கடிதம்

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

சுகுமாரன்


எடின்பரோ குறிப்புகளில் சின்னதாக ஒட்டுவேலை செய்ய உத்தேசம்.

தேவராஜன் மாஸ்டரும் ஓ.என்.வியும் இணைந்து நாடக கானங்களை சராசரி
மலையாளியின் தேசிய கீதங்களாக மாற்றியது ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும்.
எழுபதுகளில் இரண்டு மாஸ்டர்களும் சினிமாவில் சூப்பர் தாரகைகளாகி விட்டனர்.அப்புறம்
இரண்டு நட்சத்திரங்களும் டூ விட்டுக்கொண்டு விட வயலார்-தேவராஜன் என்றும்
ஓ.என்.வி.-சலீல் சௌத்ரி என்றும் இரண்டு மெல்லிசைப் பத்ததிகள் உருவாயின.
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் தேவராஜன் மாஸ்டர் எழுதப்பட்ட கவிதைகளுக்குத்
தான் இசையமைத்தார் என்பதும் சலீல்தாவின் மெட்டுகளுக்குப் பாந்தமான வரிகளை
ஓ.என்.வி உருவாக்கினார் என்பதும்.

தேவராஜன் மாஸ்டரின் இசையில் மிகக் குறைவாகப் பாடியவர் எஸ்.ஜானகி.
ஜானகியின் குரல் கள்ளக்குரல் என்பது மாஸ்டரின் அபிப்பிராயம்.அவருடைய
ஆஸ்தான காயிக தமிழ்ப் பெண்ணான பி.மாதுரி.அடுத்து அவருடைய ·பேவரிட்
பி.சுசீலா.

கமல்ஹாசனை முதலில் பின்னணி பாடவைத்தவரும் தேவராஜன் மாஸ்டர்தான்.
‘அந்தரங்கம்’ படத்தில் இடம்பெறும் ‘ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்கவந்தாள்’
என்ற பாடல்தான் கமல்ஹாசனைப் பாடகராக்கியது.

கம்யூனிஸ்ட் சக யாத்திரிகரும் நாத்திகருமான தேவராஜனின் இசைதான் சபரிமலை
ஐயப்பனை தினம்தோறும் தாலாட்டுகிறது. சம்பிரதாயமான முறையில் பாடப்பட்டு
வந்த ஹரிவராசனம் கீர்த்தனம் இப்போது பாடப்படுவது தேவராஜன் மாஸ்டர்
சிட்டைப்படுத்திய மத்யமாவதி ராகத்தில் யேசுதாஸின் குரலில்.

எம்.எஸ்.திருப்பூணித்துறை பற்றிய குறிப்பில் ‘பெருந்தச்சன்’படத்தின் இயக்குநர்
ஹரிஹரன் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சரியல்ல.அது அஜயன் இயக்கிய படம்.
அஜயனின் அப்பாவும் கேரளத்தின் கலாச்சார அரங்கில் பெரும் நட்சத்திரமாக
ஜொலித்தவர்.நாடகம் போட்டு ‘நிங்ஙள் என்னெ கம்யூனிஸ்டாக்கி’ என்று
பலரையும் சிவக்கச் செய்தவர். பெயர்- தோப்பில் பாசி.

சுகுமாரன்

n_sukumaran@rediffmail.com

Series Navigation

author

சுகுமாரன்

சுகுமாரன்

Similar Posts