கடிதம்

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

கனகசபாபதி


கடந்த இரு வாரங்களாக கடவுள் பற்றி இரு நண்பர்கள் எழுதிய கட்டுரையை படித்தேன். ஏனக்கு தோன்றிய சில விசயங்கள்.

முதலில் நண்பர் ஜாபாின் கருத்துக்களை பார்ப்போம். எனக்கு நினைவு தொிந்த காலம் முதல் கடவுள் விசயத்தில் இந்த வாதத்தை கேட்டு வருகிறேன். முதலில் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்பார்கள். புிறகு மெல்ல மெல்ல நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பார்கள். இங்குதான் உள்ளது விசயம். அந்த சக்தி என்ன ? அதன் பண்புகள் என்ன ? தெளிவான விளக்கம் கிடைக்காது. இயற்கை என்ற விசயத்திற்கும கடவுள் என்ற விசயத்திற்கும வித்தியாசம் உண்டு. இயற்கைக்கு இவர்கள் தரும் விளக்கம் என்ன ? கடவுளுக்கு இவர்கள் தரும் விளக்கம் என்ன ? இரண்டும் எப்படி ஒன்றாக முடியும் ? இரண்டின் பண்புகளும் ஒன்று என்கிறாரா நண்பர் ?

மேலும் இயற்கையின் படைப்பில் மனிதனுக்கு புாியாமல் இருக்கும் சில விசயங்களைப் பற்றி கூறினார். என் கேள்வி என்னவென்றால் இயற்கையின் படைப்பில் நூறு வருடங்களுக்கு முன்பு மனிதனுக்கு தொியாத விசயம் என்ன ? இப்போது தொியாத விசயம் என்ன ? சிந்திக்க வேண்டும். வுித்தியாசம் உண்டா இல்லையா ?

தோழி கிாிஜாவின் கடிதத்தை பொருத்தவரை ஒன்றுதான் நாம் கூறமுடியும். திரு. சுப்ரமணியத்தின் அனுபவத்தை நம்பும் மக்களுக்கு உங்கள் அனுபவத்தை நம்புவதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது. உங்கள் அனுபவத்தையும் நீங்கள் கூற வேண்டும். நாங்கள் படிக்க வேண்டும். பிள்ளையாரும் பால் குடித்து ரொம்ப நாள் ஆகிறது.

திரு. சுப்ரமணியத்தின் மேல் அக்கறை உள்ள எல்லாம் வல்ல கடவுளுக்கு கும்பகோணம் குழந்தைகள் மேல் ஏன் அக்கறை இல்லை என்று கேட்பது வறட்டு வாதம் என்றால் அந்த வறட்டு வாதத்தை சிந்திக்க தொிந்த மனிதன் செய்துக்கொண்டே இருப்பான்.

—-

m_kanakasabapathy@yahoo.com

Series Navigation

author

கனகசபாபதி

கனகசபாபதி

Similar Posts