கடிதம் நவம்பர் 18,2004

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

ஏகலைவன்


அன்புள்ள ஆசிரியருக்கு,

சோதிப் பிரகாசம், விஷ்ணுபுரம் நாவலில் ஜெயமோகன் இந்துத்துவத்தை கேலி செய்துள்ளதாக எழுதியுள்ளார். அந்நாவலை இந்துத்துவப் பிரதி என விமர்சித்தவர்கள் எல்லாம் சோதிப்பிரகாசம் அளவுக்கு அறிஞர்கள் அல்லர். மார்க்சிய அறிஞரான சோதிப்பிரகாசம் விஷ்ணுபுரம் நாவல் தொடர்பாக தன் ஆய்வை திண்ணையில் எழுதலாமே ? நானும் தான் மார்க்சிய நூல்கள் படித்துள்ளேன். விஷ்ணுபுரம் நாவல் இந்துத்துவம் மீதான விமர்சனமாக எனக்குப் படவில்லையே ? மார்க்சியப் பேரறிஞர் சோதிப்பிரகாசம் அவர்களிடம் நானும் மார்க்சிய இயங்கியல் கல்வி படிக்க விரும்புகிறேன். எனக்கு கற்றுத் தருவாரா ? அ. மார்க்ஸ், இந்துத்துவத்துடன் சமரசம் செந்த இலக்கியவாதிகள் பட்டியலில் சோதிப்பிரகாசத்தையும் சேர்த்துவிடப் போகிறார். சோதிப் பிரகாசம், தோப்பில் முஹமது மீரானின் கதைகளைப் படித்ததில்லையா ? அவைகளில் பல சிறுகதைகள், நாவல்கள் முஸ்லிம்களிடம் நிலவும் மூட நம்பிக்கைகளை விமர்சித்து எழுதப் பட்டவை தானே ?

அரவிந்தன் நீலகண்டன் ஹாருண் யஹ்யாவின் பரினாம வளர்ச்சி தொடர்பான கட்டுரையை விமர்சித்து எழுதியுள்ளார். அவர் இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி, ஹாருண் யஹ்யாவின் இணையத் தளத்திற்கு அனுப்ப வேண்டும். ஹாருண் யஹ்யா பதில் அனுப்பினால், அதனை திண்ணையில் ஆங்கிலத்திலேயே வெளியிடலாம்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியை ஆதரித்து, இந்து முண்ணணி, ஆர் எஸ் எஸ் காரர்கள் நீதிமன்ற வளாகத்தில் அரசு வழக்கறிஞர்களையும், காவல்துறை அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். இவர்களை தமிழ் நாடு அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆர். எஸ். எஸ், இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி, தமிழ் நாடு சிவசேனா ஆகிய அமைப்புகளை தமிழ் நாடு முதல் அமைச்சர் தடைசெய்ய வேண்டும்.

அன்புடன்

ஏகலைவன்

—-

egalaivan@netscape.net

Series Navigation

author

ஏகலைவன்

ஏகலைவன்

Similar Posts