கடிதம் செப்டம்பர் 2, 2004

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

பிறைநதிபுரத்தான்


திண்ணை வாசகர்களுக்கு,

தாங்கள் சொல்வது மட்டும்தான் உண்மை, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகந்தையில் எழுதும் காவி கோமாளிகளுக்கு பதிலடி கொடுப்பதில் எவ்வளவு நேரத்தை வீணடித்தாலும் – அதிலே ஒரு அலாதியான இன்பம் என்பதால் தான் நான் தொடர்ந்து எழுதுகிறேன்.

பகுத்தறிவை உபயோகித்து வாழ் என்று சொன்ன பெரியாரைப்பற்றி திண்ணையில் மட்ட மலின பிரச்சாரம் நடத்தியவர் கூறுகிறார் ‘உன் அறிவால் தேர்ந்தெடுத்து நீ நன்றாக வாழ்வாயாக ‘ என்பதுதான் சுதந்திர ஹிந்து மதத்தின் ஆனி வேர் என்று.

‘உன்னை படைத்து, காத்து பரிபாலிக்கும் எனக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் ‘ என்ற இஸ்லாமிய இறைவேதம் இரனியக்குரலாக தெரிகிற மேதாவிக்கு, ‘நான் மட்டும்தான் தலையிலிருந்து படைக்கப்பட்டேன் அதனால் மற்ற பாகங்களிலிருந்து படைக்கப்பட்ட நீங்கலெல்லாம் எனக்கும் என் சாதிக்கும் அடிமையாகி சேவகம் செய்ய வேண்டும் ‘ என்கிற குரலுக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று சொல்லவேண்டும் ?

மலமும் மூத்திரமும் சுமக்கிறவர்களை, மனிதனுக்கே உரிய பசி, தாகம், உறக்கம், இறப்பு உள்ளவர்களை ‘நடமாடும் தெய்வங்களாக ‘ அழைக்கும் முன் எத்தனை அறிவியல் சோதனைகள் நடத்தப்பட்டன என்பதை இயன்றால் கூறலாம் ?

இறைநூலோடு – ஆரிய நூல்களை ஒப்பிடவேண்டும் என்று வாய்ச்சவடால் பேசுபவர்க்கே நன்றாக தெரியும், தான் சார்ந்தது ‘இனிமேல் தேறவே தேறாது ‘ என்று.

மாடனையும், முனீஸ்வரனையும் கோவிலுக்கு வெளியே, வெயிலிலும் – மழையிலும் நிற்க விட்டு காவல் தெய்வங்களாக்கி – கருவறையில் வசதியாக அமர்ந்துக் கொண்டு பாலிலும் – தேனிலும் குளிக்கும் ஆரிய தெய்வங்களின் ஆதிக்கம்தான் தொடர்கிறது என்ற உண்மையை அறியாதது போல் நடிக்கலாம்.

பல வேத மந்திரங்கள் பார்ப்பனரல்லாதவரால் கொடுக்கப்பட்டிருக்கலாம் – மறுக்கவில்லை. ஆனால், அவைகள் நடைமுறை என்ன ?

எண்ணிக்கை குறையாமல் போதும் என்று ஆளுக்கும் நேரத்திற்கும் தகுந்தாற்போல் வளைந்து – பணிந்து- கூட்டி- குறைத்து – முரன்பாடுகள் அனைத்தையும் பூசி மொழுகி ‘எது எடுத்தாலும் பத்து ரூபாய்தான் ‘ என்று சாலையோரங்களில் கூவி விற்பதைப்போல ‘எல்லாமே இஸ்லாம் தான் ‘ என்று கூறி எண்ணிக்கையை அதிகரிக்கும் மத வியாபாரத்தனம் இஸ்லாத்தில் இல்லை.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தை இராம ஜென்ம பூமி என்று அழைத்து – பாப்ரி மஸ்ஜிதுக்கு அடியில் அன்னை சீதா பிராட்டியார் பயன்படுத்திய ‘குசினி ‘ இருந்ததாக பேசிய கும்பலை சேர்ந்த இவர் – இராமர் எங்கு பிறந்தார் என்பதல்ல கேள்வி என்று அதிசயக்கும் வண்ணம் அந்தர் பல்டி அடிக்கிறார்! உண்மையிலேயே, பாப்ரி மஸ்ஜித் – கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக இருந்திருந்தால் – சமாதான பேச்சு – அமைதியான தீர்வு என்று அனுப்பிக்கொண்டிருப்பார்களா சங் பரிவாரத்தினர். ? சென்னை தியாகராய நகரில், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் எவ்வாறு ‘திடார் பிள்ளையார் ‘ வந்ததோ அதே போலத்தான், பாப்ரி மஸ்ஜிதுக்குள் ‘ராமர் சிலை ‘ நுழைக்கப்பட்டது. உண்மை தெரிந்ததும் பிள்லையார் சிலையை தூக்கிக்கொண்டு எவ்வாறு ஓடினார்களோ அதே போல பாப்ரி மஸ்ஜிதிலிருந்து ஓடும் காலம் விரைவில் வரும்.

பாபா சாஹேப் அம்பேத்கார் எழுதிய ‘Riddle in Hinduism ‘ படிக்க தொடங்கியிருக்கிறேன் முடித்த பிறகு அவரின் இஸ்லாம் பற்றிய விமர்சனத்தை படித்து விட்டு கருத்து கூறுகிறேன்.

பிரிவினை கேட்ட ஜின்னா நீசராம் ஆனால் – I have no quarrel with Mr. Jinnah ‘s two nation theory. We Hindus are a nation by ourselves and it is a historical fact that Hindus and Muslims are two nations. ‘ என்று கூறி ஜின்னாவுக்கு ஒத்து ஊதிய சவர்கார் நேசராம்! வீரராம் (!) (URL: http://www.thehindu.com/2003/02/26/stories/ 2003022603861300.htm ). அம்னீஷியாவா ?.

அனைத்து சீக்கிய குரு பெயர்களும் இந்துப்பெயர்கள்தானாம். தம்பட்டம் அடித்துக்கொள்கிறார் . இருக்கட்டுமே பெயர் இருப்பதால் தங்களை இந்துக்கள் என்றா சீக்கியர்கள் அழைத்துக்கொள்கிறார்கள் ? அவர்களை இந்துக்கள் என்று அழைத்த சங் பரிவாரத்தை அவ்வாறு அழைக்கக்கூடாது என்று கண்டித்தது தெரியாதோ ?

மிகவும் பெருந்தன்மையாக, எனக்கு பூநூல் போட்டு அந்தனராக்குவதற்கு விடுத்த அழைப்புக்கு நன்றி. காலத்திற்கு ஏற்ற நிலைத்தன்மையில்லாமல், ஜெயேந்திரர் போன்ற நடமாடும் தெய்வங்களிலிருந்து – ஜெயலலிதா போன்ற அரசியல் வாதிகளின் கூட்டல் கழித்தல்களுக்கு ஆளாகி மாறிக்கொண்டு இருக்கின்ற இந்து மதத்தின் கொள்கை-கோட்பாடுகள் முதலில் முழுமை பெற்று – இந்து மதம் பூர்த்தி பெற்றதும் (!) எனக்கு சொல்லியனுப்பவும்..

எதிர் வினை இன்னும் தொடரும்…

say_tn@hotmail.com

Series Navigation

author

பிறைநதிபுரத்தான்

பிறைநதிபுரத்தான்

Similar Posts