ஞாநி
இரண்டு கடிதங்களுக்கு ஞாநியின் பதில்கள் :
1. தலித் பிரச்சினையில் உம் கருத்து என்ன ? – ரெங்கதுரை
2. ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை – மாயவரத்தான்
1.
காலச்சுவடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சுந்தர ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி ஞாநி தன் கருத்துகளை சுருக்கமாகச் சொல்லியுள்ளார். அதில் வேறு சில விடயங்கள் பற்றி சுந்தர ராமசாமி பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அவர். இதைப் படிக்கும் போது எல்லா நடப்புப் பிரச்சினைகளைப் பற்றியும் தான் கருத்துச் சொல்லி வருவது போன்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கிறார் ஞாநி என்றே கருத வேண்டி இருக்கிறது. அப்படியானால், தற்போது தமிழ் இலக்கிய உலகிலும் சிற்றிதழ்களிலும் பரபரப்பை உண்டாக்கியுள்ள – பெரியார் பற்றி ரவிக்குமார் போன்ற தலித் சிந்தனையாளர்களின் விமர்சனத்தையும், அதற்கு எதிராக பார்ப்பனர் அல்லாத ஆதிக்க சாதியினர் சிலர் தலித்துகளை சுயமாகச் சிந்திக்கும் தகுதி அற்றவர்களாகவும், தாங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதே தலித் விடுதலைக்கு ஒரே வழி என்பது போலவும் பேசியும் விமர்சித்தும் வருவது பற்றி ஞாநி என்ன நினைக்கிறார் ?
மேலும், ‘பெரியாரை இழிவு படுத்தும் வகையில் செய்திகள், கட்டுரைகள் வெளியிடும் இதழ்களில் எழுதாமல் அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்று படைப்பாளர்களை, எழுத்தாளர்களை இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது ‘ என்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஞாநிக்கு ஒப்புதலுடையதா என்பது பற்றியும் அவர் விளக்க வேண்டும். திராவிடர் கழகம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் இத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதால் இது தலித்துகள் மற்றும் பத்திரிகைகளின் கருத்துச் சுதந்திரத்தின் மேல் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாக இருக்க முடியாது என்று ஞாநி கருதுவாரா ?
பா. ரெங்கதுரை
சியாட்டல், அமெரிக்கா
திண்னை. காம் இதழில்
தீம்தரிகிட இதழையும் நான் எழுதிவரும் இந்தியா டுடே, ஜூனியர் விகடன் கட்டுரைகளையும் தொடர்ந்து கவனித்து வரும் வாசகர்களுக்கு எல்லா விடயங்கள் குறித்தும் நான் தயங்காமல் கருத்து தெரிவித்து வருபவன் என்பது தெரியும். அக்கப்போர்கள், குழுச்சண்டைகள், அவதூறுகளை மட்டுமே நான் முடிந்த வரையில் ( முழுமையாக அல்ல) தவிர்த்து வருகிறேன். பெரியாரை தலித் விரோதி என்றோ சுய சிந்தனையாளர் அல்ல என்றோ சொல்லுவது முழுக்க முழுக்க தவறு என்று பல முறை நான் எழுதியாகிவிட்டது. பெரியார் பற்றிய என் டி.வி தொடரில் கூட இது சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல தலித்துகள் பிரச்சினையைப் பற்றி தலித்தாகப் பிறந்தவர்கள் மட்டும்தான் எழுத வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதையும் தெரிவித்து வந்திருக்கிறேன். யாரும் எந்தப் பிரச்சினையைப் பற்றியும் தாங்கள் விரும்பும் கருத்தைப் பொது நாகரீகத்துக்கு உட்பட்டு சொல்லும் முழு உரிமையுடையவர்கள் என்பதும், அப்படி சொல்லும்போது, அவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இருக்கிறதா என்பதை ஆராய்வதே நமது கடமை என்றும் கடந்த முப்பதாண்டுகளாக நான் எழுதி வருகிறேன். என் எல்லா கட்டுரைகளிலும் இந்தக் கருத்தின் அடி நாதம் ஒலிக்கக் காணலாம். சமூகத்தை பாதிக்கும் பொது நடப்புகள் குறித்து எழுத்தாளர்கள் பகிரங்கமாக கருத்து சொல்ல வேண்டும் என்று சுந்தர ராமசாமி இப்போது சொல்லியிருப்பதை வரவேற்றுத்தான் நான் அவரும் எல்லா விஷயங்களிலும் கருத்து சொல்ல வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். சமூகத்தை பாதிக்கும் விஷயங்களை விடுங்கள். எழுத்தாளர்களின் உரிமையை பாதிக்கும் விதத்தில் குமுதம் கடந்த சில ஆண்டுகளாக அதன் இதழில் வெளிவரும் படைப்புக்கெல்லாம் பதிப்பாளரே உரிமையாளர் என்று ஒவ்வொரு இதழிலும் அறிவித்து வருகிறது. அதை கடந்த மூன்று ஆண்டுகளாக தீம்தரிகிட மட்டுமே தொடர்ந்து கண்டித்து வருகிறது. குமுதம் தீரா நதி இதழில் தொடர்ந்து எழுதும் சு.ரா இது பற்றி இதுவரை ஏன் பகிரங்கமாக கருத்தே தெரிவிக்கவில்லை என்பதை ரங்கதுரை தயவுசெய்து கேட்டுச் சொல்வாரா ?
ஞாநி
தீம்தரிகிட ஜனவரி 1-15, 2005 இதழிலிருந்து
dheemtharikida @hotmail.com
2.
ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை! – மாயவரத்தான்
தமிழகத்தில் ஜாதி அரசியல் இல்லாவிட்டால் பல அரசியல்வா(ந்)திகளுக்கு பிழைப்பே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே.அதே போன்று, பிராமணர்களையும், பிராமணியத்தையும் மூச்சுக்கு முன்னூறு தடவை தாக்கி எழுதாவிட்டால் ஒரு சில ‘ஞானமற்றவர்களுக்கு ‘ பிழைப்பே கிடையாது போல! ஜெயலலிதா அரசின் ஏதாவது ஒரு முடிவு பிடிக்கவில்லையா…உடனே ஜெ.வின் ‘பார்ப்பனிய ‘ தன்மையை சாடு! சங்கராச்சாரியார் கைதா…அதற்கும் பார்ப்பனியத்தை தான் தாக்க வேண்டும். அப்போது கைதை தைரியமாக நடத்திய தைரியலட்சுமியின் ‘பார்ப்பனிய ‘ பின்புலத்தை வசதியாக மறைத்து விடுவார்கள். அட…ஈ.வெ.ராமசாமியின் பிறந்த, இறந்த நாள்களுக்கு கட்டுரை எழுத வேண்டுமா ? உடனடியாக அவரது சாதனைகள் எதுவும் இருந்தால் அதை கூறுவதை விட்டு விட்டு, பார்ப்பனியத்தை தாக்குவது தான் முழுமுதல் கடனாக செய்து வருகிறார்கள்.
எல்லாவற்றிலும் ‘உள்நோக்கம் ‘ என்று இல்லாத ஒன்றை தானாகவே எழுதி வரும் இவர்களது இந்த மாதிரியான தாக்குதலுக்கு உண்மையான உள்நோக்கம் என்ன தெரியுமா ? ‘இயலாமை ‘ தான்! வெகுஜனப்பத்திரிகைகள் என பலவற்றிலும் புகுந்து பார்த்தாகிவிட்டது. ஆனாலும் எதுவுமே கை கொடுக்கவில்லை. வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த ஒரு வாரப் பத்திரிகையை ஒரே வருடத்தில் மூடு விழா நடத்தி தலை தெறிக்க ஓடி வந்தாகி விட்டது. அதற்குப் பிறகும் எந்தப் பத்திரிகை தான் தைரியமாக இவரை வைத்து பத்திரிகை நடத்த முன் வருவார்கள் ? இந்த இயலாமை எல்லாம் சேர்ந்து தான் வெறியாக மாறி ஒட்டு மொத்தமாக சீற வைக்கிறது. இப்படி எழுத ஆரம்பித்து, அது தொடர்ந்து இப்போதோ கண்ணில் படுகிற காட்சிகளனைத்தும் கெட்டதாகவே படுகிறது. தனது பார்வையில் குறையை வைத்துக் கொண்டு காட்சியில் பிழை காணுகிற இந்த மாதிரியான நபர்களிமிருந்து ஏக்கங்களையும், வசவுகளையும், பொருமல்களையும் தவிர வேறு எதையும் தமிழ் இலக்கியம் எதிர் பார்க்க முடியாது என்பது மட்டும் உண்மை!
– மாயவரத்தான் (info@mayiladuthurai.net
மாயவரத்தான் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் !
மாயவரத்தான் என்ற பெயரில் ஒளிந்துகொண்டிருக்கிற ஒரு வரின் பொய்கலைப் பிரசுரித்து என்னை அவதூறு செய்திருப்பதற்காக அவர் மீதும் திண்ணை,காம் இதழ் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் இழப்பீடு கோரவும் போதுமான நியாயங்கள் எனக்கு உள்ளன.
பார்ப்பனீயம் பற்றிய என் பார்வையிலிருந்து முரண்பட எல்லா உரிமையும் மாயவரத்தானுக்கு உண்டு. ஆனால் என் கருத்துக்களை மறுக்க இயலாத நிலையில், அதிரடியாக அவதூறுகளை வீசி தப்பிக்க முயற்சிப்பதும் பார்ப்பனீய உத்திகளில் ஒன்றுதான்.
எனக்கு உள் நோக்கம் கற்பித்து, என் இயலாமை என்று மாயவரத்தான் பிதற்ரியிருப்பது அத்தனையும் துளியும் உண்மை கலவாத அவதூறுகள். வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்த ஒரு வாரப் பத்திரிகைக்கு ஒரே வருடத்தில் நான் மூடுவிழா நடத்தியதாக உளறியிருக்கிறார்.
நான் பொறுப்பேற்ற ஒரே வார இதழ் ஜூனியர் போஸ்ட். அதன் ஆசிரியர் திரு பாலசுப்பிரமணியன் 1992ல் என்னை பொறுப்பேற்க அழைத்த போது அந்த இதழ் சுமார் 30 ஆயிரம் பிரதிகள் விற்றுக் கொண்டிருந்தது. நான் பொறுப்பேற்று அதன் உள்ளடக்கத்தை முற்றிலும் மாற்றி, விற்பனையை ஓராண்டுக்குள் 80 ஆயிரம் பிரதிகளாக்கினேன். அதன் பிறகு தொலைக்காட்சியில் சிறுவர் தொடர் தயாரிக்கச் சென்றேன்.நான் விடைபெற்ற பிறகு ஜூனியர் போஸ்ட்டுக்கு நான் அளித்த கேரக்டரிலிருந்து மாற்றி மேலும் ஓராண்டுக்கு மேல் அதை நடத்தினார்கள். விற்பனை பழையபடி 30 ஆயிரத்தை அடைந்ததும் அது மூடப்பட்டது. ஏழாண்டுகள் கழித்து அதே நிறுவனம் என்னை அழைத்து சிறுவர்களுக்கான இதழை உருவாக்கும் பொறுப்பை அளித்தது. அந்தத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, விகடனுக்காக கார்கில் யுத்தம் பற்றி நேரில் கண்டு எழுதவும் என்னை அனுப்பி வைத்தது. சுட்டி விகடனின் பொறுப்பாசிரியராக அதை நான் வடிவமைத்தபோது, தமிழில் ஒரு சிறுவர் இதழும் 20 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்கும் நிலை இல்லை. முதன்முறையாக 40 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்கும் நிலையை நான் சுட்டி விகடன் வாயிலாக ஏற்படுத்தினேன். இதழின் சார்பில் ஓவியப்பயிற்சி முகாம்கள் நடத்தி இதழை சிறுவர்களிடையே மேலும் பிரபலமாக்கினோம். உடல் நிலை நலிவு காரனமாக ஓராண்டு இறுதியில் நான் விலகியபோது இதழின் விற்பனை ஏறுமுகத்தில் இருந்தது. என் வழிகாட்டுதலில் உருவான ஆசிரியர் குழு தொடர்ந்து அங்கு இயங்குகிறது. இதழ் விற்பனை அடுத்த நான்காண்டுகளில் லட்சத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. என் முழுப் பொறுப்பில் இருந்த எந்த இதழும் விற்பனை குறைந்து மூடப்பட்ட சரித்திரமே என் 30 ஆண்டு பத்திர்கை வாழ்க்கையில் இல்லை. ஒவ்வொரு இதழும் என் பொறுப்பில் வரும்போது முன்பிருந்ததை விட அதிக விற்பனையையும், தரம் பற்ரிய மரியாதையையும் கூடுதலாக அடைந்தன என்பது வரலாறு. நானே நடத்திய தீம்தரிகிட இதழ் இரு முறை நிறுத்தப்பட்டதற்கும் காரணம் சுழற்சி மூலதனம் இல்லாமையே தவிர , விற்பனை இன்மை அல்ல. வெகுஜன இதழ்களில் முழுச் சுதந்திரத்துடன் எழுத இயலாத மீடியா சூழ் நிலை பி.ஜே.பி ஆட்சியைப் பிடித்த பிறகு ஏற்பட்ட நிலையிலேயே மறுபடியும் தீம்தரிகிட என்னால் தொடங்கப்பட்டு, தொடர்ந்து 29 இதழ்கள் கடந்த மூன்றாண்டுகளில் வெளிவந்துள்ளன. இதே சமயம் வெகுஜன இதழான இந்தியா டுடே கேட்டதன் பேரில் அதில் தொடர்ந்து தனிப்பத்தி இரண்டாண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன். ஜூனியர் விகடன் கேட்டதன் பேரில் அவ்வபோது அதிலும் கட்டுரைகள் எழுதி வருகிறேன். அண்மையில் கூட கும்பகோணம் கொடுமை, ஊழலின் வேர் ஆகிய பிரச்சினைகள் குறித்து அதில் தொடர்கள் எழுதினேன்.
இயலாமை எனக்கு இல்லை. மாயவரத்தானுக்கே உள்ளது. என் கருத்துக்களுக்கு கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமை. அதை மறைக்கவே இந்த அவதூறுப் பிரசாரம்.
முற்றிலும் உண்மைக்கு புரம்பாக அவதூறு செய்திருக்கும் மாயவரத்தானும் அதை வெளியிட்ட திண்ணையும் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பை பகிரங்கமாகக் கோரவேண்டும். தவறினால் இந்தியாவின் சைபர் சட்டத்தின் கீழும் அவதூறு தடைச் சட்டத்தின் கீழும் சட்டப்படியான நடவடிக்கைகளை நான் மேற்கொள்லவேண்டி வரும்.
ஞாநி
31-12- 2004
- கடிதம் ஜனவரி 6,2005
- ஒரு கவிதை
- நிலாவிற்கு
- கடிதம் ஜனவரி 6, 2005
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- உயிர்மை அரங்கில் சந்திப்பு
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்
- கடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்
- தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)
- ஆய்வு க்கூடத்தின் இழுப்பறைகள்
- கவிதை
- இஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்
- tsunami aid
- விளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- பிதாவே..எங்களை மன்னியும்!
- உலகமே
- கிழித்து வந்த காலமே!
- சுனாமி என்றொரு பினாமி.
- ‘சுனாமி ‘
- கதவைத் தட்டிய கடலலைகள்
- கவிக்கட்டு — 43
- ‘விளக்கு விருது ‘ விழா
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை
- விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்
- ஊழி
- அலைப் போர்
- கலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா ?
- வன்முறை : பாலுறவு : தணிக்கை
- சுனாமி உதவி
- உதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு
- சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்
- ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
- பேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்
- மறுபிறவி
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53
- நிழல் அழைத்துச்சென்ற இடங்கள்
- கடலுக்கு மடல்
- பெரியபுராணம் – 25
- உயர்பாவை 3
- ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்
- சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி
- முட்டாள்களின் பெட்டகம்
- கோடெலும் ஐன்ஸ்டைனும்
- மஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.
- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்
- பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்!
- சுனாமி வேட்கை
- அறிய கவிதைகள்
- கிழித்து வந்த காலமே!
- என் வேள்வி
- அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு