கடிதம் பிப்ரவரி 3,2005

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

ஜெயமோகன்


அன்புள்ள ஆசிரியருக்கு

ரெ.கார்த்திகேசு அவர்களின் கடிதத்துக்கு நன்றி. மகிழ்ச்சி.

ஏதோ ஒரு காலத்தில் இலக்கியத்தில் இன்று முக்கிய பங்காற்றிவரும் தகவல் தொடர்பு, சமூக நோக்கம் இரண்டும் இல்லாமலாகிவிடுமா என்ற வினாவே அக்கதையின் அடிப்படை. அப்படி ஆகும்போது இரண்டு வி ?யங்களே எஞ்சும் . ஒன்று இலக்க்யத்தை வெற்றும் மொழியாட்டமாக ஆக்கும் மனநிலை. இரண்டும் இறந்தகால ஏக்கம் மற்றும் எதிர்காலக்கனவுகளை இணைக்கும் ஆழ்மன இயக்கம். அதையே அக்கதையில் சொல்லியிருக்கிறேன்.

இன்று உலக மொழிகளுக்கு இடையே, பண்பாடுகளுக்கு இடையே ஒரு கண்ணாடிச்சுவர் உள்ளது. அதுவே இன்று உலகமொழிகள் என்ற கவற்சி இல்லாமல் போக காரணம் என்பது இக்கதையில் உள்ள ஊகம். அச்சுவர் இல்லாமலாகும் போது வலிந்து தனித்துவ அடையாளம் தக்கவைத்துக் கொள்ளப்படலாம் என்று கதை சொல்ல முயல்கிறது

அறிவியல் புனைவு என்பதே சாத்தியங்களின் ஆட்டம் தானே

ஜெயமோகன்

jeyamoohannn@rediffmail.com

Series Navigation

author

ஜெயமோகன்

ஜெயமோகன்

Similar Posts