், உங்களின் காழ்ப்புணர்ச்சி தாக்குதல், ஒரு அரசியல் பத்திரிக்கையாளரின் பொறுப்பற்ற மொழியாகத்தானிருக்கிறது…..
இந்திரா காங்கிரஸ¤டன் இணைவதான விளக்கக் கூட்டத்தில் , மதுரை திலகர் திடலில் திரண்டிருந்த பெரும்பான்மையான காங்கிரஸ் அபிமானிகளில் ஒருவரான என் தந்தை காமராஜ் மறைவை நெடுமாறனின் “செய்தி” பத்திரிக்கை அலுவலகம் சென்று உறுதிபடுத்தி உண்ணாமல் பல நாள் இருந்தவர். அவர் போன்ற பலரும் காங்கிரஸ் , இந்திரா காந்தியின் தலைமையில் இணைய வேண்டும் என்று ஆதரவு திரட்டியவர்கள்.
அதன் உண்மை வெளிப்பாடே , ஜனதா கட்சி , தமிழகத்தில் ஒரு சாதி சார்ந்த கட்சியாக இருந்தது….
ஒருவேளை காமராஜ் அவர்கள் முகத்தில் தெரிந்த மரணத்து நிம்மதி, “இவர்களாவது கடைசி வரை இருந்தார்களே…” என்பதாக இருக்கலாம்.
ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அடையாளச் சின்னமாக சின்னாபின்னமாகிப் போன காமராஜர், பெரும்பண பிற சாதியில் பிறந்தாலும், பொது தமிழின அடையாளமாக இன்றும் இருக்கும் அண்ணா – காரணம் நாடறியும்.
இந்த மனநிலை தாண்டி, கடைசி மூச்சு வரை காமராஜரின் மரியாதை பேணிய மூப்பனார் பற்றி, அவர் மேல் புத்திசாலித்தனமான சேற்றை வாரியிருக்கும் உங்கள் கட்டுரை…….உங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே….
கலைஞர் மாதிரி ஒரு தொண்டன் இல்லாத தலைவனின் நிலை இது தான்….
ஆனால், நிலை புரிந்தும் , நிலைமாறாத கருப்பையா மூப்பனார் பற்றிய உங்கள் வார்த் தடிப்பு மிகுந்தவை.
மூப்பனார், முன்பே இந்திராவிடம் சென்றிருந்தால் இன்னும் உச்சத்திற்கு சென்றிருப்பார்.
அதற்கு உதாரணம், மூப்பாரின் திறமை கண்டு இந்திரா பொறுப்பு தர பின் உயர்ந்து, “ஒன்பது வருடம்” அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, பொதுச்செயலாளராக – Admn incharge – பொறுப்பு வகித்தது. பொதுவாக இந்த பொறுப்பு அகில இந்திய தலைவர் வசமே இருக்கும்.
தமிழக மக்களுக்கு இடர்வந்த போது, த.மா.கா கண்ட மூப்பனார், எப்போதும் தன் தலைவன் காமராஜரை முன்னிறுத்தியவர் – அவர் உயிரோடு இல்லாத போதும்.
அதன் விடைதான், மிகப்பிரமாண்டமாக கூடிய இந்திரா தலைமையிலான இணைப்பு விழா….
சிறுத்துபோன எஞ்சிய கூட்டம் தொடர்ந்து பின் ஜனதாவாகி பின் காங்கிரஸ் வந்திணைந்தது.
மூப்பனார் விடுங்கள், குமரி அனந்தன் ஏன் பின்னர் ஜனதா, கா.கா.தே.கா என்றலைந்து பின் இந்திரா காங்கிரஸில் சங்கமித்தார்….?
சிவாஜி, நெடுமாறன், மூப்பனார் இவர்கள் காமராஜரிடம் உண்மை அன்பு பாராட்டிய வேற்றுச் சாதியினர். இவர்களின் பற்றை பரிகாசம் செய்வது……….. என்னத்தச் சொல்ல……இவர்களின் தரத்தை நீங்கள் உரசிப்பார்க்கும் முன் தர அடையாளம் பற்றி அறிவு கொள்ளுங்கள்.
வேதனையான விஷயம், அண்ணா அவர்கள், கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றோரை ஊக்கப்படுத்தி, ஆக்கப்படுத்தியது போல் காமராஜர் சிற்றும் மெனக்கிடவில்லை எனும் வேதனைதான்…
அதனால் தான், … ” நானே போடுவேன் சட்டம் , அதற்கு நாளுமிருக்குது கண்ணே….” என்று உத்வேகமுடன் எம்.ஜி.ஆர் திரையில் பாடி உணர்வு கொள்ளச் செய்த போது,
சிவாஜியோ மட்டக்குதிரையில் கோமாளி வேடத்தில் அமர்ந்து,
..” நான்… நாட்டத்திருத்தப் போறேன்…
அந்தக் கோட்டய பிடிக்கப் போறேன்…
… நாட்டிலுள்ள பெருந்தலைவர் காட்டி வச்ச…..” – என்று பாடி நகைப்புக்குள்ளானார்.
இது தாண்டியும் அவர்கள் விசுவாசமுடன் கடைசிவரை இருந்தனர்.
அப்பன் இறந்தால், நிதர்சனம் உணர்ந்து சொத்துக்காக மகன்கள் தடித்துப் பேசினால், உடன் “.. சாவுக்குக்கு காத்திருந்த சைத்தான்கள்….” என்று ஊர்த்திண்ணை பெரிசு போல் எழுதாதீர்கள்…
நீங்கள் எழுதுவது தமிழக வரலாறு அல்ல……
உங்கள் தனிப்பட்ட மனமாச்சரியங்களே என தோணுகிறது…..
காமராஜர் படமெடுத்த பாலன் அவர்கள், அப்படத்தில் நடித்த ரிச்சட் அவர்களை அழைத்துக் கொண்டு மூப்பனார் அறையில் நுழைந்த போது, உடன் எழுந்து தன் ஆசனத்தில் அவரை அமர வைத்து நின்று வணக்கம் சொல்லி, எதிரில் ஒரு சேரில் அமர்ந்து பேசியவரே மூப்பனார்.
அதில் வேஷமில்லை…… பத்திரிக்கையில் எட்டு கால செய்தியாக்கவுமில்லை…
அப்படம் வர பல வகையிலும் உதவியவர்.
மூப்பனாரின் விஸ்வாசம் சந்தேகத்திற்கப்பாற்பட்டது.
மூப்பனாரிடம் கருத்துச் சொல்லும் வாய்ப்பு வந்த போது, ” காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சி என்கிறீர்களே….. அதப் பாத்துட்டோம்… உங்கள் ஆட்சி என்ன என்று சொல்லி வாக்குக் கேளுங்கள்….. காமராஜரின் தோற்ற உயர்விற்கு வேண்டுமானால் இது உபயோகப்படுமே தவிர………. மக்களின் காங்கிரஸ் மீதான நம்பகத்திற்கு உதவாது…” எனச் சொல்லி வந்தவன்….
என்னைபோல் பலர் இடித்தும் கடைசிவரை காமராஜர் பெயர் சொன்னவர் – தேவையின்றியும்.
மூப்பனாரின் மறைவிற்குப் பின் த.மா.கா-வினர் கருத்துக் கேட்டு GK வாசன், காங்கிரஸ¤டன் இணைந்தார். நீங்கள் என்றாவது ,” மூப்பனார் மரணத்திற்காக காத்திருந்த வாசன் …” என்று கூட எழுதலாம்….. உங்கள் பார்வை அப்படி…..
விசுவாசம் , அரசியல், இயக்க ஸ்திரத்தன்மை, போன்றவற்றை யோசிக்கனும்….
பல தலைவர்கள் பழகிய கடந்த கால பத்திரிக்கையாளர் நீங்களும், சோவும் தான்……. அவரிடம் தான் கேட்கனும் இது பற்றி…….
கோவிந்த்
- கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!
- சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’
- முஷாரப்பின் சுயபுராணம்: சொந்த கதையும் , நொந்த கதையும்
- மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)
- சான்றோராகிய நிழல் வாழ்நர் எனும் வீரர்
- விளக்கு பரிசு பெற்ற அம்பைக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- இன்னும் சில ஆளுமைகள்
- எச்சரிக்கை
- மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை
- என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
- இலை போட்டாச்சு! – 16 வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி
- எனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்
- கடித இலக்கியம் – 46
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை !
- An Invitation
- நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பாராட்டு விழா
- இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”
- ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது
- கருப்பையா மூப்பனாரும் காமராஜரும்…..மலர்மன்னனின் பூ உதிர்ந்த முள்கொத்து ……
- மடியில் நெருப்பு – 26
- தாஜ் கவிதைகள்
- சிறகொடிந்த பறவை
- நீர்வலை – (12)
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)
- கிளிஜோசியக்காரரின் தேடல்
- பெண்ணடிமையினையும் சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா? –
- நாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள்
- ஈசாநபியான இயேசுகிறிஸ்துவின் கருணைக்கு
- கவிதைகள்
- கவிதை மரம்
- பெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- திருட்டும் தீர்ப்பும்
- காதல் நாற்பது (10) உன்னைத்தான் நேசிக்கிறேன்
- பூக்கள் என் கவிதைகள்
- தைத்திருநாள் விழா கவியரங்கம்