கடிதம்

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

அருளடியான்


தி.மு.க, தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், டிவி இல்லாத வீடுகளுக்கு இலவச கலர் டிவி தருவோம் என அறிவித்துள்ளனர். இது மிகவும் தவறான முடிவு. ஏற்கனவே, கலைஞர் குடும்பம் ஊடகத் துறையில் ஏகாதிபத்தியம் செலுத்துவதை வைகோ போன்ற பல அரசியல்வாதிகளும், எழுத்தாளர் ஞாநி போன்ற அறிவுஜீவிகளும் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில், அரசுப் பணத்தில் டிவிப் பெட்டி வழங்கி, மக்களை தனக்கு அடிமையாக்கும் கலைஞரின் தந்திரம் நரித்தனமானது. ‘இலாபம் வரும் வழிகள் எல்லாம் தனக்கும் தன் குடும்பத்துக்கும். நட்டம் வரும் வழிகள் எல்லாம் தன் கட்சிக்கும் அரசுக்கும் ‘ என்பது தானே கலைஞரின் கொள்கை. யார் அப்பன் வீட்டுப் பணத்தில் இவர் டிவி கொடுக்கிறார். மக்களின் வரிப்பணத்தில் இலவச டிவிப்பெட்டி கொடுப்பதால் நாட்டுக்கு என்ன நன்மை ? நாட்டு மக்களுக்கு என்ன நன்மை ? இதனால் நாட்டின் பொருளாதாரம் உயருமா ? உற்பத்தி உயருமா ? சன் டிவிக்கு இணைப்பு கொடுப்பதால், வருமானம் உயரும். யார் குடும்பத்தின் வருமானம் உயரும் ?

-அருளடியான்

aruladiyan@yahoo.co.in

Series Navigation

author

அருளடியான்

அருளடியான்

Similar Posts