கடிதம் செப்டம்பர் 2, 2004

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

தம்மாம் பைசல்


சாவர்க்கரின் சாயம் வெளுத்தது

ஆகஸ்டு 10 (2003) குடியரசு தலைவர் மாளிகையின் தோட்டம் பரபரப்பாக இருந்தது. இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய மாவீரர்களை அழைத்து விருந்தளித்து அவர்களை கெளரவப் படுத்தினார் குடியரசுத் தலைவர்.

கோல்கத்தாவிலிருந்து தினேஸ்தாஸ் குப்தா என்ற 92 வயது சுதந்திரப் போராட்ட வீரர் வந்திருந்தார். இவர் அந்தமான் சிறையில் 1933 முதல் 1938 வரை 5 ஆண்டுகள் சித்ரவதைப்பட்டவர். இவர் ஆங்கிலேயரின் சிட்டகாங்க் ஆயிதக்கிடங்கைக் கைப்பற்றிய குழுவில் இடம் பெற்றவர்.

இவர் சமீபத்தில் அந்தமான் சென்றிருந்தார். அங்கு போர்ட் பிளேரில் தியாகிகள் பூங்காவைப் பார்வையிட்ட அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அங்கு வைக்கப்பட்டிருந்த தியாகிகள் சிலைகளோடு சாவர்க்கரின் சிலையும் வைக்கப்பட்டிருந்ததுதான் அவரது அதிர்ச்சிக்குக் காரணம்.

“அங்கிருந்த 8 சிலைகளுக்குச் சொந்தக்காரர்களும் மிருகத்தனமான சித்திரவதைகளை அனுபவித்தனர். அவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தனர். ஆங்கிலேயரிடம் அவர்கள் உயிர்ப்பிச்சைக் கேட்கவில்லை. மாறாக சாவைச் சலனமின்றி ஏற்றுக் கொண்டனர். ஆனால் சாவர்க்கரோ ஆங்கிலேயர்களுக்கு உதவுவதாக கbதம் எழுதிக் கொடுத்தார். அதனால் அவரை விடுதலை செய்தனர்” என்று கூறிய தினேஷ்தாஸ் குப்தா “அந்த தியாகச் சீலர்களோடு சாவர்க்கரின் சிலையை வைத்தது அவர்களையும் அவர்களது தியாகத்தையும் அவமதித்ததாகும்.” என்று காட்டமாக கூறினார்.

“நானும் சாவர்க்கரும் ஒன்றாகத்தான் சிறையில் அடைபட்டோம். நானும் விடுதலை செய்யப்பட்டேன். சாவர்க்கரும் விடுதலை செய்யப்பட்டார். இப்படியிருக்க சாவர்க்கர் எப்படி தியாகியாவார் ?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த (2003) பிப்ரவரி மாதம் பாசிச பா.ஜ.க அரசு சாவர்க்கரின் உருவப் படத்தை பாராளுமன்றத்தில் வைத்தது. இந்த சிலையை வைத்ததற்கு ஒரு வகையில் உதவியாக இருந்த குடியரசு தலைவர் மேல் தினேஷ்தாஸ் குப்தாவுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் அந்தமான் சென்றிருந்த பொழுது தியாகிகள் சிலைகளோடு சாவர்க்கரின் சிலையையும் பார்த்த பிறகுதான் குப்தாவுக்கு பொறுக்க முடியவில்லை. உடனே இதற்கு தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். அப்பொழுதுதான் குடியரசு தலைவரிடம் இருந்து விருந்துக்கான அழைப்பு வந்தது. விருந்துக்கு வந்த குப்தா குடியரசு தலைவரிடம் தனது மனக்குமுறல்களைக் கொட்டி தீர்த்தார்.

“என்னால் இதற்கெதிராக ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் என்னிடம் அதிகாரம் ஒன்றும் இல்லை. என்னால் முடிந்ததெல்லாம் குடியரசு தலைவரிடம் தெரிவிப்பதுதான். அதனை நான் செய்து விட்டேன்” என்று விரக்தியோடு கூறுகிறார் குப்தா.

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரின் விமான நிலையத்திற்கு சாவர்க்கரின் பெயரைச் சூட்டியதையும் கவலையோடு குறிப்பிடும் இவர் “இப்படி செய்தால் பின்னால் வரும் தலைமுறையினருக்கு உண்மையில் என்ன நடந்தது என்று எப்படி தெரியும்” என்று அப்பாவித் தனமாக கேட்கிறார்.

(செய்தி ஆதாரம் : தி ஹிந்து 11-08-2003)

நீலகண்டன் சார்…. இது மட்டும் போதுமா ? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா….

—-

தம்மாம் பைசல்

faiseldmm@hotmail.com

Series Navigation

author

தம்மாம் பைசல்

தம்மாம் பைசல்

Similar Posts