திண்ணை

author
0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

ஹ¤சைன்திண்ணையை தொடர்ந்து வாசித்து வருகிறேன். கவிதைகள், கதைகள், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், விவாதங்கள் என பலதரப்பட்ட சிந்தனையைத் தூண்டும் ஆக்கங்கள் இடம் பெறுவது மகிழ்ச்சி.

கவிதைகள் ஓரளவு மாறுபட்டு வெளிவருகிறது. கதைகளில் போதாமை தெரிகிறது. இஸ்லாம் குறித்த கட்டுரைகளும், விவாதங்களும் ஆரோக்கியமாக உள்ளது. இதுபோன்ற திறந்த உரையாடல்கள் ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும்.

எனது வேண்டுகோள் ஒன்று. திண்ணைக்கு பங்களிப்பு செய்யும் சிறந்த கவிதையாளர் / கதையாளர் / கட்டுரையாளர் என தேர்வு செய்து ஒரு பாராட்டு விருதும், பரிசும் சாத்தியப்படும் அளவுக்கு வழங்கலாம். இதனை ஒவ்வொரு ஆண்டில் ஜனவரியிலும் செய்யலாம். இது இன்னும் திண்ணை படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும்.

திண்ணையின் தமிழ் சிந்தனைப் பணிக்கு என் வாழ்த்துக்கள்.

ஹ¤சைன்


imagenagercoil@yahoo.com

(அப்படி எந்த எண்ணமும் இல்லை – திண்ணை குழு)

Series Navigation

Similar Posts