கடிதம்

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

விஸ்வாமித்ரா


மதிப்பிற்குரிய திரு.மலர் மன்னன் அவர்களுக்கு

திண்ணையில் உங்களது அனுபவங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். வெகு ஜன ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள முடியாத பல தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அதற்கான என்னைப் போன்ற வாசகர்களின் சார்பாக நன்றிகள். திராவிட இயக்கத்தாராலும், இந்திய விரோத சக்திகளாலும், மத வெறியர்களாலும், இந்து எதிர்ப்புச் சக்திகளாலும், மூளைச் சலவை செய்யப் பட்டுள்ள ஒரு சமுதாயத்திடம் உங்களைப் போன்ற நேர்மையாளர்கள் உண்மைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது இந்தக் காலத்தின் அவசியமாகும். இணையத்தில் உங்களைப் போன்ற அனுபவம் மிக்கவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மிக அரிது. உங்கள் மூலம் பல்வேறு பொய் முகங்கள் கிழியப் படுவது பொறுக்காமல், உங்கள் மீது அவநம்பிக்கை என்னும் சகதியை ஒரு சில தீய சக்திகள் பரப்பி வருகின்றன. அவர்கள் நோக்கம் புரளிகளையும் வதந்திகளையும் பரப்பி, உங்களைப் போன்றவர்களின் மனம் நோகச் செய்து இளைய சமுதாயத்தினர் உண்மைகளை அறியாமல் தடுப்பதேயாகும். இதுவே அவர்களது முழு நேர வேலை. தயவு செய்து அது போன்ற எதிர்மறை சக்திகளைப் பொருட்படுத்தாமல், உங்கள் மனதுக்கு உண்மையென்று படுபவதை, உங்கள் மனசாட்சிக்கு நேர்மையென்று தோன்றுவதை, உங்களது அனுபவங்களைத் தொடர்ந்து பதிவு செய்து வாருங்கள். உங்கள் கட்டுரைகளில் காணப்படும் உண்மைகளை மறைத்து பொய்யான திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் அவர்களது அரைவேகாட்டுத் தகவல்களாலும், காழ்ப்புணர்வு மிக்க கட்டுரைகளாலும், தாங்களாகவே நீர்த்துப் போய் விடுவார்கள். தயவு செய்து அது போன்ற எதிர்மறை இயக்கங்களின், தேச விரோத சக்திகளின் சதி வலைக்குப் பலியாகி விட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கட்டுரைகளில் காணப்படும் தகவல்களை நாங்கள் மனப்பூர்வமாக நம்பி ஏற்றுக் கொள்கிறோம். அதில் எவ்வித சந்தேகமோ ஐயப்பாடுகளோ, எங்களுக்கு கிஞ்சித்தும் கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து எதிர் நோக்குகிறேன்.

தொடர்ந்து எழுதுமாறு அன்புடன் வேண்டிக் கொள்ளும்

விஸ்வாமித்ரா

viswamitra12347@rediffmail.com

Series Navigation

author

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா

Similar Posts