கடிதம் ஜூன் 17,2004

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

கிருஷ்ணமூர்த்தி கதிரவன்


ரா.சு.சங்கம் பற்றிய….

ரா.சு.சங்கமும் கோட்சேவும்

நாதுராம் கோட்சே என்ற கொலைஞர், ரா.சு.ச அங்கத்தினன் என்பது நாடறிந்த

உண்மை. இந்த உண்மை, அண்மைக் காலங்களில் சில ஊடகங்களில்

மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகிறது. இது முழுச் சோத்தில் பூசினியை மறைப்பதர்க்குச்

சமமாகும். ஹெட்கேவார் என்ற தீவிர மத வெறியர் கண்ட அமைப்பு

ரா.சு.சங்கம். அண்ணல் காந்தி அடிகளை சுட்ட கொலைஞர் நாதுராம் கோட்சேவின்

சகோதரர், கோபால் கோட்சே. காந்தியின் கொலையை திட்டமிட்ட குற்றத்துக்கு

சிறையில் நீண்ட நாள் தண்டனை அனுபவித்தார்.

ரா.சு.ச குடும்பம்

28 சனவரி, 1998 Frontline வார இதழில் கோபால், ‘எங்க குடும்பத்தில்,

சகோதரர் அனைவரும் ரா.சு.சா வின் உறுப்பினர்களாக இருந்தோம்.

சொல்லப்போனால் வீட்டில் வளர்ந்தோம்! என்று சொல்வதைவிட ரா.சு.சா வில்

வளர்ந்தோம்! என்றால் பொருந்தும். நாதுராம் ரா.சு.சா வில் ஒரு ( ‘பவுதிக் கார்யவா ‘)

அறிவார்ந்த தொண்டனாக விளங்கினான். ‘ என்று பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் ஆத்வானி (முன்னாள் துணைப்பிரதமர்), ‘நாதுராமுக்கும் ரா.சு.சா வுக்கும்

தொடர்பே இல்லை! என்கின்றாரே ‘ என்ற வினாவுக்கு, கோபால், ‘அப்படிச் சொல்வது

கோழைத்தனம் ‘ என்றார்.

50 ஆண்டுகளாயும் தொடரும் ரா.சு.சா வின் மத வெறியாட்டம்

காந்தி இறந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அதன் பிறகு

பல கலவரங்கள் ரா.சு.சங்கத்தால் தூண்டப்பட்டு நடந்தேறியுள்ளன. 1)1969 ஆமதாபாத் கலவரம்

(சகமோகம் ரெட்டி அறிக்கை) 2) 1970 பிவாண்டி கலவரம் (மதன் கமிசன் அறிக்கை) 3)

டெல்லிச்சேரி கலவரம் (ஜஸ்டிஸ் வித்தியாத்தில் அறிக்கை) 4) 1979 ஜாம்சத்பூர் கலவரம்

(ஜித்தேந்திர நாராயணன் அறிக்கை) 5) கிருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகள் (

ஜஸ்டிஸ் வேணுகோபால் அறிக்கை) என்று தொடர்ந்து கொண்டே போகும் கலவரங்களும்,

குற்றங்களும் ஓயாமல் இருக்க, 6)பாபர் மசூதி தகர்ப்பும், அதைத் தொடர்ந்த அட்டகாசமும்

என்று இறுதியாக, 7) கோத்ரா, குஜராத் படுகொலையும் நீண்ட பட்டியலில் இடம்

பெறுகின்றது.

குஜராத் (கோத்ரா) கலவரமும் ரா.சு.ச வும்

அமைத்திக்கும், நியாயத்துக்கும் 30 ஆண்டுகளுக்கு மேலாகக் குரல் கொடுத்து வருபவர்

முன்னாள் உச்ச நீதி மன்ற ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயர். அவர் தலைமையில் கோத்ரா கொடுமைகள்

பற்றிய உயர் மட்ட குழு மேமாதம் 2-13 2003 நடத்திய வினவல்களின் முடிவில், ‘Crime

Against Humanity ‘ என்ற தலைப்பில் இரண்டு பெரிய தொகுதிகளாக அறிக்கைகள் வெளியிட்டது.

இதே முடிவுகளை பல இந்திய, மற்றும் வெளிநாட்டு மனித உரிமைக் குழுக்களும் முன்வைத்த

நிலையில், ‘குஜராத் சம்பவம் எதோ திடுதிப்பென நடந்தேறிய நிகழவல்ல!. முஸ்லீம்களுக்கெதிராகத்

மோடி அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று ‘. நாரேந்திர மோடி ஒரு ரா.சு.ச உறுப்பினனும்,

முதல் மந்திரியுமாக இருந்து சட்ட ஒழுங்கை மீறி நடத்திய வன்முறை தான் குஜராத் கலவரம்.

முன்னாள் பிரதம மந்திரி, அட்டல் பெகாரி வாஜ்பே, முன்னாள் உள்துறை மந்திரி லால்

கிசன் ஆத்வானி ஆகிய இருவரும் முன்னாள் ரா.சு.ச உறுப்பினகளே!. மேலும் ‘சங் பரிவார் ‘

என்று சொல்லப்படும் சகோதர இயக்கங்கள் ரா.சு.ச தின் மத வெறிக்கொள்கைகளை

நிறைவேற்றி வருகின்றனர். 1. VHP (விஸ்வ ஹிந்து பரிசத்) 2. BD (பஜ்ரங் தல்) 3.

ஜன சங் (பாரதிய ஜனதா கட்சியின் பழைய பெயர்) 4. ஹிந்து மகாசபா 5. ஹிந்து

முன்னணி இந்த வரிசையில் குறிப்பிடத் தக்க அமைப்புகள்.

ரா.சு.சங்க வழித்தோன்றல்கள்

ரா.சு.சங்கத் தந்தை ஹெகுடேவார் ‘ஒரு தேசப் பற்றாளர் ‘ என்று சான்றுகளும், மேற்கோள்களும்

இல்லாமல் இந்தி மொழியில் ஒரு நூலை எழுதி வெளியிட்டார் முன்னாள் பிரதமர் வாஜ்பே.

கோவை இந்து முன்னணி 17 மார்ச் 1990 நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற ஆத்வானி, ‘

ரா.சு.சங்கம் முன்வைக்கும் கொள்கைகளையும், ரா.சு.சங்கத்தின் சமூக-அரசியல் கண்ணோட்டத்தையும்

மக்களிடையே எடுத்துச் சென்று முன்வைக்கும் நம் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். பா.ஜா.காவில்

உள்ளிருந்து இயங்கிவரும் சுயசேவகர்கள் (ரா.சு.சங்கப் படையினர்கள்), தங்களின் கொள்கைத்

தளம் எது ? என்று நன்குணர்ந்து செயல்பட வேண்டும். மேலும் VHP, சேனா பாரதி, கல்யாண் ஆஷ்ரம் போன்ற அமைப்புகளிடம் நமக்கு உள்ள தொடர்பு ரா.சு.சங்கத்தின் தூண்டு கோலாலானது என்று உணர

வேண்டும் ‘ என்றார். இதற்கும் மேலே வெளிப்படையாக பா.ஜா.கட்சி, காந்தியைக் கொன்ற

கோட்சேவின் ரா.சு.சா வகுத்த வழியைப் பின்பற்றும் கட்சி என்று தாங்களைத் தாங்களே காட்டிக்கொள்ள

முடியுமா ? இந்த உண்மையை மறைப்பதால் ரா.சு.சங்க வாய்த் தொண்டர்கள் தங்களைத்

தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

கிருஷ்ணமூர்த்தி கதிரவன்

Series Navigation

author

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி

Similar Posts