கடிதம்

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

மு. சுந்தரமூர்த்தி


1. நினைவிலிருந்ததை வைத்து நான் எழுதியதை சரிபார்த்துக் கொள்ள மீண்டும் மலர் மன்னனின் கடிதங்களைப் படித்தேன்.
“திண்ணை’யில் வெளிவந்த என் எழுத்துகளைப் படித்துவிட்டு நான் தொடர்ந்து எழுத வேண்டும் எனக் கேட்டு தினமும் மெயில்கள் வந்துகொண்டிருப்பதாலும், கோ. ராஜாராம் கூட அவ்வாறே விரும்புவதாகத் தெரிவித்திருப்பதாலும் தொடர்ந்து எழுதும் சபலந்தட்டியுள்ளது என ஒப்புக் கொள்கிறேன்.”
— “நமது பத்திரிகை உலகமும் அதில் எனது சொற்ப ஆயுளும்”, மலர் மன்னன், திண்ணை, Dec 15 Thursday 2005

“அதே போலத் திண்ணையின் கோ. ராஜாராம், வெங்கட் சாமினாதன் மற்றும் பலர் மூலமாக இப்போது வரும் வற்புறுத்தல்கள் இன்னும் சில நாட்கள் இவ்வுடலைச் சுமந்திருக்க வைப்பதற்கான சமிக்ஞையா?”
“சுயசரிதை மாதிரி எழுதவேண்டும் என்பது ராஜாராம் விருப்பம்.”
— “சிதறும் நினைவுகள்”, மலர் மன்னன், திண்ணை, Dec 22 Thursday 2005

இவற்றை வைத்து “மலர் மன்னனை திண்ணையில் எழுதவேண்டும் என்று அழைத்து வந்தவர் திண்ணையின் முதன்மை ஆசிரியர் கோ. ராஜாராம்” என்று நான் குறிப்பிட்டதில் “அழைத்து வந்தவர்” என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்று. அதை திருத்திக்கொள்கிறேன்.

மற்றபடி “ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தைப் பற்றி மலர் மன்னன் எழுதியதற்கு எழுதப்பட்ட ஓர் எதிர்வினையைத் தவிர, அவரை எழுதப் பணித்த ராஜாராமோ..” என்று எழுதியதிலோ, “… தொடர்ந்து எழுதினால் திண்ணை ஆசிரியர் கோ. ராஜாராமும், ….. மகிழ்ச்சியடைவார்கள்” என்று எழுதியதிலோ மிகைப்படுத்தல் எதுவுமில்லை என்பது இப்போதும் என் புரிதல். இருப்பினும், இவையாவும் நான் “வாரி வழங்கிய குத்துக்களாக” ராஜாராமுக்கும் தோன்றினால் என்னுடைய உளப்பூர்வமான வருத்தங்கள்.

2. “திண்ணை ஆசிரியர் குழு என்ன செய்யும் என்று சுந்தரமூர்த்தியிடம் தேடிச் சென்று எதுவும் நாங்கள் சொல்லியதில்லை” என்று தெளிவுபடுத்தியதற்கு நன்றி (http://www.thinnai.com/?module=displaystory&story_id=806031714&format=html). இல்லையெனில் வாசகர்கள் திண்ணை ஆசிரியர் குழுவிடம் எனக்குள்ள செல்வாக்கை மிகையாக மதிப்பிடும் விபரீதம் நேரலாம். கூடவே “ஆதலால் இது நகைச்சுவையாய்த் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்” என்று சரியாக புரிந்துகொண்டு பதிலுக்கு நகைச்சுவையுடன் விளக்கம் கொடுத்திருப்பதற்கும் நன்றி.

3. திண்ணை ஆசிரியர் குழு “சில சமயம் அப்படி எழுதுபவர்கள் தமிழ் விவாதத்தளத்தில் பொதுவாய் உள்ள ஒரு நசிவுப் போக்கைப் பிரதிபலிக்கும்போது அந்தப் போக்குகளும் விவாதிக்கப்படவேண்டும் என்பதால் அந்தப் பகுதிகளை நீக்காமலும் இருப்பதுண்டு” என்று எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள பி.கே. சிவகுமார் “எவருடைய நசிவுப் போக்கையோ திண்ணை விவாதிக்க வேண்டும் என்பதற்காக சம்பந்தம் இல்லாத இன்னொருவர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்” என்று கேட்டும், “சுந்தரமூர்த்தி அல்லது மற்றவர்களின் நசிவுப் போக்கை திண்ணை ஆசிரியர்கள் விவாதிக்க விரும்பினால், ஒன்று திண்ணை ஆசிரியர்கள் அதைப் பற்றி வெளிப்படையாக எழுதலாம்” ஒரு நசிவுப்போக்கை அடையாளம் காட்டியும் இருக்கிறார்.

“தமிழ் விவாதத்தளத்தில் உள்ள அந்தப்(நசிவுப்) போக்குகளும் விவாதிக்கப்படவேண்டும்” என்ற உங்கள் அக்கறை ஒரு பக்கம், அதற்காக “இன்னொருவர் ஏன் பாதிக்கப்படவேண்டும்” என்று உங்கள் நண்பரின் கோபத்திற்குள்ளாகியிருப்பது இன்னொரு பக்கம் என்ற தர்மசங்கடமான நிலை. இனி இதுபோன்ற தர்மசங்கடம் என்னால் ஏற்படாது. ஆனால் இதற்குமுன் பிரசுரிக்கப்பட்டவற்றை என்னால் ஒன்றும் செய்ய இயலாது. அவற்றை எந்த காரணத்திற்காக வெளியிட்டிருந்தாலும் அவற்றை நீக்கி ஆக்க சக்திகளின் கோபத்திலிருந்து மீள்வதும், அப்படியே இருக்கவிடுவதும் (அல்லது “நசிவுப் போக்குகள்” என்று தனிப்பகுதி ஆரம்பித்து அங்காவது போட்டுவைக்கலாம்) உங்கள் விருப்பம். உங்கள் வசதிக்காக சுட்டிகளை தொகுத்தளித்திருக்கிறேன்.

கடிதங்கள், அறிவிப்புகள் பகுதி
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20310301&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20311061&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20311131&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80405271&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80406101&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80412023&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80510061&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80510214&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80603035&format=html

அரசியலும், சமூகமும் பகுதி
http://www.thinnai.com/?module=displaystory&story_id=203091810&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=203122515&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20404153&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20408272&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20509094&format=html

அறிவியலும், தொழில்நுட்பமும் பகுதி
http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310162&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402191&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=40408271&format=html

இலக்கியம், திரைப்படம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60602104&format=html

—————————————————
msundaramoorthy@bellsouth.net

(நசிவுப்போக்குகள் என்ற குறிப்பு சுந்தரமூர்த்தியின் எல்லாப் படைப்புகள் பற்றியது அல்ல. அப்படிப் பொருள் தந்த வாசகங்கள் ஏதும் எங்கும் இல்லை. அப்படி ஏதும் குறிப்பு இருந்தால் வருந்துகிறோம். போக்குகள் என்று குறிப்பிட்டதே, இது தனிநபர் சார்ந்தது அல்ல என்பதனால் தான். திண்ணை தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் தளமாகவே இயங்கும். இதில் தர்மசங்கடம் கொள்ளும் எந்த நிலையும் திண்ணை குழுவினருக்கு ஏற்படுவதில்லை. தொடர்ந்து மலர் மன்னன், மு சுந்தரமூர்த்தி, கற்பக விநாயகம், பி கே சிவகுமார் மற்றும் பலரும் திண்ணைக்குப் பங்களிக்கும் வகையில் திண்ணை இயங்கவேண்டும் என்பதே திண்ணையின் விருப்பம். மாறுபட்ட கருத்துகளின் வெளிப்பாடும், விவாதமும் தான் தமிழில் சர்ச்சைகளின் தரத்தை உயர்த்தி, ஜனநாயகப் பண்புகளை வளர்க்கும் என்பது திண்ணையின் நம்பிக்கை.
திண்ணையில் வெளியான பழைய இணைப்புகளை நீக்குவது சாத்தியமில்லை.- திண்ணை குழு)

Series Navigation

author

மு. சுந்தரமூர்த்தி

மு. சுந்தரமூர்த்தி

Similar Posts