கடிதம்

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

நக்கீரன்


மரியாதைக்குரிய திரு.அக்னிபுத்திரனின் ‘ஸ்டாலின் முதலமைசரானால் என்ன தப்பு ‘ படித்தேன்.

வைகோ வின் அரசியல் நேர்மை பற்றி மிக கோபப்பட்டிருந்தார். இதுவரை அரசியலில் யாரும் செய்யாததை செய்தது போல் சொல்லியிருக்கிறார்.

ஏதோ கருணாநிதி மிக கொள்கை பற்று உள்ளவர் போலவும், இவர்கள் எப்போதும் கொள்கையை மனதில் கொண்டே கூட்டணி அமைப்பது போலவும் எழுிதியுள்ளார்.

எமெர்ஜென்ஸிக்கு பிறகு இந்திரா காந்தியுடன் கூட்டு அமைத்தது எந்த கொள்கையின் அடிப்படையில். பண்டாரக் கட்சி என முதலில் திட்டி தீர்த்து பின் பி.ஜே.பி. உடன் கூட்டு அமைத்தது எந்த கொள்கையின் அடிப்படையில். முதன் முதலாக கூட்டணி மாறாமல் இரண்டாவது முறையும் ஒரே கூட்டணியில் இருந்து போட்டியிடுவதால் ராமதாஸ் மிகுந்த கொள்கை பற்று உள்ளவரா ? கருணாநிதி செய்தால் அரசியல் சாணக்கியதனம், அதையே வைகோ செய்தால் அரசியல் வேஷம்.

இங்குள்ள அரசியல் தலைவர்கள் எல்லோரையும் விட வைகோ நாணயமானவர் தான். கொள்கை பற்று அதிகம் உள்ளவர் தான்.

மனதை தொட்டு சொல்லுஙகள். ஸ்டாலினும், தயாநிதி மாறனும் கருணாநிதியின் மகன் மற்றும் பேரனாக இல்லாமல் இருந்திருந்தால் தி.மு.க வில் இந்த உயரத்திற்கு வந்திருக்க முடியுமா ?. இல்லை இவர்கள் இருவரை தவிர கட்சியில் மூத்தவர்களோ, அனுபவஸ்தர்களோ, அறிவாளிகளோ இல்லை என்று சொல்ல போகிறீர்களா ?

ஸ்டாலின் சுயமாக முன்னுக்கு வந்தால் இங்கு யாரும் குறை சொல்ல போவதில்லை. யாரெல்லாம் ஸ்டாலினுக்கு போட்டியாக கூடுமோ அவர்களை எல்லாம் கட்டம் கட்டி விட்டு, ஸ்டாலின் தலைமையை எற்பவரை மட்டுமே ஆதரிக்கும் கட்சியாகத்தான் இன்று தி.மு.க விளங்குகிறது.

ஒரு தமிழனுக்கு(மூப்பனார்) பிரதமராகும் வாய்ப்பு இருந்த போது, அப்பதவி மூப்பனாருக்கு கிடைக்க சிறிதும் ஆர்வம் காட்டாதவர் இந்த தமிழினக்காவலர் கருணாநிதி.

தமிழ் நாட்டில் கருணாநிதியும் மற்றும் அவர் குடும்பம் மட்டுமே தமிழோ, தமிழர்களோ அல்ல.

—-

netrikan_nakkiran@yahoo.com

Series Navigation

author

நக்கீரன்

நக்கீரன்

Similar Posts