கடிதம்

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

அலர்மேல் மங்கை


சென்ற வாரம் அரவிந்த் நீலகண்டனின் ‘யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர் ‘ என்ற கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. பொதுவாக இது போன்ற மதங்களைப் பற்றிய, பத்திரிகைகளில் வெளியாகும் அபிப்பிராயங்களுக்குப் பதில் அளிப்பதையே விரும்புவதில்லை. ஒரு அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில், சமூகவியல் கற்றுத் தரும் ஆசிரியையாக இருப்பதில், ‘உலக மதங்கள் ‘ என்ற பாடத்தைக் கற்றுத் தரும் ஆசிரியையாக இன்று என்னால் மெளனம் சாதிக்க முடியவில்லை. மெளனம் சாதிக்கவே விருப்பம். காரணம், உடனே, இஸ்லாமிய அபிமானி, அடிவருடி என்பது போன்ற காரணப் பெயர்களை வீணாகச் சுமப்பதில் விருப்பமில்லை. ஒரு பல்கலைக் கழக, உலக மதங்களைக் கற்றுத் தரும் ஆசிரியையாக எனக்குத் தெரிந்ததைக் கூற வேண்டும் என்று தோன்றுகிறது.

‘O ye who believe! Take not the Jews and Christians for friends…. ‘ – என்று கூறிய குரான் கீழ் கண்டதையும் கூறியிருக்கிறது:

Say ye: We believe

In God, and the revelation

Given to us, and to Abraham,

Ismai ‘il, Isaac, Jacob,

And the Tribes, and that given

To Moses and Jesus, and that given

To (all) Prophets from their Lord:

We make no difference

Between one and another of them:

And we bow to God in surrender.

Aaron Klein ஒரு யூதர். அவர் எழுத்தில், யூதர்களுக்கான அபிமானமும், அதனால், நேரும் ஒற்றைக் கண்ணோட்டப் பார்வையும் இருப்பது புரிந்து கொள்ளத் தக்கதே. ஒரு பிரச்சினை என்று எடுத்துக் கொண்டால், அதற்குப் பல கோணங்கள் இருக்கும். ஒரு கோணத்தை மட்டுமே வாசகர்கள் அறிவது, நியாயமில்லை. எல்லா மதங்களிலும் நல்ல விஷயங்களும் உள்ளன. மத நூல்களில் கூறியுள்ளவைகள் எவ்வாறாக புரிந்து கொள்ளப் படுகின்றன (How they are interpreted) என்பதுதான் பிரச்சினை. இஸ்லாம் அல்லா மீதான அன்பையும், மிகவும் எளிமையான வாழ்க்கை முறைகளையும் போதிக்கும் மதம். எந்த மதத்தையும் முழுமையாகப் படித்த பின்பும், புரிந்த பின்பும் அதன் மீது சேற்றை வாரித் தெளிக்கலாமா என்று யோசிப்போம். இது ஒரு வாதத்திற்கான அழைப்போ, அறைகூவலோ அல்ல. எனக்குத் தெரிந்ததையும் கூறும் எண்ணம் மட்டுமே. Please understand that I do not have time or intention to jump into any kind of arguments. I know they can go back and forth, achieving nothing.

Source: Living Religions, Sixth Edition, by Mary Pat Fischer. Published by Prentice-Hall

அலர்மேல் மங்கை

mangaialarmel@yahoo.com

Series Navigation

author

அலர்மேல் மங்கை

அலர்மேல் மங்கை

Similar Posts