கடிதம்- அக்டோபர் 7,2004

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

ஹமீத் ஜாஃபர்


திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,

Submission ஐ திண்ணையில் வெளியிட்டமைக்கு ஆசாரகீனன் அவர்களுக்கு நன்றி.

காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இஸ்லாத்தின் மீது சேற்றை வாரிப்பூசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். இது இன்று நேற்றல்ல பல் நூறு ஆண்டுகாலமாகவே நடந்துகொண்டு வருகிறது. ஏன்! முஹம்மது நபி காலத்திலேயே தொடங்கப்பட்ட ஒன்றுதான் இது. ஆனால் சேற்றை வாரிப்பூசுகிறேன் என்று சொல்லிக்கொண்டு தன் மீதே பூசிக்கொள்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. யார் எது செய்தாலும் பாதிப்பு எதுவுமின்றி ஆலமரம்போல் விரிந்து வளர்ந்துக்கொண்டிருக்கிறது.

இஸ்லாம் என்பது மதமல்ல, அது ஒரு மார்க்கம்! மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழி காட்டிக்கொண்டிருக்கிறது. அது மார்க்கமாக இருப்பதினால்தான் பாலைவனம் நிறைந்த அரபியாவில் அறிவுள்ள காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த சமுதாயத்தை தனி ஒரு மனிதராக இருந்து எவருடைய துணையுமில்லாமல் மாற்றியமைத்து வரலாறு படைத்ததினால்தான் இன்னும் அது தனக்குத்தானாக வளர்ந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தூரதிர்ஷ்டம் சில் அடிப்படைவாதிகளிடம் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது.

எப்படியும் வாழலாம் என்பது ஒரு வழி, இப்படித்தான் வாழவேண்டும் என்பது மற்றொரு வழி. இந்த இரண்டாவது வழிக்கு சட்ட நெறிமுறைகளை வகுத்துக்கொடுத்ததோடல்லாமல் எளிமைப்படுத்தி தன்ந்திருக்கிறது குர்ஆனும், நபிகளின் வாக்கும். இதனை புரிந்துக்கொள்ள முடியாதவர்களை நினைத்து வேதனைப் படுவதைத் தவிர வேறு வழி இல்லை.

நெருப்பு துண்டு ஒன்று ஒரு குழந்தைக்கு கிடைத்தால், மினுமினுக்கும் விளையாட்டுப் பொருள் என்று நினைத்து அதை எடுத்து வாயிலிட முயற்சிக்கும்; ஒரு குடும்பப் பெண்ணிற்கு கிடைத்தால், அதை அடுப்பு பற்றவைக்கப் பயன்படுத்திக்கொள்வாள்; கொல்லனுக்குக் கிடைத்தால், அதை இரும்பை உருக்கும் உளைக்குப் பயன்படுத்திக்கொள்வான்; மஜுஸி(நெருப்பை வணங்குபவர்)க்குக் கிடைத்தால், கும்மிடுவதற்கு தெய்வமாகப் பயன்படுத்திக்கொல்வான்; சமூக விரோதியின் கையில் கிடைத்தால் ஊரை கொளுத்தப் பயன்படுத்துவான். நெருப்பு ஒன்றுதான், ஆனால் அது அடையும் இடத்தை அல்லது உபயோகிப்பவரின் தன்மையைப் பொருத்திருக்கிறது அதன் பயன்.

‘உங்கள் மனைவிகள், உங்களுக்குரியப் பண்ணை(tilth), ஆகவே உங்கள் பண்ணைக்கு நிங்கள் விரும்பியவாறு சென்று உங்களுக்கு(வேண்டிய சந்ததியையும் நன்மைகளையும் தேடி) முற்படுத்திக்கொள்ளுங்கள் ‘ – (அல் குர்ஆன் 2: 223) என்ற பொருள்படும் வசனத்தைத் (அவள் முதுகில் எழுதப்பட்டுள்ள வசனம்) தவறாகப் புரிந்துக்கொண்டால், அது குர் ஆனின் குற்றமல்ல. யாருக்கு எந்த அறிவு இருக்கிறதோ அந்த அறிவுடன் அனுகினால் அந்த அறிவுக்குரிய பொருள் கிடைக்கும். இது குர்ஆனின் சிறப்பு, இதில் அறிவுள்ளவர்களுக்கு அத்தாட்சிகள் நிறைய இருக்கின்றன என்று பல இடங்களில் குறிப்பிடுகிறது.

சூரியன் வெளிச்சத்தைமட்டுமல்ல அனைத்து உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய சக்தியை குறைவில்லாமல் வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது. அப்படித்தான் இஸ்லாமும்.

நன்றி,

இவண்,

Hameed Jaffer,

Dubai.

—-

maricar@emirates.net.ae

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

author

ஹமீத் ஜாஃபர்

ஹமீத் ஜாஃபர்

Similar Posts