கடிதம்

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

விஸ்வாமித்ராம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ரா ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற புத்தகம் குறித்து இங்கு பல கட்டுரைகள் எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டுச் சென்று அந்த நூலினைப் பற்றிய தனது எண்ணங்களை எழுதியுள்ளார் கற்பகவிநாயகம். திண்ணையில் விளம்பரம் வந்திருந்தது என்று ஏதோ திண்ணையே விளம்பரப் படுத்தியது போல அரைகுறையாய் புரிந்து கொண்டு எழுதியுள்ளார். திண்ணைக்கு நான் அனுப்பிய புத்தக அறிமுகத்தை திண்ணை வெளியிட்டிருந்தது. மற்றபடி திண்ணை அந்த புத்தகத்திற்கு எவ்வித விளம்பரமும் செய்யவில்லை .

முதலில், திண்ணையில் வந்த அறிமுகத்தைப் படித்து விட்டு புத்தகத்தினை வாங்கிப் படித்தமைக்கு நன்றி, புத்தகத்தைப் பற்றி ஒரு எதிர்மறையான விமர்சனத்தினை எழுதியமைக்கு அதை விட நன்றி. கற்பகவிநாயம் போன்ற நபர்கள் ஒரு புத்தகத்தை வெறுக்கிறார் என்றால், இழிவாக எழுதுகிறார் என்றால் அப்படிப்பட்டப் புத்தகத்தின் தரம் குறித்தும், அது சொல்லும் உண்மைகள் குறித்தும், மேன்மை குறித்தும் சிந்திக்கும் திறன் உள்ள அனைவரும் இந்நேரம் புரிந்து கொண்டிருப்பார்கள், கற்பகவிநாயகம் என்பவரின் தாரதரம் என்ன? யோக்கியதாம்சம் என்ன? ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதும், அபாண்டமாக பழிகளை அள்ளி வீசுவதும், மாட்டிக் கொண்டால் மன்னிப்பு நாடகம் ஆடுவதும்தானே? அப்படிப் பட்டவர் ஈ வெ ரா சம்பந்தப் பட்ட ஒரு நேர்மையான விமர்சினத்தினை அணுகியிருக்கும் லட்சணம்தான் அந்த விமர்சனம். இந்துக்கள் மீதும், தேசீயவாதிகள் மீதும், இவர் கக்கும் விஷம் எப்படிப்பட்டது என்பதையெல்லாம் அறிந்தவர்கள் இவர் எழுதும் விமர்சனம் என்ன நோக்கில் இருக்கும் என்பதை தாரளாமாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். மா வெ அவர்களின் புத்தகத்திற்கு இதை விட ஒரு விளம்பரம் யாராலும் அளிக்க இயலாது. மலர் மன்னனை முதலில் புளுகர் என்று ஏசி விட்டு தக்க ஆதரம் அளித்தவுடன் மன்னிப்புக் கேட்டவர் இந்த கற்பக விநாயகம். பாரதிக்கு மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான பிராமணக் குடும்பங்களுக்கு சுடலை மாடனும், சாஸ்தாவும் குலதெய்வங்களாக இருக்கிறார்கள் என்று ஒருவர் ஊர் பெயர், குலம் கோத்திரம் எல்லாம் எடுத்து ஆதாரபூர்வமாகக் கூறிய பின்னரும் இவரது அபாண்டங்களும், புளுகு மூட்டைகளும் இன்னும் திண்ணையில் தீர்ந்த பாடில்லை. அமெரிக்காவில் சென்ஸஸ் போர்டில் போய் ஜாதி வாரியாகக் கணக்கெடுத்தவர் போல பிராமணர்கள் மட்டுமே குடியுரிமை வாங்குகிறார்கள் என்று கூசாமல் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுபவர் சொல்லுகிறார் ம வெ யின் நூல் நகைப்புக்கிடமாக இருக்கிறதாம். இவரின் எழுத்துக்களைப் பற்றியும் அதிகமாகச் சொல்லுவதற்கு ஏதும் இல்லை. நான் இதற்கு முன் இங்கு உள்ளிட்டக் கட்டுரைகளைப் படித்தாலே ஈ வெ ரா பற்றி ஒரு தெளீவான அறிமுகம் கிட்டும். க வி எடுத்து விட்ட ஒரு சில வரிகளாக இல்லாமல் முழு பக்கங்களையே நான் இங்கு தட்டச்சி உள்ளிட்டிருக்கிறேன், புத்தகத்தைப் படிக்க இயலாத வாசகர்கள், புத்தகத்தின் பல பக்கங்கள் முழுமையாக திண்ணையில் வந்துள்ளதை இவருக்குப் பதிலாக எடுத்துக் கொண்டு படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

நான் ஏற்கனவே அந்தப் புத்தகம் பற்றிக் கூற வந்ததையெல்லாம் திண்ணையில் பல கட்டுரைகளில் கூறி விட்டேன். ம வெ மட்டும் அல்ல இன்னும் ம பொ சியும், ஜீவாவும், ஈ வெ ராவின் இன வெறி அரசியலை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்கள் என்பதையும், ஈ வெ ராவின் முரண்பாடுகள் பலவற்றையும், பித்தலாட்டங்கள் பலவற்றையும் புத்தகத்தின் பல பக்கங்களில் இருந்து நான் இங்கு ஏற்கனவே எடுத்து இட்டுள்ளேன். ஈ வெ ரா ஒரு முரண்பாட்டாளாரா, முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் ஒரு சந்தர்ப்பவாதியா இல்லையா, தமிழ் மொழிக்கு விரோதியா இல்லையா, எதையுமே ஆழ்ந்து படித்தறியாத ஒரு போலி அறிவுஜீவியா இல்லையா என்பதையெல்லாம் நான் இங்கு ஏற்கனவே இட்டுள்ள பகுதிகளைப் படித்தாலே சுய அறிவுள்ள எவருக்கும் விளங்கும். தலித் பெண்கள் ஜாக்கெட் அணிவதால்தான் துணி விலை ஏறி விட்டதாகக் இழிவாக பேசிய ஈ வெ ராவின் அடிவருடிகளிடமிருந்து வெறுப்பையும், குரோதத்தையும், விஷத்தையும், வெறியையும் தவிர வேறு என்னவிதமான எதிர்வினையை எதிர் பார்க்க இயலும் ? க வி போன்றோரின் சாணி அடித்தல் அந்தப் புத்தகத்திற்கு மற்றுமொரு அருமையான மதிப்புரையாக அமைந்து விட்டது. ஆம், பிதற்றல்களையும் , பித்தலாட்டங்களையும், அபத்தங்களையும் சீர்த்திருத்தம் என்று எண்ணிக் கொண்டு திரிபவர்களுக்கு மா வெங்கடேசன் எழுதிய புத்தகத்தினைப் படித்தால் அட இப்படி ஒரு மனிதரையா பெரியார் என்று அழைக்கிறார்கள்,
சீர்திருத்தவாதி என்று அழைக்கிறார்கள் என்று ஈ வெ ராத் தொண்டர்களின் அறியாமையை, பேதலித்த நிலையைக் கண்டு யாருக்குமே சிரிக்கத்தான் தோன்றும். கற்பக விநாயகம் தானாக சிரித்துக் கொண்டதில் ஏதும் வியப்பில்லைதான்.
****

அடுத்து பரிமளம் என்பவர் எனக்கு அன்பாக ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். திண்ணையின் கடுமையான வசவுகள் என்று நான் எழுதியதற்காக ஆதாரம் கேட்டு. ஐயா பரிமளம் அவர்களே, உங்கள் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு படியுங்கள். நான் என்னை எதிர்த்து ஆபாச வசவுகள் திண்ணையில் வந்தது என்று எங்கு கூறியுள்ளேன் என்று தயவு செய்து கூற முடியுமா? “கடுமையான வசவுகளுடன் எதிர்கொண்ட நண்பர்களுக்கும்” எழுதியுள்ளேன், திண்ணையில் என்று குறிப்பாக எங்கேனும் சொல்லியுள்ளேனா என்ன? எனக்கு வந்தது, நான் எதிர்கொண்டேன் என்றால் என் தனி மடலுக்கு வந்தது என்று அர்த்தம். திண்ணைக்கும் வந்திருக்கலாம் அவர்கள் அவற்றை வெளியிடாமல் தவிர்த்திருக்கலாம். அது பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு மிரட்டல்கள் வந்தன என்றேன். எனக்கு ஆபாசமான, படிக்கக் கூசும், கடுமையான வசவுகள் வந்தன என்றேன். உடனே துள்ளிக் குதித்து “ஆதாரம் எங்கே” என்று கேட்கிறீர்கள்? நான் நீங்கள் எழுதிய வசவுகள் என்று உங்களைக் குறிப்பிட்டுக் கூறினேனா? உங்களுக்கு ஏன் உறுத்துகிறது? ஏன் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று முந்திரிக் கொட்டையாக வந்து கேள்வி எழுப்புகிறீர்கள்? கொஞ்சம் சாதாரணத் தமிழில் எழுதுவதைப் புரிந்து கொள்ளவும் முயலுங்கள் ஐயா. உங்களுக்கு அடிப்படைத் தமிழைப் புரிந்து கொள்வதில் கூடப் பிரச்சினை இருக்கிறது என்பதை நான் ஏற்கனவே அறிவேன், திண்ணை வாசகர்களுக்கும் உங்களுக்குள்ள பிரச்சினைகளைப் பற்றி விலாவாரியாக ஏற்கனவே விளக்கியுள்ளேன். தயவு செய்து தமிழ் எழுதப் படிக்க ஒழுங்காகக் கற்றுக் கொண்ட பின் திண்ணையில் எழுத வாருங்கள். அவசரம் ஒன்றும் இல்லை.

ஐயா, ஈ வெ ரா குறித்து நான் எழுதியதால் எனக்கு தனி அஞ்சலில் படிக்கக் கூசும், மிரட்டல் கடிதங்கள் வந்தது என்றுதான் நான் குறிப்பிட்டேன் என்பதை அன்பாகவே தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி என் பெட்டியில் இடப்பட்ட மலக்குப்பைகளை, கழிவுகளை, வீட்டு வாசலில் இழி பிறப்புக்கள் வந்து கழிந்து விட்டுச் செல்லும் மலத்தினை என்ன செய்வோமோ அதைச் செய்தேன் என்பதை உங்களுக்கு நான் கூறத் தேவையில்லை என்று நினைக்கிறேன். விளக்கம் போதுமா? இன்னும் ஏதேனும் ஆதாரம் வேண்டுமா? ஒரு வேளை அதற்கும் ஆதாரம் கேட்பீர்களோ? திண்ணைக்கு நான் வசவுகள் எழுதினேன் என்றும் அதைத்தான் அழித்தார்கள் என்று நீங்களாக அனுமானித்துக் கொண்டால், காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் இருக்கும் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. திண்ணை ஒரு வாக்கியத்தை நீக்க பல காரணங்கள் இருக்கக் கூடும் என்பதை அவர்களே உங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். புரிந்ததோ என்னவோ? அடுத்த முறை “அன்பான வேண்டுகோள்” விடு முன் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை ஒரு முறைக்குப் பத்து முறை படித்து விட்டு, அர்த்தம் புரியவில்லையென்றால் யாரிடமாவது கேட்டுத் தெளிவு பெற்று விட்டு என்னிடம் வரவும் என்பதை மட்டும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஸ்வாமித்ரா

viswamitra12347@rediffmail.com

Series Navigation

author

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா

Similar Posts