கடிதம் ஜனவரி 27,2005

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

மாயவரத்தான்


20-ம் தேதியிட்ட திண்ணை இதழின் கடிதங்கள் பகுதியில் ‘ரோபோட் ‘ (அப்படிதான் தன் வலைக்குறிப்பில் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்!) ‘விசிதா ‘வின் கடிதம் கண்டேன்.

‘ஒரு தெளிவு கிடைக்கும் வரை எழுத வேண்டாம் ‘ என்று அறிவுரை சொல்லியிருக்கிறார். ஆஹா.. முழு தெளிவு கிடைத்த பின்னர் தான் அவர் எழுத வந்தாரா என்று தெரிந்து கொள்ள ஆசை. (இதை தனிப்பட்ட தாக்குதலாக நினைத்து விட வேண்டாம்.. எப்படி அந்த தெளிவு அவருக்கு கிடைத்தது என்று அறிந்து கொள்ள ஆசை..! அதில் ஏதாவது எனக்கு உபயோககரமான தகவல் கிடைக்கலாம் இல்லையா, நான் தெளிவு பெற! ?)

எழுத்தின் மூலம் தெளிவு பெறவே எனக்கு ஆசை. சமயங்களில் அதில் தவறு நிகழும் போது மன்னிப்பு கேட்பது மனிதத் தன்மை. ‘நான் பிடித்த முயலுக்கு இரண்டரை கால்கள் தான் ‘ என்று வீண் விவாதம் செய்யவில்லையே! முடிந்து போன பிரச்னையை (என்று நான் கருதுகிறேன்!) மீண்டும் கிளப்புவது நாகரீகமா ?

மேற்படி விவகாரத்தில் ‘தெளிவானவர்களின் நிலைப்பாட்டிலிருந்து ‘ நான் ஒன்றை நன்றாக கற்றுக் கொண்டேன். யாரையாவது அல்லது எதையாவது தாக்க வேண்டுமா.. ?! குறிப்பிட்டு சொல்லி எழுதினால் தானே பிரச்னை.. ?! ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தையோ அல்லது ஒரு கும்பலையோ தாக்குவது போல எழுதிவிட்டால் போதும்…! அதில் பிரச்னை இல்லை அல்லவா ?!

குறிப்பிட்ட சமூகத்தினரையே தொடர்ந்து தாக்கி பேசி, மாற்று சமூகத்தினரை அரவணைத்து வரும் அரசியல்வாதிகளை ‘மதச்சார்பற்றவர்கள் ‘ என்று புகழ்வதில்லையா ?! அந்த நோய் இப்போது எழுத்தாளர்களுக்கும் பரவி வருகிறது. பரவாயில்லை.. நோய் வர வர தான் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.

– மாயவரத்தான் (info@mayiladuthurai.net)

Series Navigation

author

மாயவரத்தான்

மாயவரத்தான்

Similar Posts