கடிதம்

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


சென்ற வார திண்ணையில் ஒரு அம்மையார் எனது கட்டுரை ஒன்றினை விமர்சித்து எழுதியிருந்தார். இஸ்லாம் மீது சேற்றினை வாரி எறிவதற்கு முன்னர் அதனை முழுமையாக அறிந்திருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அவரது கருத்துக்களுக்கு நன்றி. அது ஒரு தனி நபரின் புரிதலால் எழுந்த கருத்தாக மட்டுமே முன்வைக்கப்பட்டிருக்குமெனில் இக்கடிதமே தேவை பட்டிருக்காது என்றுதான் சொல்ல வேணும். ஆனால் அம்மையார் தாம் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சமூகவியல் ஆசிரியை என்கிற முறையில் பிழையான கருத்தினைக்கண்டிப்பதாக கூறியிருப்பதால் அந்த எதிர்வினையில் என் கட்டுரை மீது அம்மையாருக்கு நேர்ந்த தவறான புரிதல்களை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அம்மையார் நான் ஏதோ ஒட்டுமொத்த இஸ்லாமே யூதர்களுக்கு எதிரான வெறுப்பியலைக் கொண்டதாக அக்கட்டுரையில் கூறியிருப்பதாக கருதுகிறார். ஆனால் என் கட்டுரை அவ்வாறு கூறவில்லை. நான் அவ்வாறு கருதுகிறேனா இல்லையா என்பது வேறு விசயம். அது குறித்து பின்னால் வருகிறேன். ஆனால் அந்த குறிப்பிட்டக் கட்டுரையில் நான் அவ்வாறு கூறவில்லை. இஸ்லாமிய இறையியலைத் தொடுவது அக்கட்டுரையில் இறுதி பாராதான். அது கூறுவது: ‘ஆழமாக அறியப்படாத விசயம் ‘பாலஸ்தீனிய ‘ பிரச்சனை இஸ்ரேலிய அராபிகளின் வாழ்வியல் உரிமை குறித்ததல்ல, பான்-இஸ்லாமிய இறையியலின் யூதர்கள் மீதான அதீத-காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான். ‘O ye who believe! Take not the Jews and Christians for friends…. ‘ – [குரான் 5:51] ‘

ஒட்டுமொத்தமாக இஸ்லாமை இங்கு குறிப்பிடவில்லை. மாத்திரமல்ல அக்கட்டுரை எவ்வாறு சாதாரண முஸ்லீம்கள் யூதர்களை விரும்புகின்றனர் என்பதனைக் காட்டுகிறது. இதில் இஸ்லாம் மீது சேற்றினை வாரி இறைப்பது எங்கே வருகிறது ? இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம் அது கூறுவதெல்லாம் அல்லாவின் மீது அன்பு மாத்திரம் தான். பிரச்சனை விளக்கம் (interpretation) தான் என்றெல்லாம் அம்மையார் அறிவுரை கூறுகிறார். பின்னர் யூத இறைவாக்கினரை இஸ்லாம் ஏற்றுக்கொண்டமையையும் கூறுகிறார். அதனைக் காட்டும் ஒரு குரான் வசனத்தையும் அளிக்கிறார். நன்றி. தன்யனானேன். ஆனால் பிரச்சனை யூத இறைவாக்கினரை இஸ்லாம் ஏற்றுக்கொண்டதா இல்லையா என்பதல்லவே மாறாக யூதர்கள் எனும் மக்கள் அவர்கள் தனி மதமாக இயங்கும் பட்சத்தில் எவ்வாறு காண்கிறது என்பதுதானே.

ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளாகட்டும், பாலஸ்தீனிய அதாரிட்டி போன்ற அமைப்புகளாகட்டும் அவை தமது யூதவெறுப்பியல் பிரச்சாரத்தினை இஸ்லாமிய இறையியல் மூலமாகவே நடத்துகின்றன. அவ்வளவு ஏன் இன்றைக்கும் கூட யூதப்பிரச்சினையை அவர்களது இறைவாக்கினரை ஏற்றுக்கொள்ளும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவம் யூதர்கள் கிறிஸ்துவை ஏற்கமறுத்ததால் ஏற்பட்டதாக -அதாவது இறையியல் வெறுப்பியல் மூலமாகவே -காண்கிறது. [பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள 2005 இல் வெளியிடப்பட்ட எவாஞ்சலிக்கல் இலக்கியம்] எனவே யூத இறைவாக்கினரை ஏற்பதென்பது யூத வெறுப்பியல் சார்ந்த இறையியலின்மைக்கு சான்றாகிவிட முடியாது.

உலக மதங்கள் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக இருக்கும் ஒரு நபர் இந்த எளிய உண்மையை புரியாதது போல பாவனை செய்வது அதிசயமாகத்தான் இருக்கிறது. இன்னமும் சொன்னால் எந்த அளவுக்கு யூத இறைவாக்கினரை ஒரு பின்னாளைய ஆபிரகாமிய சமயம் தனதாக்குகிறது அதற்கு நேர்விகிதமாக யூத வெறுப்பியல் அதிகரிக்கிறது எனலாம். உதாரணமாக அம்மையார் முன்வைத்த குரானின் மேற்கோளுடன் பின்வரும் குரான் வசனத்தையும் சேர்த்து படிக்க அது விளங்கும். ‘(நபியே) யூதர்களும், இணைவைத்து வணங்குவோரும், விசுவாசிகளுக்கு மனிதர்கள் யாவரிலும் கொடிய விரோதிகளாக இருப்பதை நிச்சயமாக நீர் காண்பீர்! ‘ (அல் மாயிதா-82) [தமிழ் மொழிபெயர்ப்பு: அல்லாமா அப்துல் ஹமீது பாகவி] அல்லாவை ஏற்றுக்கொண்ட யூதர்கள் நற்கதி அடைவார்கள் என்று கூட குரான் சொல்லத்தான் செய்கிறது. அல்லாவை ஏற்றுக்கொள்கிற யூதன் யூதனல்ல முஸ்லீம் என்பதுதான் இதில் பிரச்சனையே. அம்மையார் ஒற்றைப்பார்வை தவறு என போதிக்கிறார். பிரச்சனைகளுக்கு பலமுகங்கள் உண்டு என்கிறார். உண்மைதான். தமிழ் கூறும் நல்லுலகில் அ.மார்க்ஸ் காஸா குறித்து எழுதிய ஜூ.வி அபத்தக் கட்டுரை முதல் பா.இராகவனின் அராபியம் சார்ந்த இஸ்ரேல் குறித்த தொடர்கட்டுரை வரை இப்பிரச்சனைகளில் இஸ்ரேலின் பக்கம் எந்த அளவு கூறப்பட்டுள்ளது ? கிறிஸ்தவ காலனியவாதிகள் பூர்விகக்குடிகளுடனும், பங்களாதேஷ் இஸ்லாமிய வெறியர்கள் அங்குவாழ்ந்த ஹிந்துக்கள் மற்றும் பெளத்தர்களுடையவும், சீன கம்யூனிச வெறியர்கள் திபெத்தியர்களுடையவும் நிலங்களைப் பறித்தது போலலல்லாமல் நிலத்திற்கு அதிக விலை கொடுத்து பாலஸ்தீனியர்களிடமிருந்து ‘ யூதர்கள் வாங்கிய தகவல்கள் கூறப்பட்ட தமிழ் கட்டுரைகள் எத்தனை ? அல்லது யாசர் அராபத்தின் தாத்தாக்களும் மாமன்களும் கொழுத்த அமெரிக்க பணத்திற்கு யூதர்களிடம் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு பின்னர் அகதி அரிதாரம் பூசி போடும் மாய்மாலம் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் எத்தனை ? எனவே எனது கட்டுரை சமன் செய்யும் கட்டுரையே அன்றி ஒற்றைப்பார்வை கட்டுரை அல்ல. அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியையாக விளங்கும் இந்த அம்மையாருடன் விவாதிக்க, சேவாபாரதியின் துப்புரவுத்தொழிலாளர் குழந்தைகளுக்கான மாலைநேர கல்விமையங்களில் பணி புரியும் எனக்கும் நேரமும் சுவாரசியமும் இல்லைதான். இப்பதில் என் போன்ற எளிய இதர திண்ணை வாசகர்களுக்கு மட்டுமே. இறுதியாக ஒரு விசயம். அம்மையார் மேற்கோள் காட்டிய மேரி பிஷரின் நூல் அருமையான நூல்தான். ஆனால் அந்நூலில் இருக்கும் பெண்ணியத் தொடர்பான விசயங்களில் கிறிஸ்தவ-இஸ்லாமிய சார்பும் அதே சார்பு நிலை விளக்கங்கள் ஹிந்து மதத்துக்கும் சமுதாயத்துக்கும் அந்நூலில் மறுக்கப்பட்டிருப்பதையும் அமெரிக்காவைச் சார்ந்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும் இறையியல் பட்டதாரியுமான ஒருவர் எழுதியிருப்பதையும் இங்கே விரும்புகிற வாசகர்கள் பாருங்கள்:

மேரி பிஷர் நூல் பற்றி

http://www.sulekha.com/blogs/blogdisplay.aspx ?cid=4564&contributor=Dave%20Freedholm

—-

aravindan.neelakandan@gmail.com

Series Navigation

author

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

Similar Posts