கடிதம் டிசம்பர் 23,2004

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

ஹிந்து தர்மத்தின் மீதோ அல்லது ஹிந்து சமுதாயத்தின் மீதோ எவ்வித மதிப்பும் அன்பும் மார்க்ஸிஸ்ட்களுக்கு இருக்க முடியாது என்பதுடன் இயல்பாகவே இனவாதத்துடன் கைகோர்க்கும் இயல்பு மார்க்ஸிஸ்ட்களுக்கு உண்டு என்பதற்கான நல்ல நிரூபணம் சோதிப்பிரகாசத்தின் கட்டுரை. எப்படியெல்லாம் ஹிந்து சமுதாயத்தை பிளவு படுத்தமுடியும் என செயல்படுவதில் அண்மைக்காலமாக மிஷிநரிகளுக்கு இணையான வக்கிரத்துடன் மார்க்ஸிஸ்ட்கள் செயல்படுகின்றனர். இது அவர்களது இயல்பான வளர்ச்சிதான். திரு சோதி பிரகாசம் ஒன்றை ஞாபகப்படுத்தலாம். ஆரியப் படையெடுப்பினை பாரத தேசியவாதிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். தமிழை தாழ்வாகவோ அல்லது சமஸ்கிருதத்தை உயர்த்தியோ அவர்கள் பேசவில்லை. சமஸ்கிருதம் பாரதத்தின் இயல்பான தேசிய மொழியாக அமையவேண்டுமென பாரத தேசியவாதிகளுள் தீவிரமாக முயன்றவர் டாக்டர்.அம்பேத்கர். துரதிர்ஷ்டவசமாக சோதி பிரகாசம் போன்றவர்களுக்கு இருத்துவமாகவே (Binary) அனைத்தையும் பார்த்து பழக்கம். இதில் இந்து-ஹிந்து எனும் பிளவு இப்பார்வையின் உச்சகட்டம். விரைவில் மார்க்ஸியத்திற்கும் மார்க்சியத்திற்குமான சித்தாந்த வேறுபாடுகளையும் அவர் முன் வைக்கலாம்.

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்.

hindoo_humanist@lycos.com

Series Navigation

author

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

Similar Posts