வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள் என்ற தலைப்பில் ப்ரவாஹன் எழுதியதற்கு

0 minutes, 12 seconds Read
This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue



வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள் என்ற தலைப்பில் ப்ரவாஹன் எழுதியதற்கு

என்னால் முடிந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளேன்
. தெளிவாக கொடுக்க வில்லை என்றாலும் குறிப்புகளால் கொடுத்துள்ளேன் சந்தேகம் வந்தால் எனது மின்னஞ்சல் கொடுக்கவும்
மூவேந்தர்கள் முக்குலத்தோரே சோழன் கள்ளர், பாண்டியன் மறவர்
, சேரன் அகம்படியர்.இங்கே சோழன் கள்ளர் என்பதற்கான ஆதாரங்கள் தொண்டைமான் என்பவர் கள்ளர்
, பல்லவராயன் என்பவர் கள்ளர் , திருமங்கையாழ்வார் என்வரும் கள்ளர்
,
1.விசயாலய சோழன் (850 – 880 , 836 – 870 )

இவனது தந்தை யார்என்று தெரியவில்லை முத்தரையரை வென்று தஞ்சையில் சோழர் ஆட்சியை அமைத்தவன் இவனே

2.ஆதித்த சோழன் த/பெ. விசயாலய சோழன் 871-907

3.1ம் பராந்தக சோழன் த/பெ. ஆதித்த சோழன்907-955

மதுரையும், ஈளமும் கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டம் பெற்றவன் சோழ பேரரசக்கு அஸ்திவாரம் அமைத்தவன் . தில்லைச் சிற்றம்பலத்துக்கு பொன் கூறை வேய்ந்தவன், சோழ சிகாமணி, சூரசிகாமணி , வீர நாராயணன் என்னும் சிறப்புப் பெயரைம் பெற்றவன். இவன் பெயரில் தான் வீராணம் ஏறியுள்ளது. இவனுக்கு 11 மனைவியர் 5 மகன்கள் 1. இராஜாதித்தன், 2. கண்டராதித்தன்,3.அரிகுலகேசரி, 4. உத்தமசீலி,5. அரிந்திகை (எ) அரிஞ்சயன்.

4.கண்டராதித்த சோழன் த/பெ. 1ம் பராந்தக சோழன் இரண்டாவது மகன் 950-957

மழவரையர் குலப்புதல்வி செம்பியன் மாதேவி சிவஞா செல்வரான கண்டராதித்தரின் மனைவி இவள் மகன் தான் மதுராந்தக தேவன் ( சிறிய பளுவேட்டரையரின் மருகன்)

5.அரிஞ்சயன் த/பெ. 1ம் பராந்தகனின் 3வத மகன் 956-957

இவர் மனைவி வைதும்பராயர் குலப் புதல்வி ராணி கல்யாணி சுந்தரச் சோழரின் தாய் இன்னொரு மனைவி சேரமான் மகள் பராந்தகன் தேவி

6.2ம் பராந்தகன் (சுந்தரச் சோழன்)த/பெ. அரிஞ்சயன் 957-970

பத்தாண்டுகள் அரசாண்ட அவனுக்கு பாரிச நோய் தாக்கியது மூத்தமகன் ஆதித்த கரிகாலன் வடக்கே காஞ்சியில் அரச பிரதிநிதியாக மாதண்ட நாயகன்(பிரதம சேனாதிபதி) கடைசிபுதல்வன் அருள்மொழிவர்மன் (பிற்காலத்தில் ராஜராஜன்) இலங்கைத்தீவில் போர்புரிந்து கொண்டிருந்தான் இருவருக்கும் நடுவில் குந்தவை தேவி பிறந்தவர்

7.உத்தமசோழன் (மதுராந்தகன்)த/பெ. கண்டராதித்த சோழன் 973-985

கண்டராதித்த சோழனின் மனைவியும் உத்தமசோழனின் தாயும் ஆன செம்பியன் மாதேவி இவரிடம் தான் ராஜராஜன் வளர்ந்தார்

8.1ம் ராஜராஜன் த/பெ. 2ம் பராந்தகன் 985-1014(தஞ்சைக் கோயிலை கட்டியவன்)

தமக்கை குந்தவை நாச்சி ராசராசனின் பட்டத்தரசி உலகமாதேவியும் இல்லத்தரசி வானதி தேவியும் . இளங்குழவிகளாகிய ராசேந்திரன், குந்தவை

9.1ம் ராஜேந்திரன் த/பெ. 1ம் ராஜராஜ ன் 1012-1044

10.1ம் ராஜாதிராஜன் த/பெ. 1ம் ராஜேந்திரன் மூத்தமகன் 1018-1054

11.ராஜேந்திர சோழதேவன் த/பெ. 1ம் ராஜேந்திரனின் 2வது மகன் 1051-1063

12.வீரராஜேந்திர சோழன் (மேல்கொண்டான்) த/பெ. ராஜேந்திர சோழதேவன் 1063-1070

13.ஆதிராஜேந்திர சோழன் த/பெ. வீரராஜேந்திர சோழன் 1067-1070

14.1ம் குலோத்துங்க சோழன் Җ ராஜேந்திர சோழன் மகளின் மகன் 1070-1120 (மேல் கொண்டான்)

சந்திர குலத்துதித்த சாளுக்கிய அரசனாகிய இராசாராசனுக்கு மனைவியும் சூரிய குலத்து அரசனாகிய முதல் இராசேந்திர சோழன் என்னும் கங்கைகொண்ட சோழனுடைய மகளும் ஆன திருமகள் போன்ற அம்மங்கா தேவியின் மகனாவான் இவன் இவனை இவனது பாட்டி பார்த்தாள் அரசர்களுக்கு எல்லாம் அரசனாகு விளங்கும் தகுதியை அறிந்தாள் ;’என் மகள் பயிற்றுப் பிள்ளையாகிய இவன். எமக்குச் சுவீகார புத்திரனாகிச் சூரிய குலத்தை வளர்த்து விளக்க வல்லவன் ஆவான்’ என்று கூறி அவனைச் சுவீகாரம் கொண்டாள்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. , கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி.

(இவனது காலத்தில் தான் துவாகுடி பெரியகுளத்தில் உள்ள நாட்டுக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது சிவன்கோவிலும் இவனது காலத்தில் தான் கட்டப்பட்டது இவன் மேல்கொண்டான் இவனது படைதளபதி கருணாகரத்தொண்டைமான்)

15.விக்ரமசோழன் த/பெ. 1ம் குலோத்துங்க சோழன் 1118-1135

16.2ம் குலோத்துங்க சோழன் த/பெ. விக்ரமசோழன்1133-1150

சேக்கிழார்: இவர் சங்கநூற் பயிற்சியுடையவர். 63 நாயன்மார்களது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ‘பெரியபுராணம்’ (திருத்தொண்டர் புராணம்)என்னும் நூலை இயற்றியவர். இவ்வாறு தலைப்பட்டிருந்ததனால் இப்புராணம் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ஒரு காப்பியம் எனச் சிலர் கூறுவர். இவர் இரண்டாம் குலோத்துங்கனுக்கு அமைச்சராய் விளங்கியவர். அப்போது இவருடைய இயற்பெயர் ‘அருண் மொழித்தேவர்’

17.2ம் ராஜராஜ சோழன் த/பெ. 2ம் குலோத்துங்க சோழன் 1146-1163

18.2ம் ராஜேந்திர சோழன் Җ 2ம் ராஜராஜனின் மைத்துனன் 1163-1178

19.3ம் குலோத்துங்கள் த/பெ. 2ம் ராஜராஜ சோழன் 1178-1218 (மேல்கொண்டான்)

20.3ம் ராஜராஜசோழன் த/பெ. 3ம் குலோத்துங்கள் 1216-1256

21.4ம் ராஜேந்திரசோழன்
த/பெ.3 ம் ராஜராஜசோழன் 1246-1279 மூன்று மன்னர்கள் கள்ளர் அதுவும் மேல்கொண்டார் என காட்டப்பட்டது மற்றவர்கள் அவர்களது முன்னோர் வாரிசுகளாவர் இதில் முதலாம் குலோத்துங்கள் மட்டும் ராஜேந்திர சோழனின் மகள் வயிற்றுப் பிள்ளை
. அவனை அவனது பாட்டி தத்து எடுத்துக் கொண்டதால் அவனும் மேற்கொண்டான் மழவரையர்

கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்று.

இப்பொழுது பெரிய மனிதர்களாகவோ, பெரிய மனிதர்களின் வழியினராகவோ கள்ளர்கள் பெருந்தொகையினராய் இருந்து வரும் காவிரி நாடே சோழர்கள் வழி வழியிருந்து ஆட்சி புரிந்த நாடு என்பதை முதலில் நினைவிற் கொள்ளவேண்டும். சோழர்கள் சோணாடேயன்றி வேறு நாடுகளையும் ஓரொருகாலத்தில் வென்று ஆண்டிருக்கின்றனர். சோழரிற் சிலர்க்கு ‘கோனேரிமேல் கொண்டான்’ என்னும் பட்டம் வழங்கியிருக்கிறது, இப்பெயர் தரித்திருந்தோரும் , கொங்கு நாட்டையும் ஆட்சி புரிந்தோருமான மூன்றாம் குரோத்துங்க சோழனும், வீர சோழனும் முறையே வெங்கால நாட்டுக் கம்மாளர்க்கச் செய்திருக்கும் தீர்ப்பு ஒன்றும், கருவூர்க் கோயிற் பணியாளர்க்கு இறையிலி நிலம் விட்டிருப்பதைக் குறிப்பது ஒன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் கருவூர் பசுபதீச்சுரர் கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. அவை பின் வருவன:

“திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீகோனேரிமேல் கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளர்க்கு 15-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி, பேரிகை உள்ளிட்டவும் கொட்டுவித்துக் கொள்ளவும், தாங்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குப் பாதரஷை சேர்த்துக் கொள்ளவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக்கொள்ளவும் சொன்னோம். இப்படிக்கு இவிவோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்லத் தக்கதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து.”

ஆனால் மறைமலையடிகளோ மூன்றாம் குலோத்துங்கனை வேளாளர் என்றே சொல்கிறார்

அது தவறு அவர் கள்ளரே

இந்த வேளாளர் எப்படி வந்தார்கள் :-

“பாண்டி நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடையிலுள்ள பகுதி பன்றி நாடு எனப்பட்டது. இந்நாட்டில் முதலில் இருந்தவர் வேடுவர். பின் குறும்பர் வந்தனர். அவர்க்குப்பின் வெள்ளாளர் வந்தனர். பன்றி நாட்டின் ஒரு பகுதி பாண்டியர் ஆட்சியின் கீழும், மற்றெரு பகுதி சோழர் ஆட்சியின் கீழும் இருந்தன. காராள வெள்ளாளர் கி.பி. முதல் நூற்றாண்டின் முன்பே சோழ தேயத்திற்கு குடியேறி விட்டனர். அவர்கள் தங்கள் உழவு தொழிலால் ஏற்பாரது வறுமையைப் போக்கி, அரசற்குப் பொருள் பெருக்கினார்கள். மூவேந்தருக்குட்பட்டுச் செல்வர்களாய் இருந்திருக்கின்றனர். சேர சோழ பாண்டியர்கள் வெள்ளாள குலத்தவரென்று கானகசபைப்பிள்ளை யவர்கள் கூறுவது தவறு. ஆதொண்டைச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து வெள்ளாளர்களைச் சோணாட்டல் குடியேற்றினர் என்றும், பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கீழ்க் காஞ்சியிலிருந்து நாற்பத்தொண்ணாயிரம் வேளாண்குடிகளைப் பாண்டி நாட்டிற் குடியேற்றினர் என்றும் தெக்கத்தூர், சுப்பிரமணியவேளார் என்பாரிடம் உள்ள ஒரு ஒலைச்சுவடியில் குறித்திருக்தகிறது. குறும்பரைத் துரத்தியடித்து வெள்ளாளர் தங்களை நிலத்தலைவராகச் செய்துகொண்டிருக்க வெண்டும். வெள்ளாளரைப் பற்றிய சாசனங்களெல்லாம் அவர்களை ‘நிலத்தரசு’ என்றே குறிப்பிடுகின்றன. சோழ பாண்டியரைப்போல் முடியரசாக இல்லாமை பற்றியே நிலத்தரசு என்று குறிப்பிட்டடிருக்கவேண்டும். நெடுங்காலம் வெள்ளாளர் நலத்திலும் பலத்திலும் மிக்கு வாழ்ந்தனர். அதன் பின், கோனாடானது சம்மதிராயர் கடம்பராயர், மாளுவராயர், கொங்குராயர், கலிங்கராயர், அச்சுதராயர், குமதராயர் என்ற தலைவர்களிடம் கீழ்ப்பட்டிருந்தது.

நான் தெளிவாக எழுத வில்லை யென்றாலும் தங்களது சந்தேகங்களை எனத தளத்தில் பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் கள்ளர் சரித்திரத்தில் பாருங்கள்.

http://ennar.blogspot.com/2006/03/1.html


தங்களது
என்னார்
www.ennar.blogspot.com

Series Navigation

author

செய்தி

செய்தி

Similar Posts