நேச குமார்
திண்ணை ஆசிரியருக்கு,
கடந்த இருவாரங்களில் சிலர் திண்ணையில் அதிகமாக மதம்/இஸ்லாம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வருவது குறித்து குறைபட்டுக் கொண்டுள்ளார்கள். இவற்றில் குறிப்பாக ஜடாயுவின் கடிதத்துக்கு பதிலாக சில விஷயங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
மதம் பற்றிய விவாதங்களுக்கு இடமளிப்பதன் அவசியம்:
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தீர்மாணிப்பது(தடுப்பது) மதப்பிரச்சினைகளே ஆகும். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் இன்றைய ஏழ்மைக்கு ஒரு குறிப்பிட்ட மதம் தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகளாக தொடுத்துவரும் ‘புனிதப் போரே’ காரணம் என்பது எனது எண்ணம். அந்தக்காலத்தில் நிகழ்ந்த கொள்ளைகளையும், கொலைகளையும் விட்டுத்தள்ளுங்கள். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மதத்தின் பெயரால் நாடு கூறு போடப்பட்டது. அதன் விளைவாக இன்று நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக செலவிடவேண்டிய பெரும் தொகை இராணுவத்திற்காகவும், ஏற்கெனவே நடந்த மூன்று போர்கள், இன்றும் தொடர்ந்து நாடெங்கும் நடந்துகொண்டிருக்கும் மென்மையான போர்கள் ஆகியவற்றிற்காக செலவிடப்பட்டு வருகின்றது. எனவே, இந்த நிதர்சனத்தை மூடி மறைப்பதால் எவ்விதப் பயனுமில்லை. விவாதங்களே இல்லாத நிலைதான் மிகப் பயங்கரமானது. யார் மனதில் என்ன ஒளிந்திருக்கிறது என்று தெரியாது. திடீரென்று பூதமாய் கிளம்பும்போது எதிர்கொள்ளக்கூடத் திராணியில்லாமல் வீழ்ந்துவிடுவோம்.
இஸ்லாம் பற்றிய விவாதங்களுக்கு இடமளிப்பதன் அவசியம்:
மற்ற மதங்கள் விஷயத்தில் பொது ஊடகங்களில் அவர்களுக்குள் இருக்கும் வித்தியாசங்கள், பிரச்சினைகள் அலசப்படும் நிலையில், இஸ்லாத்தில் இது சாத்தியமல்ல. அவர்களுக்கென இருக்கும் ஊடகங்களில் கூட இத்தகைய விவாதங்களுக்கு இடம் கிடையாது. சமரசமோ, ஏகத்துவமோ அவர்களின் நிலைப்பாட்டுக்கு ஒத்து வரும் படைப்புகளுக்கு மட்டுமே இடமளிக்கின்றார்கள். திண்ணையில் எழுதும் ஹெச்.ஜி.ரசூலோ, சூஃபி முகமதோ இதே விஷயங்களை எந்த இஸ்லாமிய ஊடகங்களிலும் எழுத முடியாது. அவை அவதூறாகக் கருதப்படும். மற்ற வெகு ஜன ஊடகங்களிலும் இது சாத்தியமல்ல – அவர்களுக்கு வெகுஜனங்களைக் கவரும் செய்திகளுக்கு இடம் ஒதுக்கவே இடம் போதுமானாதாக இல்லை.
இலக்கிய இதழ்கள் என்ற பெயரில் செயல்படும் சிற்றிதழ்கள் வீராப்பாக பேசுபவையே தவிர, வெகுஜன ஊடகங்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச தைரியம் கூட அவற்றுக்குக் கிடையாது – இஸ்லாமிஸ்டுகளின் சிறிய முகச்சுளிப்புக்குக் கூட அஞ்சுபவையாகவே அவை உள்ளன. அவற்றிற்குப் பின்னால் பொருளாதாரக் காரணங்களும், அச்சிற்றிதழ்கள் எல்லாம் ஒரு தனிமனிதரின் முயற்சியிலேயே நடத்தப்படுபவை – அம்மனிதருக்கு எவ்வித சங்கடங்களும் நேர்ந்துவிடக்கூடாது என்பது போன்ற காரணங்களும் அடங்கும். மேலும் இவையாவும் ‘செக்யூலர் மற்றும் முற்போக்கு’ முத்திரகளை தம்முடைய ‘உயிரினும் மேலாக’ மதிப்பவை. இஸ்லாம் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்களுக்கு இடமளித்தால் இந்த முத்திரை நமது ‘முற்போக்குவாதிகளின்’ பார்வையில் நீர்த்துப் போகும் என்பதாலும் இவை இத்தகைய விவாதங்களை அனுமதிப்பதை விரும்புவதில்லை.
வன்முறை, மூர்க்கமான நம்பிக்கை உலகெங்கும் பரவிவரும் , இன்று நமது நாடெங்கும் பெரும் வன்முறை, தமிழகத்தில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள், வெட்டு குத்துகள் . ஒரு சமூகம் என்ன நினைக்கிறது என்று அறிந்துகொள்ளவும், அதனுள்ளே இருக்கும் பலவித அணுகுமுறைகள்,மாறுபட்ட கருத்துக்கள், கருத்தாக்க இயங்கு காரணிகள்(dynamics), மத அரசியல்(polemics) போன்றவற்றை மற்றவர்கள் கவனிக்கவும், பொது சமூகம் அச்சமூகத்தின் மனோபாவத்தை அறிந்து கொள்ளவும் இத்தகைய இஸ்லாம் பற்றிய விவாதங்களை அனுமதிப்பது மிகவும் அவசியமானதொன்று.
தொடர்ந்து திண்ணையை படித்து வருபவர்களுக்கும், ஏன் திண்ணை ஆசிரியர் குழுவுக்கும் கூட இந்த விவாதங்கள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தலாம் – ஆனால், மேற்கூறிய காரணங்களால் திண்ணை இவ்விவாதங்களை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் , அவற்றுக்கு இடமளிக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.
– நேச குமார் –
http://nesakumar.blogpsot.com
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)
- “தமிழர் மருத்துவமே வர்மக்கலை!” – சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்
- பூநீறு: சித்த மருத்துவத்தின் பெருமிதம்
- செர்நோபில் அணுமின் உலை விபத்தின் காரணங்கள் -5
- இளவேனில் கடற்கரை – புகைப்படத் தொகுப்பு
- கீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.
- இளவேனில் நிழல்கள் – புகைப்படத் தொகுப்பு
- கடித இலக்கியம் – 6
- நரசய்யாவின் ” கடல்வழி வணிகம் ” : மகிழ்வூட்டும் ஒரு சிறப்பான வரவு
- ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்
- மரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..?
- வளர்ந்த குதிரை (4)
- அக்ஷ்ய திருதியை
- ஓட்டைப் பானைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர்
- கடிதம்
- கடிதம்
- அறிவு ஜீவிகள்………?!
- கடிதம்
- கடிதம்
- லெமூரியா கொண்ட கலைஞர்
- அரவாணிகளின் முதல் வாழ்க்கை ஆவணம்
- புன்னகையின் பயணம்…
- மறுபடியும் ஒரு மகாபாரதம் அத்தியாயம் – 22
- குறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா! – 4
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 7)
- வானமே கூரை.
- தனிமரம் நாளை தோப்பாகும் – 4
- மார்க்ஸின் ஆவியுடனான உரையாடல்
- புலம் பெயர் வாழ்வு – 12 – ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 5 : வியப்பில் வாழ்தல்
- நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி
- இட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்
- ஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்
- கயிறெடுத்தான் உயிரெடுக்க
- நெருப்பு நெருப்பு
- பெரியபுராணம் – 89 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- யாருமற்ற கடற்கரை
- கடிதம்