கடிதம் செப்டம்பர் 16,2004

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

பா. சத்தியமோகன்.


இனிய ஜெயமோகனுக்கு

என் உள்ளார்ந்த தவிப்போடும் பயத்தோடும் தொடங்கப்பட்ட பெரியபுராணத்

தொடருக்கு மிகவும் நியாயமான ஒரு காரணத்தை பக்தியன்றி வேறொன்றை

என்னால் சுட்டமுடியவில்லை. நெஞ்சைப் பிசையும் நாயன்மார்களின் வாழ்வை

தாக்கத்தோடு கவிநயத்தில் பின்னிப்பிணைந்த தெய்வக்கவி சேக்கிழாரின்

தமிழே தாரசக்தித் தூண்டுதலாக எண்ணுகிறேன்.

நான் எடுத்துக் கொண்ட இந்நெடிய பயணத்திற்கு தரவு தெரிவித்த தமிழின்

மிகப்பெரிய ளுமையான ஜெயமோகனுக்கு என் நெகிழ்வான நன்றி.

சற்று முன் நான் கண்ட ஜெயமோகனின் வாழ்த்துக் கடிதம் என் கூடவே நடந்து வந்து

என் தோளில் தட்டி பாராட்டி என் நெஞ்சில் முத்தமிட்டது.

அவரது அன்புத் தமிழ் நெஞ்சத்தை வெளிப்படுத்தியது. எனது பணிக்கு

அங்கீகாரமும் பயனும் வாழ்த்தும் தந்து என்னை ஊக்கப்படுத்திய அவரது கடிதம்

எனக்கு தெம்பு தந்துள்ளது.

பெரியபுராணத்திற்கு இது எழுத்துபூர்வமான முதல் வரவேற்பு.

மீண்டும் நன்றி. மிக்க நெகிழ்வுடன்,

பா. சத்தியமோகன்.

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

author

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்

Similar Posts