கடிதம் அக்டோபர் 14,2004

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

அ.முஹம்மது இஸ்மாயில்.


சில விளக்கங்கள்

அனைவருக்கும் என் ஸலாம்

திண்ணையில் வெளியான ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது.. அதில் இஸ்லாம் பற்றி சில தவறான கருத்துக்கள் முக்கியமாக பெண்களுக்கு எதிராக இஸ்லாம் திட்டமிட்டு வேலை செய்வது போல் சிலர் திட்டமிட்டு கூறுவதில் ஆனந்தப் படுகிறார்கள்.

உண்மை வேறு ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த அர்த்தமற்ற ஆனந்தத்தை(!) அறுத்து எறிவது என் போன்றவர்களின் கடமையாகி போய் விடுகிறது.

சஹாபாக்கள் அதாவது நபித் தோழர்கள் எல்லாம் நாயகம் அவர்களின் சொல்லை கேட்ட பிறகு வேறு எதுவும் காதில் விழுந்து விடக் கூடாது என்பதற்காக காதில் பஞ்சு வைத்து கொண்டு செல்வார்களாம்.

அது போல் நாமும் சென்றிருக்கலாம்.. சில நல்ல மனங்கள் உள்ளன.. அந்த மனங்கள் இஸ்லாத்தை பற்றி தவறாக எண்ணி விடக் கூடும். அவர்களுக்காக நான் எழுதுகிறேன்..

‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் ‘ என்று பாடினான் பாரதி. அந்த பாரதி இன்று இருந்திருந்தால் ‘மாதர்கள் தம்மை தாமே இழிவு படுத்திக் கொண்டால் மாதரையே கொளுத்துவோம் ‘ என்று பாடினாலும் பாடியிருப்பான். அவன் கோபக்காரனாச்சே..

அப்படி தான் திருமறை குரான் வசனத்தை தன் உடலில் எழுதி தம்மை தாமே இழிவு படுத்திக் கொண்டார்கள் அந்த பெண்கள்.

அன்றைய அரேபியாவில் பெண் குழந்தைகளை குழி தோண்டி உயிரோடு புதைக்கும் வழக்கமிருந்தது.

இன்று கூட வயிற்றில் இருக்கும் சிசுவை Scanning செய்து பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வயிற்றில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கல்லிப்பால் கொலைகள் நடந்து விடும்.

ஆனால் திருமறை குரான் அன்றே இத்தகைய கொடுமையை கண்டித்து விட்டது

திருமறை வசனம் 16:59ல்

“(பெண்குழந்தை பிறந்ததென்று) கூறப்பட்ட இந்த கெட்ட நன்மாராயத்தைப் பற்றி (வெறுப்படைந்து) இழிவுடன் அதை வைத்திருப்பதா ? அல்லது (உயிருடன்) மண்ணில் புதைத்து விடுவதா என்று (கவலைப்பட்டு) மக்கள் முன் வராது மறைந்து கொண்டு அலைகிறான். அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டதல்லவா ?”- என்று இறைவன் கூறுகிறான்.

ஒரு மனைவியை கணவன் எப்படி வேணும்னாலும் அடைந்து கொள்ளலாம் என்று திருமறை வசனம் வருவது உண்மை தான்.. ஏன்.. ? வானொலியில நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள்.. விளம்பரம் கேட்டதில்லை.. ?!

அது எதுக்கு அந்த விளம்பரம்.. ? இன்னும் சொல்லப் போனால் மனைவியை அடைவதற்கு கூட அல்ல..

விலை மாதுவிடம் போகும் போது எய்ட்ஸ் என்ற கொடிய வியாதி வந்து விடப் போகிறது என்பதற்காக.. இதில் இருக்கிறது கேவலம்.. இதில் உள்ளது பெண்களுக்கு அவமானம்.

இஸ்லாம் குழப்பமே இல்லாமல் தெளிவாக சொல்லி விடுகிறது, ‘விபச்சாரம் செய்யும் ஆண் பெண் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடிகளை அடியுங்கள் ‘ என்று 24வது அத்தியாயம் 2வது வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேற்கூறப்பட்ட வசனம் திருமணமாகாதவர்களுக்குத் தான். அதே விபச்சாரத்தை திருமணம் ஆனவர்கள் செய்தால் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.

இந்த சட்டம் படிப்பதற்கு கொஞ்சம் கடினமானதாக இருக்கலாம். ஆனால் நினைத்து பாருங்கள் ஒரு திருமணம் ஆன பெண்ணோ ஆணோ உதாரணமாக பெண்ணை எடுத்துக் கொள்வோம் அவள் தன் கணவனுக்கு துரோகம் செய்து யாருக்கோ ஒரு கருவை சுமந்து அதை தன் கணவனுக்கு வாரிசாக்கினாள் என்று வையுங்கள் அது சமுதாயத்திற்கே கேடல்லவா ? பெண்ணினத்திற்கே இழிவல்லவா ?

அது போல் தான் ஆணும்.. தன்னுடைய பிள்ளையை யாரோ ஒருவனுக்கு வாரிசாக்கலாமா ? அப்படி ஒரு கேடு கெட்ட சமுதாயத்தை உருவாக்க இறைவனுக்கு விருப்பமில்லை.

கணவனுக்கு மனைவியின் மீது இருக்கும் உரிமை மனைவிக்கு கணவன் மீதும் உண்டு..

தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.

பெண்ணை மேன்மை படுத்த வேண்டிய அளவிற்கு மேன்மை படுத்தித் தான் உள்ளது.

நீங்கள் குற்றம் சொல்வதாக இருந்தால் முஸ்லீம்களை குற்றம் சொல்லுங்கள் உங்கள் மதம் கூறுகிறபடி மஹர் கொடுத்தீர்களா ? என்று கேளுங்கள். ஏண்டா உன் மனைவியிடமிருந்து வரதட்சணை வாங்கினாய் ? என்று நாக்கை பிடுங்குவது போல் கேளுங்கள்.

அதை விட்டு விட்டு இஸ்லாத்தின் மீது குற்றம் சொல்வது நியாயமல்ல..

இன்னும் கூட சொல்லலாம் இஸ்லாமிய சட்டத்தை பற்றி..

ஒரு ஆண் ஒரு பெண்ணை மணந்து கொள்ள விரும்பினால் முதலில் அந்த பெண்ணின் சம்மதத்தை பெற வேண்டும்.

இரண்டாவது அந்த ஆண் பெண்ணுக்கு மஹர்(மணக் கொடை) கொடுக்க வேண்டும். அந்த மணக்கொடையும் பெண் தான் நிர்ணயிக்க வேண்டும்.

அந்த மஹர் பணத்தை அந்த பெண் தான் நிர்வகிக்க வேண்டும். அந்த பெண் சம்மதமில்லாமல் ஒரு சல்லி காசு கூட அந்த கணவனுக்கு உரிமையில்லை.

திருமறை வசனம் கூட இப்படி வருகிறது..

“மனைவிக்கு பொற்குவியலையே கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் திரும்ப பெறாதீர்கள்” என்று-

பெண்ணுக்கு கொடுத்த மஹரை திரும்ப வாங்க கூடாது என்பது மட்டுமல்ல பெண்ணுக்கு பொற்குவியலையே கூட கொடுக்கலாம் அதற்கு தகுதியானவள் தான் அந்த பெண் என்றும் இந்த வசனம் உணர்த்துகிறது.

மஹர் கொடுக்கும் விஷயத்தில் பெண்கள் மஹரை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று விவாதம் நடக்கும் அளவிற்கு அதாவது பெண்களிடம் ஆண்கள் ஒரு வகையில் கெஞ்சும் அளவிற்கு சம்பவங்கள் எல்லாம் இஸ்லாமிய சரித்திரத்தில் நடந்தது உண்டு.

பெண்ணை இஸ்லாம் அடிமைப் படுத்த வில்லை. உண்மையில் அடிமை விலங்கை உடைத்திருக்கிறது.

இவை எல்லாம் புரியவில்லை என்றால் வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கணும். டூல்லைன்னா

இந்த கடிதம் முந்தைய கட்டுரை எழுதியவருக்கு மறுப்பு கடிதம் அல்ல அந்த கட்டுரையை படித்து விட்டு தவறாக புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு விளக்க கடிதம் மட்டுமே.

துவா

ஸலாமுடன்

அ.முஹம்மது இஸ்மாயில்.

Series Navigation

author

அ.முஹம்மது இஸ்மாயில்

அ.முஹம்மது இஸ்மாயில்

Similar Posts