கடிதம் பிப்ரவரி 25,2005

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

தமிழ்


வணக்கம்,

கடந்த சில வாரங்களாக அனைவரும் திருமா,ராமதாஸ் இருவரையும் கடுமையாக தாக்கி வருகிறீர்கள். அவர்கள் அரசியல் ஆதாயம் தேடுவதாகவே வைத்துக்கொள்வோம் இன்றைய காலகட்டத்தில் அவர்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டதக்கவை தான். இதையே கலைஞரோ ஜெயலலிதாவோ செய்திருந்தால் புகழ்ந்திருப்பீர்கள்.

தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய விஷயங்களில் முக்கியமானது சினிமா. கோடிஸ்வரரான தொழிலதிபர் முதல் கடைகோடியில் உள்ள சாதாரண கூலித் தொழிலாளி வரை சினிமாவின் வசீகரத்திற்கு கட்டுப்படாதவரே இல்லை என்று சொல்லாம். —- இந்த செய்தி 14-02-2005 குமுதம் இதழில் வந்தது.

இப்படி தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய சக்தி படைத்த தமிழ் சினிமாவை தமிழுக்காக தமிழில் பெயாிடுங்கள் என்பது தவறான விஷயமா ? ? ?

பக்கத்து மாநிலமான கர்னாடகாவில் பிற மொழி படங்களை வெளியிடும் திரையங்குகளை தீயிட்டு கொளுத்துகின்றனர். ஆனால் பழம்பெரும் மொழியான நமது தமிழ் மொழிக்கு தமிழில் பெயாிட வார்த்தைகள் இல்லையா ? ? ?

சாி விடுங்கள் கமல் போன்ற தத்துவ ஞானிகள் சொல்வது போல நடைமுறையில் பயன்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்துவது தவிர்க்கமுடியாதது என வைத்துக் கொள்வோம். சூாியா என்ற ஒருவன் சொல்கிறான் BF என்பது Best Friend என்று BF க்கு புது விளக்கத்தை தொிந்து கொள்ளுங்கள். இது போன்ற செயல்கள் உங்கள் கண்ணுக்கு தொியவில்லையா ? ? ? ? BF என்ற சொல்லுக்கு அவர் தரும் விளக்கம் உங்களை சந்தோஷமடைய செய்கிறதா…

தமிழ் மொழி மீது ஒருவன் தன் அரசியல் ஆதாயத்திற்கோ அல்லது தமிழுக்கோ குறள் கொடுக்கும் போது அதை ஏன் ஏளனம் செய்கிறீர்கள் ?

ஏளனம் செய்யும் நீங்கள் எப்போதாவது குறள்கொடுத்ததுண்டா தமிழுக்காக ? ? ?

வாஜ்பாய் & கமல் கவிதை எழுதினால் ஒன்றுமே இல்லை என்றாலும் புகழ்வீர்கள். விளங்கவில்லை என்றாலும் கருத்துமிக்க கவிதை என்பீர்கள்.

ஆனால் ஒரு திருமா குரல் கொடுத்தால் அரசியல் என்பீர்கள்.

(மேலும் திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள் கமலுக்கு எழுதிய கடிதத்தை http://www.kumudam.com/kumudam/291104/pg7.php என்ற இனைய முகவாியில் காண்க.)

(இந்த மடல் திண்ணையில் வரும் என்ற நம்பிக்கை இல்லை இருந்தும் திண்ணைவின் வாசகன் தமிழின் வெறியன் என்ற காரணத்திற்காக அனுப்புகிறேன்)

அன்புடன்

தமிழ்

—-

tamilguyy2k@yahoo.com

Series Navigation

author

தமிழ்

தமிழ்

Similar Posts